பங்குச் சந்தையில் ஒரு பென்னி ஸ்டாக் 2024 ஆம் ஆண்டின் முதல் பத்து வர்த்தக தினங்களில் முதலீட்டாளர்களுக்கு 50 சதவீதம் லாபத்தை கொடுத்துள்ளது. முதலீட்டாளர்களுக்கு குறுகிய காலத்தில் நல்ல லாபத்தை கொடுத்த அந்த பங்கு விகாஸ் லைஃப்கேர் லிமிடெட். இந்நிறுவனம் குறித்து சிறு பார்வை இதோ.
விகாஸ் லைஃப்கேர் லிமிடெட் நிறுவனம் பிளாஸ்டிக், செயற்கை மற்றும் இயற்கை ரப்பருக்கான பாலிமர், ரப்பர் கலவைகள் மற்றும் சேர்மான பொருளின் உற்பத்தியிலும் மற்றும் வர்த்தகத்திலும் ஈடுபட்டு வருகிறது. இந்திய பங்குச் சந்தையின் ஸ்மால்கேப் பங்குகளில் ஒன்று இந்நிறுவன பங்குகள்.

மேலும் இது ரூ.10க்கு கீழ் உள்ள பென்னி ஸ்டாக். இந்நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.1,040 கோடியாகும். இந்த பங்குகளில் முதலீடு செய்து இருந்தவர்களுக்கு 2024ம் ஆண்டு ஒரு பொன்னான ஆண்டாக அமைந்துள்ளது. இந்த ஆண்டில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்துள்ளது.
விகாஸ் லைஃப்கேர் நிறுவனத்தின், துணை நிறுவனமான ஜெனிசிஸ் கேஸ் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் இந்திரபிரஸ்தா கேஸ் இணைந்து ஐஜிஎல் ஜெனிசிஸ் டெக்னாலஜிஸ் லிமிடெட் என்று கூட்டு நிறுவனத்தை தொடங்கியுள்ளது.
இந்நிறுவனம் லோரோ, லோராவான், புளூடூத், என்எப்சி,என்பி-ஐஓடி போன்ற ஐஒடி தொழில்நுட்பங்களுடன் கூடிய டயாபிராம் கேஸ் மீட்டர்களை தயாரிக்கும். விகாஸ் லைஃப்கேர் லிமிடெட் நிறுவனம் கூட்டு வர்த்தக நிறுவனம் தொடங்கப்பட்ட தகவலை கடந்த வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை அமைப்பிடம் தெரிவித்தது.
இந்த தகவலின் எதிரொலியாக கடந்த திங்கட்கிழமையன்று தேசிய பங்குச் சந்தையில் விகாஸ் லைஃப்கேர் லிமிடெட் நிறுவன பங்கு விலை புதிய 52 வார உயர்வான ரூ.7.45ஐ எட்டியது. 2023ம் ஆண்டின் இறுதியில் இப்பங்கின் விலை ரூ.4.95ஆக இருந்தது.
2024ம் ஆண்டில் முதல் 10 வர்த்தக தினங்களில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களின் பணத்தை 50 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 40 சதவீதம் லாபம் கொடுத்துள்ளது. அதேசமயம் கடந்த 6 மாதத்தில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 120 சதவீதம் ஆதாயம் கொடுத்துள்ளது.
அதேசமயம் கடந்த ஓராண்டில் இப்பங்கின் விலை 55 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை ரூ.6.75ஆக இருந்தது. இன்று 0.91 சதவீதம் சரிந்து 6.56 ரூபாயாக உள்ளது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

பங்குச்சந்தை பக்கம் தலை வச்சு கூட படுக்க கூடாது!! 6 லட்சம் கோடி அவுட்!! கதறும் முதலீட்டாளர்கள்!!

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!



Click it and Unblock the Notifications