பங்குச்சந்தை முதலீடு என்பது தற்போதும் பெரும்பாலான மக்களின் முக்கிய முதலீடாக இருக்கும் வேளையில் முதலீட்டு சந்தையில் ஏற்படும் சிறிய மாற்றமும் முதலீட்டாளர்களின் மனநிலையை பெரிய அளவில் பாதித்து வருகிறது. இப்படியிருக்கும் சூழ்நிலையில் ஒரு சில தரவுகள் நீங்கள் தெரிந்துக்கொண்டால் பங்குச்சந்தையில் ஏற்படும் சிறிய சரிவுகளை கண்டு நீங்கள் கவலைப்படமாட்டீர்கள்.
இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் ஒவ்வொரு முதலீட்டாளரும் நிஃப்டி 500 குறியீட்டின் 30 ஆண்டு தரவுகளைப் புரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது. இந்தத் தரவுகள் ஒரு முக்கியமான விஷயத்தை முதலீட்டாளர்களுக்கு தெரிவிக்கிறது.

பங்குச் சந்தையில் வருமானம் பெற வேண்டுமானால், அதன் ஏற்ற இறக்கங்களைத் தாங்கிக்கொள்ள வேண்டிய மனநிலை முதலில் வேண்டும். இதற்கான காரணமும் உண்டு. நிஃப்டி 500 குறியீட்டின் கடந்த 30 வருட தரவுகளை பார்க்கும் போதும் ஆண்டுக்கு சராசரியாக 22% வீழ்ச்சி (Intra-Year fall) ஏற்பட்டு உள்ளது. இதேபோல் கடந்த 30 ஆண்டு என்ற நீண்ட கால அடிப்படையில் ஆண்டுக்கு 12.5% வருமானத்தை முதலீட்டாளர்கள் கிடைத்துள்ளது.
மேலும் கடந்த 30 ஆண்டுகளில், 77% ஆண்டுகள் நிஃப்டி 500 குறியீடு லாபகரமாக வருமானத்துடன் முடிந்துள்ளன. இந்த ஏற்ற இறக்கங்கள் பங்குச் சந்தையின் இயல்பான பகுதியாகும், இதை முதலீட்டாளர்கள் புரிந்து கொண்டு தங்கள் முதலீட்டு உத்திகளை வடிவமைக்க வேண்டும்.
30 ஆண்டு வரலாற்று திருப்புமுனைகள்:
நிஃப்டி 500 தரவுகள் பார்க்கும் போது மற்றொரு முக்கியமான விஷயமும் தெரிய வந்துள்ளது. இதில் முக்கியமாக பங்குச் சந்தையில் பெரிய வீழ்ச்சிகள் மற்றும் அதிக வருமானங்கள் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றவை என்பதை எடுத்துக்காட்டுகின்றன.
உதாரணமாக, 2008 ஆம் ஆண்டில் நிஃப்டி 500 குறியீடு 64% வரை வீழ்ச்சியடைந்து, அந்த ஆண்டு முடிவில் 57% இழப்புடன் முடிந்தது. மறுபுறம், 1999 மற்றும் 2003 ஆண்டுகளில் நிஃப்டி 500 குறியீடு முறையே 99% மற்றும் 104% என்ற அதிகப்படியான வருமானங்கள் முதலீட்டாளர்களுக்கு கொடுத்துள்ளது.
இதே 1999 மற்றும் 2003 ஆண்டுகளில் 18% மற்றும் 11% வீழ்ச்சி என்ற drawdowns அளவீட்டையும் பதிவு செய்துள்ளது. இந்தத் தரவுகள், முதலீட்டாளர்கள் பெரிய வருமானங்களை எதிர்பார்க்கும்போது, குறிப்பிடத்தக்க வீழ்ச்சிகளையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன.

