இந்தியா முழுவதும் நடந்த பொது தேர்தல் 2024-ன் வெற்றியாளர் யார் என்பது ஜூன் 4 ஆம் தேதி இறுதி வாக்கு எண்ணிக்கையில் தெரிந்துவிடும். இந்த தேர்தல் முடிவுகள் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது.
சந்தை ஆய்வாளர்களும், முதலீட்டு நிறுவனங்களும் இந்த தேர்தல் முடிவுகள் குறித்து பெரிய அளவில் ஆய்வுகளைச் செய்து தங்களுடைய கருத்துக்களை முன்வைத்து வரும் வேளையில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் பீதியில் உள்ளனர்.

தற்போதைய சந்தை முதலீட்டாளர்களின் கணிப்பைப் பொருத்த வரையில் BJP தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) வெற்றி வாய்ப்பு கூடுதலாக இருப்பதாகக் கூறினாலும், பெரும்பான்மை பெற வேண்டும் என்பதை முக்கிய விஷயமாகக் கூறுகின்றனர். இதற்கு முக்கியமான காரணமும் உண்டு.
இந்த நிலையில், பாஜக வெற்றியைப் பெறவில்லை என்றால் என்ன நடக்கும்? என பல தரகு நிறுவனங்கள் வெவ்வேறு தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் சாத்தியமான பங்குச்சந்தை ரியாக்ஷன்களை ஆய்வு செய்து தங்களது முடிவுகளையும், கருத்துக்களையும் வெளியிட்டு உள்ளனர்.
பாஜக தனிப்பெரும்பான்மை அல்லது 272 இடங்களைத் தக்கவைக்கத் தவறினால், உள்நாட்டுப் பங்குச் சந்தைகளில் கடுமையான சரிவு ஏற்படும் என்பது தான் அனைத்து தரப்பு முதலீட்டாளர்களின் கருத்தாக உள்ளது.
பாஜக 10 ஆண்டுகள் ஆட்சி செய்த நிலையில், மோடி தலைமையிலான ஆட்சி 3வது முறையாக அமையாவிட்டால் இந்தியாவில் அரசியல் ஸ்திரமின்மை பாதித்து, சாத்தியமான கொள்கை மாற்றம் உருவாகும். ஆட்சி மாற்றம் நடக்கும் போது அனைத்து நாடுகளிலும் இதுபோன்ற நிகழ்வு நடப்பது இயல்பு ஆனால் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு இந்த மாற்றம் அவர்களின் முதலீட்டில் பாதிப்பை ஏற்படுத்தும்.
UBS நிறுவனம்: பாஜக தனிப்பெரும்பான்மை அல்லது 272 இடங்களைத் தக்கவைக்கத் தவறினால், அரசியல் ஸ்திரமின்மை பாதித்து, நாட்டின் வர்த்தக சூழல் பாதிக்கப்படும். இதனால் பங்குகளின் மதிப்பில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என தரகு நிறுவனமான UBS எச்சரித்தது.
இது நிதிச் சந்தைகளில் குறுகிய காலத்திற்கு அதிகப்படியான பங்கு விற்பனைக்கு வழிவகுக்கும்.
Nomura: இதை தொடர்ந்து நோமூரா கூறுகையில் பாஜக தனிப்பெரும்பான்மை அல்லது 272 இடங்களைத் தக்கவைக்கத் தவறினால் தொழில்துறைகள், உள்கட்டமைப்பு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் உட்பட, அதிக மதிப்புள்ள உள்நாட்டு வர்த்தக துறைகளின் பங்குகள் அதிகப்படியான பங்கு விற்பனையை எதிர்கொள்ளும் என்று நோமூரா தெரிவித்துள்ளது..
இதேவேளையில் அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் வங்கி, நுகர்வோர் மற்றும் மருந்துத் துறைகள் போன்ற சில துறைகள் சிறப்பாகச் செயல்படக்கூடும்.
Bernstein: இதற்கிடையில் பெர்ன்ஸ்டீன் தனது கணிப்பில், பிஜேபி 240 இடங்களைப் பெற்றால் முதலீட்டாளர்கள் லாபத்தை எதிர்நோக்கி அதிக பங்குகளை விற்கலாம். பிஜேபி கட்சி 240-260 இடங்களை வென்றால் கணிசமான விற்பனை இருக்கும் என்றும் கணித்துள்ளது.
Motilal Oswal : மோதிலால் ஓஸ்வால் பைனான்சியல் சர்வீசஸின் தலைவரும் இணை நிறுவனருமான ராம்தேயோ அகர்வால் கூறுகையில், பொது தேர்தலில் பிஜேபி பெரும்பான்மை பெறவில்லை எனில் அரசியல் தெளிவின்மைக்கு வழிவகுக்கும் எந்தவொரு எதிர்பாராத தேர்தல் முடிவுகளும் கூர்மையான சந்தைத் திருத்தங்களுக்கு வழிவகுக்கும் என்று எச்சரித்தார்.
Ruchir Sharma: சமீபத்திய இந்தியா டுடே கான்க்ளேவ் அமர்வில் முன்னணி முதலீட்டாளரும் எழுத்தாளருமான ருசிர் ஷர்மா, பிஜேபி தனித்து 250 இடங்களுக்குக் குறைவாக வெற்றி பெற்றால், பங்குச் சந்தைகள் "ஒரே நேரத்தில் 10-20% வீழ்ச்சியடையும்" என்றார்.
Prabhudas Lilladher: பிரபல முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனமான பிரபுதாஸ் லில்லாதேரும் இந்த உணர்வை எதிரொலித்து, பிஜேபி-என்டிஏவின் கீழ் உள்கட்டமைப்பு, பாதுகாப்பு, மூலதனப் பொருட்கள், புதிய ஆற்றல் மற்றும் சுற்றுலாவை அதிகரிக்கும் என்று குறிப்பிட்டார். இதில் மாற்றம் இருக்கும் போது இத்துறை அனைத்தும் பாதிக்கும் என தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications