விஜய் கேடியா-வின் லேட்டெஸ்ட் முதலீடு.. 2023ல் மட்டும் 119% உயர்ந்த மல்டிபேக்கர் பங்கு..!!

கடந்த வெள்ளிக்கிழமையன்று இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் நிறைவடைந்தன. இருப்பினும், வாகன துறையை சேர்ந்த ஒரு மல்டிபேக்கர் பங்கின் விலை மட்டும் வர்த்தகத்தின் இடையே 52 வார கால புதிய உச்சத்தை தொட்டது பலரது கவனத்தையும் ஈர்த்தது.

அந்த மல்டிபேக்கர் வாகன நிறுவன பங்கு வேறு எதுவுமில்லை அதுல் ஆட்டோ லிமிடெட் தான். குஜராத்தை சேர்ந்த மூன்று சக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் தான் இந்த அதுல் ஆட்டோ லிமிடெட். இந்நிறுவனம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஆட்டோ ரிக்ஷாக்களை விற்பனை செய்கிறது.

விஜய் கேடியா-வின் லேட்டெஸ்ட் முதலீடு.. 2023ல் மட்டும் 119% உயர்ந்த மல்டிபேக்கர் பங்கு..!!

அதுல் ஆட்டோ லிமிடெட் நிறுவனத்துக்கு 2021-22ம் நிதியாண்டில் ரூ.25 கோடி நஷ்டம் ஏற்பட்டது. இருப்பினும் கடந்த நிதியாண்டில் நஷ்டத்திலிருந்து அதுல் ஆட்டோ லிமிடெட் மீண்டது. கடந்த 2022-23ம் நிதியாண்டில் அதுல் ஆட்டோ லிமிடெட் ரூ.3 கோடி லாபம் பார்த்தது.

இந்நிலையில் கடந்த ஜூன் காலாண்டில் அதுல் ஆட்டோ லிமிடெட் நிறுவனத்துக்கு ரூ.9.41 கோடி நிகர இழப்பு ஏற்பட்டது. அதுல் ஆட்டோ லிமிடெட் நிறுவனத்தின் நிதி முடிவுகள் ஏற்ற இறக்கங்களை கண்டு வரும் போதிலும், கடந்த ஒராண்டில் அதுல் ஆட்டோ லிமிடெட் பங்கு 144 சதவீதம் ஆதாயம் அளித்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் அந்நிறுவன பங்குக்கு பெரிய வரவேற்பு உள்ளது.

பிரபல பங்குச் சந்தை முதலீட்டாளரான விஜய் கேடியா, அதுல் ஆட்டோ லிமிடெட் நிறுவன பங்குகளை வாங்கி குவித்து வருகிறார். கடந்த செப்டம்பர் காலாண்டில் மட்டும் அதுல் ஆட்டோ லிமிடெட் நிறுவனத்தின் 4.50 சதவீத பங்குகள் அல்லது 14.81 லட்சம் பங்குகளை விஜய் கேடியா வாங்கியுள்ளார்.

மேலும் விஜய் கேடியாவுக்கு சொந்தமான கேடியா செக்யூரிடிஸ் பிரைவேட் நிறுவனமும் 4.30 லட்சம் பங்குகளை வாங்கியுள்ளது. இன்றைய நிலவரப்படி, அதுல் ஆட்டோ லிமிடெட் நிறுவனத்தில் விஜய் கேடியா மற்றும் அவரது நிறுவனமும் 58.02 லட்சம் பங்குகளை அல்லது 20.9 சதவீத பங்கினை கொண்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அதுல் ஆட்டோ லிமிடெட் பங்கின் விலை ரூ.639.30ல் முடிவுற்றது. அதன்படி பார்த்தால், விஜய் கேடியாவும் அவரது நிறுவனமும் வைத்துள்ள 58.02 லட்சம் பங்குகளின் மொத்த மதிப்பு ரூ.370.92 கோடியாகும்.

விஜய் கேடியா மட்டுமல்ல வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளரான சொசைட்டி ஜெனரலேவும் அதுல் ஆட்டோ லிமிடெட் நிறுவனத்தின் 1.41 லட்சம் பங்குகளை வாங்கியுள்ளது. பெரிய முதலீட்டாளர்கள் மேலும் மேலும் அதுல் ஆட்டோ லிமிடெட் பங்குகளை வாங்கி குவிப்பது, அந்நிறுவனத்தின் மீதான நல்ல கண்ணோட்டத்தின் அடையாளத்தை வெளிப்படுத்துவது போல் உள்ளது.

Disclaimer: Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+