பங்குச் சந்தையில் ஒருவர் நேரடியாக முதலீடு செய்வதை காட்டிலும் மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் வாயிலாக முதலீடு செய்வது சிறந்ததாக கருதப்படுகிறது. ஏனென்றால் மியூச்சுவல் ஃபண்டுகள் நல்ல ஆய்வு செய்து பங்குகளில் முதலீடு செய்கின்றன. இதனால் முதலீட்டாளர்களுக்கு ரிஸ்க் குறைவு. மியூச்சுவல் ஃபண்டுகளில் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும்.
அதற்கு உதாரணமாக நிப்பான் இந்தியா குரோத் ஃபண்டு உள்ளிட்ட 4 மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களை குறிப்பிடலாம். இந்த ஃபண்டுகள் தொடங்கப்பட்டபோது ஒருவர் ரூ.1 லட்சம் முதலீடு செய்து இருந்தால் அது இன்று ரூ.1 கோடிக்கும் அதிகமாக உயர்ந்திருக்கும்.

நிப்பான் இந்தியா குரோத் ஃபண்டு
நிப்பான் இந்தியா நிறுவனம் 1995 அக்டோபரில் மிட் கேப் ஃபண்டான நிப்பான் இந்தியா குரோத் ஃபண்டை அறிமுகம் செய்தது. அதுமுதல் இதுவரையிலான காலத்தில் இந்த ஃபண்டு ஆண்டுக்கு சராசரியாக 22.07 சதவீத வருமானத்தை கொடுத்துள்ளது. அதேசமயம் இதே காலத்தில் மிட் கேப் பிரிவு 17.51 சதவீதம் மட்டுமே ஆதாயம் கொடுத்துள்ளது. இந்த ஃபண்டின் செலவு விகிதம் 1.61 சதவீதமாக உள்ளது.
இந்த ஃபண்டில் குறைந்தபட்ச எஸ்ஐபி தொகை ரூ.500 ஆகவும் மற்றும் குறைந்தபட்ச மொத்த தொகை ரூ.1,000 ஆகவும் உள்ளது. 1995ல் இந்த ஃபண்டு தொடங்கப்பட்ட சமயத்தில் இதில் ஒருவர் ரூ.1 லட்சம் முதலீடு செய்து இருந்தால் அது இன்று ரூ.3.61 கோடியாக வளர்ந்திருக்கும்.
ஃபிராங்க்ளின் இந்தியா பிரைமா ஃபண்டு
1993 அக்டோபரில் ஃபிராங்க்ளின் டெம்பிள்டன் மியூச்சுவல் ஃபண்டு நிறுவனம் மிட் கேப் ஃபண்டான ஃபிராங்க்ளின் இந்தியா பிரைமா ஃபண்டு திட்டத்தை செயல்படுத்தியது.அதுமுதல் இந்த ஃபண்டு ஆண்டுக்கு சராசரியாக 19.16 சதவீத வருமானத்தை கொடுத்துள்ளது. இதே காலத்தில் மிட் கேப் பிரிவு 17.51 சதவீதம் மட்டுமே ஆதாயம் கொடுத்துள்ளது.
இந்த ஃபண்டில் குறைந்தபட்ச எஸ்ஐபி தொகை ரூ.500 ஆகவும் மற்றும் குறைந்தபட்ச மொத்த தொகை ரூ.5,000 ஆகவும் உள்ளது. 1993ல் இந்த ஃபண்டில் ஒருவர் ரூ.1 லட்சம் முதலீடு செய்து இருந்தால் அது இன்று ரூ.2.44 கோடியாக உயர்ந்திருக்கும்.
ஃபிராங்க்ளின் இந்தியா ஃப்ளெக்ஸி கேப் பண்ட்-குரோத்
ஃபிராங்க்ளின் டெம்பிள்டன் மியூச்சுவல் ஃபண்டு நிறுவனம் 1994 செப்டம்பரில் ஃப்ளெக்ஸி கேப் பண்டான ஃபிராங்க்ளின் இந்தியா ஃப்ளெக்ஸி கேப் பண்டு-குரோத்தை ஆரம்பித்தது. அது முதல் இந்த ஃபண்டு ஆண்டுக்கு சராசரியாக 17.79 சதவீதம் வருமானத்தை கொடுத்துள்ளது. இதே காலத்தில் ஃப்ளெக்ஸி கேப் பிரிவின் ஆண்டு சராசரி வருமானம் 14.17 சதவீதமாக இருந்தது.
இந்த ஃபண்டின் செலவு விகிதம் 1.74 சதவீதமாக உள்ளது. இந்த ஃபண்டில் குறைந்தபட்ச எஸ்ஐபி தொகை ரூ.500 ஆகவும் மற்றும் குறைந்தபட்ச மொத்த தொகை ரூ.5,000 ஆகவும் உள்ளது. 1994 செப்டம்பரில் ஃபண்டு தொடங்கப்பட்ட சமயத்தில் இதில் ஒருவர் ரூ.1 லட்சம் முதலீடு செய்து இருந்தால் அது இன்று ரூ.1.48 கோடியாக அதிகரித்து இருக்கும்.
எச்டிஎஃப்சி இஎல்எஸ்எஸ் டேக்ஸ் சேவர் ஃபண்டு
எச்டிஎஃப்சி நிறுவனம் 1996 ஏப்ரலில் வரி சேமிப்பு ஃபண்டான எச்டிஎஃப்சி இஎல்எஸ்எஸ் டேக்ஸ் சேவர் ஃபண்டை அறிமுகம் செய்தது.இந்த ஃபண்டில் குறைந்தபட்ச எஸ்ஐபி தொகை ரூ.500 ஆகவும் மற்றும் குறைந்தபட்ச மொத்த தொகை ரூ.1,000 ஆகவும் உள்ளது. இந்த ஃபண்டு தொடங்கப்பட்டது முதல் ஆண்டுக்கு சராசரியாக 18.18 சதவீதம் வருமானத்தை கொடுத்துள்ளது.
அதேசமயம் இதே காலத்தில் இஎல்எஸ்எஸ் பிரிவு ஆண்டுக்கு 13.94 சதவீதம் மட்டுமே லாபம் கொடுத்துள்ளது. இந்த பண்டின் செலவு விகிதம் 1.67 சதவீதமாக உள்ளது. இந்த ஃபண்டு தொடங்கப்பட்டபோது ஒருவர் இதில் ரூ.1 லட்சம் முதலீடு செய்து இருந்தால் அது இன்று ரூ.1.27 கோடியாக உயர்ந்திருக்கும்.
4 மாதத்தில் 150-270 சதவீதம் வரை லாபம்.. இந்த 5 மல்டிபேக்கர் பங்குகள் உங்களிடம் இருக்கா?
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

EPF முதல் SSY வரை: உங்கள் பணத்திற்கு அதிக லாபம் தரும் சிறந்த முதலீடு எது?

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி



Click it and Unblock the Notifications