அமெரிக்காவின் சரிவு, இந்தியாவுக்கு ஜாக்பாட்! 60 நிமிடத்தில் ரூ.6 லட்சம் கோடி! சென்செக்ஸ் 1600 புள்ளிகள் உயர்வு

ஏஐ வலையில் இருந்து மீள முடியாத அமெரிக்கப் பங்குச்சந்தை, தொடர்ந்து குறைந்து வரும் கச்சா எண்ணெய் விலை, பொழிவு இழந்த அமெரிக்கப் பத்திர சந்தை, இந்தியச் சந்தையை நோக்கி ஓடி வரும் பன்னாட்டு முதலீட்டாளர்கள், தொடர்ந்து அதிகரித்து வரும் ரூபாய் மதிப்பு ஆகியவை இந்தியச் சந்தைக்குச் சாதகமாக அமைந்திருக்கும் வேளையில் இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ், நிஃப்டி குறியீடு தடாலடியாக உயர்ந்துள்ளது.

இன்று காலை வர்த்தகம் துவக்கம் முதலே சென்செக்ஸ் குறியீடு 1400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 82,520.40 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது, இதேபோல் நிஃப்டி 50 குறியீடு 1 சதவீதத்திற்கு மேல் உயர்ந்து 25,400 புள்ளிகளைத் தொட்டு உள்ளது. இதன் மூலம் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிட்டுள்ள நிறுவனங்களின் சந்தை மதிப்பு 1 மணிநேர வர்த்தகத்தில் ரூ.6 லட்சம் கோடி அதிகரித்துள்ளது.

அமெரிக்காவின் சரிவு, இந்தியாவுக்கு ஜாக்பாட்! 60 நிமிடத்தில் ரூ.6 லட்சம் கோடி! சென்செக்ஸ் 1400 புள்ளிகள் உயர்வு

நேற்று அமெரிக்க வர்த்தக சந்தை மந்தமான வர்த்தகத்தைப் பதிவு செய்த நிலையில், இன்று இந்தியப் பங்குச்சந்தையில் பெரும் முதலீடுகள் உடன் அதிரடியாகத் துவங்கும், அதேபோல் ஒரு நாள் விடுமுறைக்குப் பின்பு துவங்கியிருக்கும் காரணத்தால் சென்செக்ஸ், நிஃப்டி 50 தடாலடியாக உயரும் எனத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நேற்றே கணித்திருந்தது இன்று அப்படியே நடந்துள்ளது.

நேற்றைய அமெரிக்கச் சந்தை வர்த்தகத்தில் நாஸ்டாக் 0.74 சதவீதம், எஸ் & பி 500 0.38 சதவீதம், டாவ் ஜோன்ஸ் 0.3 சதவீதம் வரையில் குறைந்திருந்தது. இதன் எதிரொலியாக அமெரிக்கச் சந்தையில் முதலீடு செய்துள்ள பல முதலீட்டாளர்கள் இந்தியச் சந்தை பக்கம் திரும்பியதன் விளைவாக இன்று சென்செக்ஸ், நிஃப்டி குறியீடு அதிரடியாக உயர்ந்துள்ளது.

Also Read

குறிப்பாக வங்கி நிஃப்டி 1.7 சதவீதமும், நிஃப்டி மிட்கேப் 100, நிஃப்டி ஸ்மால்கேப் 100 ஆகிய குறியீடுகளும் தடாலடியாக 1 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.

பன்னாட்டு முதலீட்டாளர்கள் இந்தியச் சந்தையை நோக்கிய படையெடுத்துள்ள காரணத்தால் துறை வித்தியாசம் இல்லாமல் பெரும்பாலான துறைகள் இன்று அதிரடியாக வளர்ச்சி அடைந்துள்ளது, ஆட்டோமொபைல், பொதுத்துறை வங்கி, FMCG, ஐடி, மெட்டல், ரியல் எஸ்டேட் என அனைத்தும் அதிரடியாக உயர்ந்துள்ளது.

தற்போது இந்தியச் சந்தையில் உருவாகியுள்ள இந்த அதிரடி உயர்வு என்பது பன்னாட்டு முதலீட்டாளர்கள் மூலம் உருவானது, ஏஐ துறையில் நிலையான கொள்கை உருவாகாத வரையில் FPI முதலீட்டாளர்கள் இந்தியச் சந்தையை விட்டு வெளியேறமாட்டார்கள், தொடர்ந்து முதலீட்டைச் செய்வார்கள்.

இந்த முதலீட்டில் அதிகம் பலன் அடையப்போவது லார்ஜ் கேப் பங்குகள் தான், அதன் பின்பு மிட்கேப், ஸ்மால்கேப் பங்குகள்.

Recommended For You

மேலும் டிரம்ப் ஈரான் மீதான ராணுவ தாக்குதல் முடிந்துவிட்டதாக வெளிப்படையாக அமெரிக்க மக்களுக்குச் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்த நிலையில், மீண்டும் ஈரான் போர் வெடிக்கும் என்ற அச்சமில்லை, மேலும் அமெரிக்கா பேச்சுவார்த்தை வாயிலாகவும், வர்த்தகம் - பொருளாதாரத் தடைகள் வாயிலாக ஈரானை முடக்க முயற்சி செய்வதாகத் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+