அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனா,கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்தார். மேலும், அமெரிக்க பொருட்கள் அதிகம் வரி விதிக்கும் நாடுகளுக்கும் அதேபோல் பரஸ்பரி விதிக்கப்போவதாக அதிரடியாக அறிவித்தார். இதனால் சர்வதேச அளவில் வர்த்தக போர் ஏற்படும் என்ற அச்சம் எழுந்தது. அதேசமயம் டிரம்பின் வரி விதிப்பு கொள்கையால் கடந்த மாதம் அந்நாட்டு பங்குச் சந்தைகள் எழுச்சி கண்டன. குறிப்பாக எஸ்&பி 500 இன்டெக்ஸில் இடம் பெற்றுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு புதிய உச்சத்தை எட்டியது. அமெரிக்காவில் உள்ள பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள 500 பெரிய நிறுவனங்களின் செயல்திறனை கண்காணிக்கும் ஒரு பங்குச் சந்தை குறியீடு எஸ்&பி 500 (S&P 500).
ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. எந்த டிரம்பின் கொள்கையால் அந்நாட்டு பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டதோ அதே கொள்கை தற்போது அந்நாட்டு பங்குச் சந்தைகளின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. பொருளாதார மந்தநிலை குறித்த பயத்துடன், டொனால்ட் டிரம்பின் வரி கொள்கை முதலீட்டாளர்களை பயமுறுத்தியுள்ளது. இதனால் காரணமாக, நேற்று அந்நாட்டு பங்குச் சந்தைகள் கடுமையாக அடி வாங்கின. குறிப்பாக எஸ்&பி 500 இன்டெக்ஸில் உள்ள நிறுவனங்களில் 4 லட்சம் கோடி மதிப்பிலான பங்குகளை முதலீட்டாளர்கள் விற்பனை செய்தனர்.

நேற்று எஸ்&பி 500 இன்டெக்ஸ் 2.7 சதவீதம் சரிந்தது. இது இந்த ஆண்டின் இதுவரையிலான காலத்தில் மிகப்பெரிய தினசரி சரிவாகும். நாஸ்டாக் காம்போசிட் 4 சதவீதம் சரிந்தது. வெல்த் என்ஹான்ஸ்மென்ட்டின் மூத்த முதலீட்டு மூலோபாய நிபுணர் அயாகோ யோஷிகா கூறுகையில், நாங்கள் ஒரு பெரிய மனநிலை மாற்றத்தை தெளிவாக கண்டிருக்கிறோம். பயனளித்த பல விஷயங்கள் இப்போது வேலை செய்யவில்லை என்று தெரிவித்தார்.
அமெரிக்க பங்குச் சந்தையில் ஏற்பட்ட பெரிய சரிவின் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 5 மாதங்களாக தொடர் சரிவை சந்தித்து வந்த இந்திய பங்குச் சந்தைகள் இந்த மாதத்தில் முதல் வாரத்தில்தான் ஏற்றம் கண்டது. இது முதலீட்டாளர்களுக்கு, சந்தை இனி சரிவிலிருந்து மீண்டு விடும் என்ற பெரும் நம்பிக்கையை கொடுத்தது. இந்த சூழ்நிலையில், அமெரிக்க பங்குச் சந்தைகள் நேற்று கடும் சரிவை சந்தித்து இருப்பது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. குறிப்பாக சென்செக்ஸ் சுமார் 400 புள்ளிகள் குறைந்தது.
Story written by: Subramanian
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications