கடனே இல்லாத நிறுவனம்.. ஆனாலும் பங்குகளை விற்ற விஜய் கேடியா..!

பிரபல பங்குச் சந்தை முதலீட்டாளர்களில் ஒருவர் விஜய் கேடியா. இவர் மொத்தம் 15 நிறுவன பங்குகளில் மொத்தம் ரூ.1,378 கோடி முதலீடு செய்துள்ளார். அதிகபட்சமாக அதுல் ஆட்டோ நிறுவனத்தில் 20 சதவீத பங்குகளை கொண்டுள்ளார்.பொதுவாக சில்லரை முதலீட்டாளர்கள் கேடியாவின் முதலீட்டு முடிவுகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவரது நடவடிக்கைகளை சாத்தியமான சந்தை வாய்ப்புகளின் அறிகுறிகளாக அவர்கள் கருதுகின்றனர்.

இதனால் விஜய் கேடியாவின் எந்தவொரு பரிவர்த்தனையும் (பங்குகளை வாங்குவது அல்லது விற்பது) அதிகம் கவனிக்கப்படுகிறது. அந்த வகையில், விஜய் கேடியா கடந்த மார்ச் காலாண்டில், கடன் இல்லாத ஒரு நிறுவன பங்கில் மேற்கொண்டிருந்த முதலீட்டை குறைத்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடனே இல்லாத நிறுவனம்.. ஆனாலும் பங்குகளை விற்ற விஜய் கேடியா..!

அந்த கடன் இல்லாத நிறுவனம் பிரிசிஷன் கேம்ஷாஃப்ட்ஸ். இந்நிறுவனம் பல்வேறு விதமான கேம்ஷாஃப்ட்ஸ் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. பிரிசிஷன் கேம்ஷாஃப்ஸ் நிறுவனத்துக்கு கடன் எதுவும் கிடையாது. இது போன்ற சாதகமான அம்சங்கள் காணப்படுவதால் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்குரிய பங்காக விளங்குகிறது.

இருப்பினும், பிரிசிஷன் கேம்ஷாஃப்ட்ஸ் பங்கில் மேற்கொண்டிருந்த மூலதனத்தை விஜய் கேடியா குறைத்துள்ளார். 2025 மார்ச் காலாண்டில் பிரிசிஷன் கேம்ஷாஃப்ஸ் நிறுவனத்தில் தனது பங்கு மூலதனத்தை 1.05 சதவீதமாக விஜய் கேடியா குறைத்தார். கடந்த டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தில் 2.10 சதவீத பங்கு மூலதனத்தை அவர் கொண்டு இருந்தார்.

விஜய் கேடியா தனது தனிப்பட்ட பங்குகளை தவிர்த்து, தனது தரகு நிறுவனமான கேடியா செக்யூரிட்டீஸ் வாயிலாகவும் இந்நிறுவனத்தில் 1.05 சதவீத பங்கு மூலதனத்தை பராமரித்து வருகிறார். பிரிசிஷன் கேம்ஷாஃப்ட்ஸ் நிறுவனத்தின் கடந்த டிசம்பர் காலாண்டு முடிவுகள் திருப்திகரமாக இல்லாததால் பங்கு மூலதனத்தை விஜய் கேடியா குறைத்திருக்கலாம் என கூறப்படுகிறது.

2024 டிசம்பர் 11ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே பிரிசிஷன் கேம்ஷாஃப்ஸ் நிறுவன பங்கின் விலை 52 வார புதிய உச்சமான ரூ.382.15ஐ எட்டியது. ஆனால் அதன் பிறகு இப்பங்கின் விலை தொடர்ந்து சரிவு கண்டு வருகிறது. இந்நிறுவனத்தின் கடந்த டிசம்பர் காலாண்டு முடிவுகள் மிகவும் மோசமாக இருந்தது. குறிப்பாக அந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் செயல்பாட்டு லாப வரம்பு 10.95 சதவீதத்திலிருந்து 4.19 சதவீதமாக குறைந்தது. இது அதிகரித்த செலவு அழுத்தங்களையும், செயல்பாட்டு திறனையும் குறைப்பதை குறிக்கிறது.

இதனால் இப்பங்கின் விலை சரிவு காண தொடங்கியது. இந்த ஆண்டில் இதுவரையிலான காலத்தில் இப்பங்கின் விலை 50 சதவீதத்துக்கு மேல் குறைந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 3.44 சதவீதம் உயர்ந்து ரூ.172.80ஆக இருந்தது.

தோனியின் ஆட்டத்தால் கல்லா கட்டும் எல்ஐசி.. CSK-வால் 500 சதவீதம் லாபம் பார்த்த LIC.. எப்படி தெரியுமா..?
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+