நீண்ட கால முதலீட்டின் பலன்கள்:
நிஃப்டி 500 குறியீட்டின் 30 ஆண்டு தரவுகளை பார்க்கும் போது, நீண்ட கால முதலீட்டின் மூலம் குறிப்பிடத்தக்க செல்வத்தை உருவாக்க முடியும் என்பதை நிரூபிக்கின்றன. ஒரு முதலீட்டாளர் 30 ஆண்டுகளுக்கு முன்பு 1 ரூபாய் முதலீடு செய்திருந்தால், அது இன்று 34 ரூபாயாக (வரி மற்றும் செலவுகளுக்கு முன்) உயர்ந்திருக்கும். இது ஆண்டுக்கு சராசரியாக 12.5% ஒருங்கிணைந்த வருடாந்திர வளர்ச்சி விகிதத்தை (CAGR) குறிக்கிறது.
சந்தை வீழ்ச்சியை எதிர்கொள்ளும் உத்திகள்:
பங்குச் சந்தையில் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சிகள் ஏற்படுவது இயல்பு. சந்தை 10% முதல் 15% வீழ்ச்சி ஏற்படும் போது முதலீட்டாளர்கள் பதற்றம் அடையாமல் அமைதியாக இருக்க வேண்டும். இதேபோல் நீங்கள் முதலீடு செய்துள்ள நிறுவனங்களின் நிதி நிலை உறுதியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்துக்கொள்ள வேண்டும்.
ஒரு வருடத்தில் ஏற்ற இறக்கங்களை எப்போது வேண்டுமானாலும் இருக்கும், எனவே உங்கள் போர்ட்போலியோவை 30% முதல் 40% வரை வீழ்ச்சிகளைத் தாங்கும் அளவுக்கு உருவாக்க வேண்டும், இதேபோல் இதற்கான ம மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
தவிர்க்க முடியாத சரிவு ஏற்படும் போதும் உங்கள் முதலீட்டு போர்ட்ஃபோலியோவை மறுசீரமைப்பு செய்ய தயங்க வேண்டும். காத்திருப்பது சில நேரத்தில் பலன் அளித்தாலும், சில நேரத்தில் கூடுதல் இழப்பை ஏற்படுத்தும். எனவே சூழ்நிலைக்கு ஏற்ப உங்கள் முதலீட்டு முடிவுகளை எடுப்பது மிகவும் முக்கியம்.
மேலும், குறுகிய கால தேவைகளுக்கு திரவ நிதியை (லிக்விடிட்டி) வைத்திருப்பது, சந்தை வீழ்ச்சியின் போது கட்டாயமாக பங்குகளை விற்க வேண்டிய நிலையைத் தவிர்க்க உதவும்.
முதலீட்டு திட்டத்தின் முக்கியத்துவம்:
பங்குச் சந்தையில் வெற்றிகரமாக முதலீடு செய்ய, முதலீட்டாளர்கள் தங்கள் சொத்து ஒதுக்கீட்டு (அசெட் மிக்ஸ்) திட்டத்தை கவனமாக வடிவமைக்க வேண்டும். சந்தை வீழ்ச்சிகள் உங்கள் முதலீட்டு திட்டத்தை பாதிக்கிறது என்றால், சந்தையில் உள்ள பிரச்சினைகளை விட, உங்களின் முதலீட்டில் உள்ள குறைபாடுகளே முக்கிய காரணமாக இருக்கலாம். எனவே இதை முதலில் சரி செய்வது முக்கியம்.
உதாரணமாக, அதிக ஆபத்தைத் தவிர்க்க விரும்புபவர்கள், பங்குகளுடன் கடன் சார்ந்த முதலீடுகள் (பாண்ட்ஸ்) அல்லது பிற பாதுகாப்பான சொத்துகளை இணைத்து ஒரு பேலென்ஸ்ட் போர்ட்ஃபோலியோவை உருவாக்கலாம்.
இந்த அணுகுமுறையால் லாப அளவீட்டில் சில சரிவுகள் ஏற்பட்டாலும் சந்தை ஏற்ற இறக்கங்களின் தாக்கத்தைக் குறைத்து, நீண்ட கால வருமானத்தை உறுதி செய்ய உதவும். முதலீட்டாளர்கள், இந்த தரவுகளை மனதில் வைத்து, உணர்ச்சிவசப்படாமல் ஒரு ஒழுக்கமான முதலீட்டு உத்தி உருவாக்கிக்கொள்ளுங்கள். அப்புறம் உங்க வீட்டில் பணமழை தான்.
More From GoodReturns

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மத்திய கிழக்கில் நீடிக்கும் போர்: நாளை இந்திய பங்குச்சந்தைகள் என்ன ஆகும்?முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!



Click it and Unblock the Notifications