அமெரிக்க ஃபெட் ரிசர்வ் வங்கி அதன் வட்டி விகிதங்களை 50 அடிப்படை புள்ளிகளாக குறைத்தது. இந்த தாக்கத்தில் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தைகள் இன்று புதிய சாதனைகளை எட்டி வருகிறது. ஆரம்ப வர்த்தகத்திலேயே சிறப்பான ஏற்றத்துடன் லாபமடைந்துள்ளன. அதன்படி, மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் இதுவரை இல்லாத அளவாக 83615 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து வாழ்நாள் புதிய சாதனையை எட்டியுள்ளது. மறுபுறம் நிஃப்டி 25568 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது.
அதேபோல், நிஃப்டி வங்கி இதுவரை இல்லாத அளவாக 53000 புள்ளிகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்த துறையில் உள்ள அனைத்து வங்கிகளும் ஏற்றத்துடன் உள்ளனர். குறிப்பாக ஐடிஎஃப்சி மற்றூம் ஏயூ ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி டாப் கெயினர்களாக உள்ளன. அதேபோல், சென்செக்ஸ் உயர்விற்கு எச்டிஎஃப்சி மற்றும் இன்ஃபோசிஸ் முக்கிய பங்காற்றுகின்றன. ஐடி துறைகளை பொருத்துவரை அனைத்து பங்குகளும் ஏற்றத்துடன் உள்ளன. அதிகபட்சமாக எல்டிஐ மைண்ட்ரீ 2.53% உயர்வுடன் டாப்பில் உள்ளது. அத்துடன் கோஃபோர்ஸ், எல்&டி டெக்னாலஜிஸ், விஃப்ரோ, பெர்சிஸ்டெண்ட்ஸ் சிஸ்டம்ஸ், சோனாடா சாஃப்ட்வேர்ஸ், டெக் மஹிந்திரா உள்ளிட்ட பங்குகளும் ஏற்றம் கண்டுள்ளன

துறைகளை பொருத்துவரை, நிஃப்டியில் உள்ள ஆயில்&கேஸ் துறையை தவிர அனைத்து துறைகளும் ஏற்றத்தில் உள்ளன. அதேபோல் சென்செக்ஸ் துறையில் உள்ள அனைத்து துறைகளும் ஏற்றத்துடன் உள்ளன.
டாப் கெயினர்களாக காட்ஃப்ரேபிலிப்ஸ் பங்குகள் 2.39% உயர்ந்து ரூ.7760 ஆகவும், இன்ஃபோ எட்ஜ் பங்குகள் 3.07% உயர்ந்து ரூ.7966 ஆகவும் விற்கப்படுகின்றன. எரிஸ் லைஃப்சயின்ஸ் மற்றும் சிடிஎஸ் எல் பங்குகளும் ஏற்றத்துடன் உள்ளன. மறுபுறம் பிஎஸ்இ பங்குகள் 4.26% சரிவில் ரூ.3728 ஆகவும், ஹிமாத்ரி ஸ்பெஷாலிட்டி 2.64% சரிவில் ரூ.644 ஆகவும் வர்த்தகமாகிறது.
பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் இன்றைய வர்த்தகத்தில் அதிக கவனம் செலுத்துகிறது. இந்த பங்கு இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில் 4% வீழ்ச்சியடைந்துள்ளது. 3 நாட்களுக்குப் பிறகு, சரிந்தன. தொடர்ந்து மூன்றாவது நாளாக புதன்கிழமையும் பங்குகள் தொடர்ந்து உயர்ந்து, கிட்டத்தட்ட 4% உயர்ந்து ரூ.188.45 என்ற புதிய உச்சத்தை எட்டியது. லாட்டரி முறையின் மூலம் ஒதுக்கப்பட்ட லக்கி ஐபிஓ முதலீட்டாளர்கள், இப்போது 170% அதிக லாபத்தில் பெற்றுள்ளனர். இன்று ஆரம்பத்தில் 3.72% பங்குகள் ரூ.167.20 ஆக விற்பனையாகிறது.
தற்போதைய நிலவரப்படி, காலை 9.40 மணியளவில் ஆரம்ப வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 660 புள்ளிகள் உயர்வில் 83,609 புள்ளிகளாகவும், நிஃப்டி 185 புள்ளிகள் உயர்வில் 25,571 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications