மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய சிமெண்ட் உற்பத்தி நிறுவனமான அல்ட்ராடெக் நிறுவனம் தன்னுடைய முதலீட்டாளர்களுக்கு 70 ரூபாய் டிவிடெண்ட் வழங்குவது என பரிந்துரை செய்துள்ளது. கூடிய விரைவில் நிறுவனத்தின் பொதுக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் டிவிடெண்டுக்கான ஒப்புதல் அளிக்கப்படும் பட்சத்தில், ஃபேஸ் வேல்யூ 10 ரூபாய் கொண்டுள்ள ஒவ்வொரு ஈக்விட்டி பங்குகளுக்கும் 70 ரூபாய் டிவிடெண்ட் ஆக கிடைக்கும்.

கடந்த 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் தன்னுடைய பங்குதாரர்களுக்கு வழங்கக்கூடிய அதிகபட்ச டிவிடெண்ட் தொகையாக இது இருக்கக்கூடும் .கடந்த ஆண்டு 2022 மற்றும் 2023 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் ஒரு ஈக்விட்டி பங்குக்கு 38 ரூபாய் என்ற அளவில் டிவிடெண்ட் வழங்கியது.
அல்ட்ராடெக் நிறுவனம் இதுவரை முதலீட்டாளர்களுக்கு தன்னுடைய லாபத்தில் டிவிடெண்ட் தொகைகளை மட்டுமே வழங்கி வருகிறது.போனஸ் பங்குகளை வழங்குவதோ அல்லது பங்குகளை பிரிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது கிடையாது.
அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பானது ஏப்ரல் 30ஆம் தேதி பங்குச்சந்தையில் 9,971 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது. இந்த பங்கின் மதிப்பு கடந்த ஒரு வார காலத்தில் 4.5 2% என்ற அளவிலும் ஓராண்டு காலத்தில் 32 % என்ற அளவிலும் உயர்ந்துள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் அல்ட்ராடெக் சிமெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 116 % அதிகரித்துள்ளது. அல்ட்ராடெக் சிமெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு மதிப்பை பொறுத்தவரை 52 வார கால உச்சம் 10,526 ரூபாட் என்ற அளவில் 52 வார கால சரிவு 7,434 ரூபாய் என்ற அளவிலும் இருக்கிறது.
இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் 2,87,607 கோடி ரூபாயாக உள்ளது இந்த நிறுவனத்தின் புக் வேல்யூ என்பது 2086.18 ஆகவும் ஃபேஸ் வேல்யூ பத்து ரூபாய் என்று அளவிலும் உள்ளது.
அல்ட்ராடெக் சிமெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் வருவாய் 2023 ஆம் ஆண்டில் 63 ,743 கோடியாக இருந்தது நிறுவனத்தின் லாபம் 5,073 கோடியாக உள்ளது. ஆனால் 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது குறைவு .நிறுவனத்தின் நிகர மதிப்பு 54 ,380 கோடி ரூபாயாக இருக்கிறது.
அல்ட்ராடெக் சிமெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விகிதத்தை பார்க்கும்போது 59. 95% புரமோட்டோர்கள் வசமும், 18.26% வெளிநாட்டு நிறுவனங்கள் வசமும் உள்ளது. 12.22 % மியூச்சுவல் ஃபண்டுகளும், சில்லறை முதலீட்டாளர்கள் 7.54 % கொண்டுள்ளனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications