ஜனவரி மாதத்தின் கடைசி வியாழக்கிழமை என்பதால் இன்று ஜனவரி மாதத்திற்கான ஆர்டர்கள் இன்றும் முடிவடைகிறது, இதன் காரணமாக இன்றைய வர்த்தகத்தில் பங்குச்சந்தை முதலீடு அதிகளவில் குறைந்து மந்தமான வர்த்தகச் சூழ்நிலையைப் பெற்றது.
இன்றைய வர்த்தகத் துவக்கம் முதல் மும்பை சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சரிவுடனேயே வர்த்தகம் செய்யப்பட்டு வந்த நிலையில் 1.30 மணியளவில் 200 புள்ளிகள் வரையிலான சரிவை அடைந்தது.

வியாழக்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 111.20 புள்ளிகள் சரிந்து 36,050.44 புள்ளிகளை அடைந்தது. நிஃப்டி குறியீடு வெறும் 16.35 புள்ளிகள் மட்டுமே சரிந்து 11,069.65 புள்ளிகளை அடைந்தது.
எஸ் அண்ட் பி குறியீட்டில் உள்ள டாப் 30 நிறுவனங்களில் ஐசிஐசிஐ வங்கி, கோல் இந்தியா வங்கி, கோட்டாக் வங்கி, ஆக்சிஸ் வங்கி, எல் அண்ட் டி, டாடா ஸ்டீல் ஆகியவை உயர்வைச் சந்தித்தது.


Click it and Unblock the Notifications