சென்னை: பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கு நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் ஆகிய பெயர்கள் மிகவும் பரிச்சயமான ஒன்றே. ஆனால், இவை இரண்டும் என்ன என்பதும், இவற்றின் வேறுபாடுகள் என்ன என்பதும் பலருக்குத் தெரிவதில்லை. அதுவும் முதன் முதலாக பங்குச் சந்தைப் பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்பவராக இருந்தால், இந்த பெயர்களுக்கு அர்த்தம் தெரியாமல் குழம்பி விடுவார்கள். இந்தக் கட்டுரையில், நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் பற்றியும், அவை பங்குச் சந்தையைக் கண்காணிப்பதில் வகிக்கும் பங்களிப்பை பற்றியும் காண்போம்.
நமது இந்தியாவில் இரண்டு பெரிய பங்கு சந்தை நிறுவனங்கள் உள்ளன. ஒன்று NSE (National stock exchange) மற்றொன்று BSE (Bombay stock exchange). இந்த இரு நிறுவனங்களின் ஏற்றத்தையும் இறக்கத்தையும் கணிப்பதற்கு நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் எனும் இன்டெக்ஸ் பயன்படுகிறது. BSE யின் இன்டெக்ஸ் சென்செக்ஸ் ,NSE யின் இன்டெக்ஸ் நிஃப்டி. மும்பை பங்குச்சந்தையின் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் இருந்து வெவ்வேறு காரணங்களை அடிப்படையாகக் கொண்டு முதல் 30 நிறுவனங்களின் பங்குகளுக்கான இன்டெக்ஸ் தான் சென்செக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. அதேபோல தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள வெவ்வேறு நிறுவனங்களின் முதல் 50 நிறுவனங்களின் பங்குகளுக்கான இன்டெக்ஸ் தான் நிஃப்டி என்று அழைக்கப்படுகிறது.

BSE மற்றும் NSE: தேசிய பங்குச் சந்தை (NSE) மற்றும் மும்பை பங்குச்சந்தை (BSE) ஆகிய இரண்டும் இந்தியாவின் பெரிய பங்குச் சந்தைகள் ஆகும். BSE ஆசியாவில் உள்ள பழைய பங்குச்சந்தை எனும் சிறப்பை பெற்றுள்ளது. BSE யில் சுமார் 6000 க்கு மேற்பட்ட இந்திய கம்பெனிகளும், NSE யில் சுமார் 2200 க்கு மேற்பட்ட இந்திய கம்பெனிகளும் உள்ளன. இந்த பங்கு சந்தைகளின் பட்டியல்களில் உள்ள பெரிய கம்பெனிகளின் ஏற்ற இறக்கத்தை பொறுத்துத்தான் நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் இன் ஏற்ற இறக்கம் இருக்கும். உதாரணத்திற்கு, NSE யில் உள்ள கம்பெனிகளின் மதிப்பு சரிந்தால் நிஃப்டியும் சரியும். நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் பங்குச் சந்தைகளின் நிலையைக் குறிக்க உதவும் குறியீடுகள்.
நிஃப்டி-இன் கீழ் உள்ள நிறுவனங்கள் வெவ்வேறு துறைகளை சேர்ந்தவை. சான்றாக இரும்பு, சிமெண்ட், தொழில்நுட்பம், வாகன உற்பத்தி, பெட்ரோலியம், மருந்து தயாரிப்பு உள்பட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த நிறுவனம் நிஃப்டியில் உள்ளன.
மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை ஆகிய இரண்டும் மும்பையில் அமைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை 1875-இல் தொடங்கப்பட்டது. தேசிய பங்குச் சந்தை 1992-இல் தொடங்கப்பட்டது. நிஃப்டி 50 குறியீடு 22 ஏப்ரல் 1996 அன்று தொடங்கப்பட்டது.
நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் இரண்டும் பங்குச் சந்தையின் போக்குகளைக் காட்டும் முக்கியமான குறியீடுகள். சென்செக்ஸ் பாரம்பரிய நிறுவனங்களின் செயல்பாட்டைக் காட்டுகிறது, நிஃப்டி முன்னணி நிறுவனங்களின் செயல்பாட்டைக் காட்டுகிறது. இந்த இரு குறியீடுகளையும் கவனிப்பதன் மூலம், பங்குச் சந்தையின் நிலவரத்தைப் பற்றிய தோராயமான யோசனை பெற முடியும். ஆனால், முதலீடு செய்வதற்கு முன் நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.
More From GoodReturns

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

நாளை பங்குச் சந்தை ஏற்றம் காணுமா? சரியுமா? சந்தையை தீர்மானிக்கப் போகும் 3 முக்கிய காரணிகள்?

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

ஒரே நாளில் ரூ.12 லட்சம் கோடி அவுட் – ரத்தக் களறியான பங்குச்சந்தை-முதலீட்டாளர்களுக்கு பேரிடி?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

சிலிண்டர் பிரச்சனைக்கு தீர்வு: அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தடைந்தது மிகப்பெரிய எல்பிஜி கப்பல்!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!



Click it and Unblock the Notifications