வேதாந்தா குழுமம் தனது பங்குதாரர்களுக்கு இந்த ஆண்டிற்கான 5 ஆவது டிவிடெண்ட் தொகை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது - டிவிடெண்ட் தொகை மற்றும் தேதி உள்ளிட்ட விவரங்களை முழுமையாக தெரிந்துக்கொள்ளுங்கள்.
5 ஆவது டிவிடெண்ட்!
வேதாந்தா குழுமம் (Vedanta Group) தனது பங்குதாரர்களுக்கு 5 ஆவது இடைக்கால டிவிடெண்ட் தொகை பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, 2022-23ஆம் நிதியாண்டுக்கு ஒவ்வொரு பங்குக்கும் 20.50 ரூபாய் டிவிடெண்ட் வழங்குவதற்கு வேதாந்தா குழுமம் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
டிவிடெண்ட் Record Date!
டிவிடெண்ட் வழங்குவதற்கான Record date வருகின்ற ஏப்ரல் மாதம் 7 தேதியாக நிர்ணயித்துள்ளது. அதாவது, ஏப்ரல் 7 ஆம் தேதி நிலவரப்படி வேதாந்தா பங்குகளை வைத்திருப்பவர்களுக்கு இடைக்கால டிவிடெண்ட் தொகையாக 20.50 ரூபாய் வழங்கப்படும்.
முக மதிப்பு (Face Value)
இதுகுறித்து வேதாந்தா குழுமம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், ஏப்ரல் 7 ஆம் தேதி மூன்றாவது இடைக்கால டிவிடெண்ட் தொகையாக ஒவ்வொரு பங்குக்கும் 20.50 ரூபாய், அதாவது Face value 1 ரூபாயில் 2050 சதவீதம் ஈவுத்தொகை வழங்குவதற்கு நிர்வாகக் குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது.
ரூ.7,261 கோடி டிவிடெண்ட்!
அதன்படி, வேதாந்தா குழுமம் 5 ஆவது இடைக்கால டிவிடெண்ட் தொகைக்காக சுமார் ரூ.7,261 கோடி ரூபாயை வெளியிடுகிறது. மேலும் சட்டத்தின் அடிப்படையில் குறிப்பிடப்பட்ட காலத்திற்குள் இடைக்கால டிவிடெண்ட் தொகை செலுத்தப்படும் என வேதாந்தா குழுமம் தெரிவித்துள்ளது.
வேதாந்தாவின் டிவிடெண்ட் அறிவிப்புகள்!
வேதாந்தா நிறுவனம் நிதியாண்டு 2022-23 இல் முதல் டிவிடெண்ட் தொகையை ஏப்ரல் 2022 இல் ரூ.31.50 ஆக அறிவித்தது. அதற்காக ரூ.11,710 கோடியை வெளியீடு செய்தது.
அதனையடுத்து ஜூலை 2022 இல் இரண்டாவது டிவிடெண்ட் அறிவிப்பை வெளியிட்டது. அதில் 2 ஆவது டிவிடெண்ட் அறிவிப்பில் பங்குதாரர்களுக்கு ஒரு பங்கிற்கு ரூ.19.50 ஆக டிவிடெண்டை அறிவித்தது. அதற்கு ரூ.7,250 கோடி ஒதுக்கப்பட்டது.
மூன்றாவது டிவிடெண்ட் தொகை குறித்த அறிவிப்பை சென்ற ஆண்டு நவம்பர் 2022 இல் வெளியிட்டது. அதில் ஒரு பங்கிற்கு ரூ.17.50 டிவிடெண்ட் வழங்கப்படும் என அறிவித்தது. டிவிடெண்ட் தொகைக்காக சுமார் 6505 கோடி ரூபாயை நிறுவனம் வெளியிட்டது.
அதனையடுத்து ஜனவரி 2023 இல் நான்காவது இடைக்கால டிவிடெண்ட் தொகையாக அதன் பங்குதாரர்களுக்கு ரூ.12.50 செலுத்தியது. அதற்கு ரூ.4,647 கோடி ஒதுக்கப்பட்டது.
இன்று வேதாந்தா நிறுவனத்தின் பங்கு விலை!
வேதாந்தா நிறுவனத்தின் 5 ஆவது இடைக்கால டிவிடெண்ட் அறிவிப்பை தொடர்ந்து செவ்வாய்க்கிழமை இந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 1.01% உயர்ந்து ரூ.275.50 ஆக உள்ளது.
புதன்கிழமை வர்த்தகத்தில் 0.66 சதவீத உயர்வுடன் 276.00 ரூபாயாக உள்ளது.
முக்கிய அறிவிப்பு!
வேதாந்தா நிறுவனத்தின் முக்கிய பொறுப்புகளில் உள்ள அஜய் கோயல், தலைமை நிதி அதிகாரி (CFO) மற்றும் முக்கிய மேலாளர் பணியாளர் (KMP) பதவிகளிலிருந்து விலகியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளது. விரைவில் நிறுவனத்தின் வாரிசு குறித்து அறிவிப்புகளும் வெளியாகும் என அறிவித்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications