அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் இரு நாடுகளும் ஒரு பொதுவான உடன்பாட்டை எட்டக்கூடும் என்றும் தெரிவித்ததைத் தொடர்ந்து, இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டன.
அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா மற்றும் அமெரிக்கா "இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக தடைகளை நீக்குவதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து நடத்தி வருகின்றன" என்று கூறினார். மேலும், பிரதமர் நரேந்திர மோடியுடன் அடுத்த சில வாரங்களில் பேச ஆவலுடன் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

பிரதமர் மோடியும் டிரம்புடன் பேச ஆவலுடன் இருப்பதாகக் கூறியுள்ளார், "நமது இரு நாட்டு மக்களுக்கும் ஒரு பிரகாசமான, செழிப்பான எதிர்காலத்தைப் பாதுகாக்க நாம் இணைந்து செயல்படுவோம்" என்று பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முதலீட்டாளர்கள் குழப்பம்: இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த நேர்மறையான நிகழ்வுகள், பங்குச் சந்தையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 ஐ உயர்த்தின. மேலும், புதன்கிழமை வர்த்தகத்தில் MCX தங்கத்தின் விலையை அதன் உச்சபட்ச அளவுகளிலிருந்து குறைந்தது. முதலீட்டாளர்களிடையே இடர் எடுக்கும் மனநிலை திரும்புவதை எதிர்பார்க்கின்றனர். இந்த நேரத்தில் பங்குகளில் முதலீடு செய்யலாமா அல்லது தங்கத்தில் முதலீட்டை அதிகரிக்க வேண்டுமா? என்ற குழப்பம் முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
தங்கம் விலை: மத்திய வங்கிகளின் வலுவான தேவை, எக்ஸ்சேஞ்ச்-டிரேடட் ஃபண்ட் (ETF) வரத்து, மற்றும் வட்டி விகித குறைப்பு பற்றிய ஊகங்கள் ஆகியவற்றால் தங்கத்தின் விலை இந்த ஆண்டு இதுவரை 40 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இது தவிர அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் ஜனாதிபதி டிரம்ப்பின் வர்த்தக வரிகளால் உலகப் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம் பற்றிய கவலைகள் காரணமாக தங்கத்தில் முதலீடு அதிகரித்து அதன் விலையும் அதிகரித்துள்ளது.
தங்கம் விலை உயரும்: SMC குளோபல் செக்யூரிட்டிஸ் நிறுவனத்தின் CEO அஜய் கார்க், சமீபத்திய வர்த்தக மோதல்கள் மற்றும் பொருளாதாரக் குழப்பம் பொருளாதார மந்தநிலை பற்றிய அச்சத்தை அதிகரித்துள்ளன. இது தங்கத்திற்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது என்றும் தங்கம் விலையை இது மேலும் உயர்த்தும் என்றும் கூறுகிறார்.
கவர்ச்சிகரமான முதலீடு: டாலர் அல்லாத நாணயங்களை நோக்கிய நகர்வு, அதிகப்படியான சில்லறை மற்றும் ETF தேவை, டாலர் குறியீட்டின் சரிவு ஆகியவை தங்கத்தை புதிய உச்சங்களுக்குக் கொண்டு சென்றுள்ளன என்று கார்க் கூறினார். மத்திய வங்கிகளின் அதிகப்படியான கொள்முதல் தங்கத்தை சில்லறை முதலீட்டாளர்களிடையே மிகவும் விரும்பப்படும் முதலீடாக மாற்றியுள்ளது, பங்குச் சந்தைகளில் உள்ள நிலையற்ற தன்மை இதை மேலும் கவர்ச்சிகரமான முதலீடாக மாற்றியுள்ளது என்கிறார்.
பங்குகளிலிருந்து வெளியேறலாமா?: தங்கத்தின் விலை இந்தியாவில் ரூ.1,15,000 ஆக உயரலாம் என்று சில நிபுணர்கள் நம்புகின்றனர். செபி பதிவுபெற்ற கமாடிட்டி நிபுணர் அனுஜ் குப்தா கூறுகையில், "மத்திய வங்கிகளின் அதிக கொள்முதல், அமெரிக்க பெடரல் வட்டி குறைப்புகள் மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகள் காரணமாக 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் MCX இல் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.1,15,000 ஆக உயரலாம். எனவே பங்குகளில் இருந்து வெளியேறி தங்கம் வாங்கலாம் என பரிந்துரை செய்கிறார்.
தங்கத்திற்கான ஒதுக்கீட்டை அதிகரிக்கலாம்: தங்கம் மற்றும் பங்குகள் என இரண்டிற்கும் இடையே ஒரு நல்ல சமநிலை போர்ட்ஃபோலியோவை பராமரித்தால் ஒன்று சரியும் போது மற்றொன்று உயர்ந்து லாபம் தரும் என கூறுகிறார். தற்போதைய சூழ்நிலையில், மூன்று ஆண்டுகள் வரை இலக்கு கொண்ட குறுகிய கால முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளி போன்ற உலோகங்களில் தங்கள் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று ஹெச்டிஎஃப்சி-இன் காந்தி கூறுகிறார்.
மாறாக, நீண்ட கால முதலீட்டாளர்கள் பங்குச் சந்தைகளில் அதிக முதலீட்டுடன் நன்கு பன்முகப்படுத்தப்பட்ட போர்ட்ஃபோலியோவை பராமரிக்க வேண்டும் மற்றும் தங்கம், வெள்ளி முதலீட்டுக்காக 10-15 சதவீதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

டிரம்ப் அறிவிப்பால் இந்தியாவுக்கு சவால்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்லும் முக்கிய தகவல்..!!

பங்குச்சந்தை பக்கம் தலை வச்சு கூட படுக்க கூடாது!! 6 லட்சம் கோடி அவுட்!! கதறும் முதலீட்டாளர்கள்!!

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!



Click it and Unblock the Notifications