15 நிமிடங்களில் ரூ.4 லட்சம் கோடி காலி! ஆட்டம் கண்ட சென்செக்ஸ்.. ரத்தக் களறியான இந்திய பங்குச்சந்தை!

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேலும் குறைக்கும் விதமாக இன்றும் இந்திய பங்குச் சந்தை ஒரு நடுக்கத்தை சந்தித்திருக்கிறது. வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே லாபக் கனவுகள் எல்லாம் தவிடுபொடியாகி, வெறும் 15 நிமிடங்களில் 4 லட்சம் கோடி ரூபாய் இழப்பை முதலீட்டாளர்களுக்கு கொடுத்துள்ளது. சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் சரிய, நிஃப்டி 25,300 புள்ளிகளுக்குக் கீழே சரிந்து காணப்படுகிறது. என்ன நடக்கிறது என்றே தெரியாமல் முதலீட்டாளர்கள் திகைத்து நிற்கும் நிலையில், இந்திய சந்தை மேலும் சரியுமா? அடுத்து என்ன செய்யலாம் என பல கேள்விகள் முதலீட்டாளர்கள் மத்தியில் காணப்படுகிறது.

15 நிமிடங்களில் ரூ.4 லட்சம் கோடி காலி! ஆட்டம் கண்ட சென்செக்ஸ்.. ரத்தக் களறியான இந்திய பங்குச்சந்தை!

என்ன காரணம்?

வாரக் கடைசி, மாத கடைசி என கடைசி நாளில் புராபிட் புக்கிங் காரணமாக முதலீட்டாளர்கள் தொடர்ந்து வெளியேறி வருகிறது. இது பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படவிருக்கும், மத்திய பட்ஜெட் 2026 -ஐ அடுத்து, அதில் எந்த மாதிரியான அறிவிப்புகள் வெளியாகுமோ, அது சந்தையில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துமோ என்ற அச்சம் இருந்து வருகிறது. இந்த சூழலில் தான் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி, முதலீட்டை வெளியேற்றி வருகின்றனர். இதையடுத்து தான் பெஞ்ச்மார்க் குறியீடுகள் சிவப்பு நிறமாக மாறியுள்ளன.

குறிப்பாக சென்செக்ஸ் 625 புள்ளிகள் குறைந்து, 81,941 புள்ளிகளாகவும், நிஃப்டி 50 194 புள்ளிகள் குறைந்து, 25,244 புள்ளிகளாகவும் காணப்படுகிறது. இது முக்கிய லெவலான 25,300 புள்ளிகளுக்கு கீழ் காணப்படுகிறது. சந்தை தொடங்கிய 15 நிமிடங்களுக்குள்ளாக கண்ட இந்த சரிவால், முதலீட்டாளர்கள் 4 லட்சம் கோடி ரூபாய் இழப்பை கண்டுள்ளன. இது சந்தையில் எந்த அளவுக்கு செல்லிங் அழுத்தம் இருக்கிறது என்பதை காட்டுகிறது.

முக்கிய காரணங்கள்!

இதற்கு மிக முக்கிய காரணமாக தாக்கல் செய்யப்பட இருக்கும் பட்ஜெட் ஆக பார்க்கப்படுகிறது. ஏனெனில் பட்ஜெட்டில் வரி குறைப்பு உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் புதிய கொள்கைகள் மற்றும் வரி மாற்றங்கள், கார்ப்பரேட் வருவாய் மீதான அறிவிப்புகள் என்னவாக இருக்கும் என்ற அச்சம் முதலீட்டாளர்களை பாதுகாப்பான இடத்திற்கு ஓட வைத்திருக்கிறது.

மேலும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 91.92 என்ற வரலாற்றுச் சரிவை சந்தித்துள்ளது. இது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (FII) இந்தியச் சந்தையில் இருந்து வெளியேறுவதை காட்டுகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றத்தால் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 70 டாலரை நெருங்கியுள்ளது. இது இந்தியாவின் இறக்குமதி செலவை அதிகரித்து பணவீக்கத்தை உண்டாக்கும் என்பதும் சரிவுக்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக அமெரிக்க சந்தையில் நிலவும் அரசியல் நிச்சயமற்ற தன்மை மற்றும் வட்டி விகிதங்கள் குறித்த குழப்பம் காரணமாக, உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள் ரிஸ்க் எடுக்க தயங்கி பங்குகளை விற்று வருகின்றனர். மேற்கண்ட பல்வேறு காரணிகள் மத்தியில் தான், இன்று காலை வர்த்தகம் தொடங்கிய 15 நிமிடங்களிலேயே சந்தை மோசமான சரிவை காண வழிவகுத்துள்ளது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+