கொரில்லா முதலீடு தெரியுமா உங்களுக்கு..? வடிவேலு கொரில்லா செல் காமெடியில்லை இது..!

பங்குச் சந்தையில் பணம் சம்பாதிக்கப் பல முதலீட்டு யுக்திகள் உள்ளன, அவற்றில் ஒன்றுதான் "கொரில்லா முதலீடு" (Gorilla Investing). இது ஒப்பீட்டளவில் புதிய யுக்தி என்றாலும், நீண்ட கால நோக்கில் லாபம் ஈட்ட உதவும் யுக்தியாகக் கருதப்படுகிறது.

ஒரு தொழில்துறையில் ஆதிக்கம் செலுத்தும், ஆனால் அதேநேரத்தில் முழுமையான மோனோபோலி நிறுவனமாக இருக்க வேண்டிய அவசியமில்லாத ஒரு நிறுவனம் தான் "கொரில்லா" பங்கு. இதைக் கொரில்லா விலங்குடன் ஒப்பிட்டு உருவான சொல்.

கொரில்லா முதலீடு தெரியுமா உங்களுக்கு..? வடிவேலு கொரில்லா செல் காமெடியில்லை இது..!

பொதுவாகக் காட்டில் கொரில்லா மிகவும் வலிமையானது, பல நேரத்தில் சிங்கம், புலி போன்றவற்றையும் எதிர்த்து சண்டை போடக்கூடியது. ஆனால் காட்டுக்கு ராஜா கொரில்லா இல்லை. இதேபோல் கொரில்லா கூட்டம் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வரும், பிற விலங்கின கூட்டம் கொரில்லா-வை தாக்கும் சம்பவம் மிகவும் அரிதானது, இதற்குக் காரணம் அதன் அடிப்படையான வலிமை தான்.

ஒரு கொரில்லா நிறுவனம் தனது தொழில்துறையில் உள்ள போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது அதன் தயாரிப்புகள், விலை அளவீடுகள் மற்றும் சந்தையில் நுகர்வு மீது கட்டுப்பாட்டைச் செலுத்துவதன் மூலம் அதன் ஆதிக்கத்தை அடைகிறது.

இதேபோல் ஒரு துறையில் பல நிறுவனங்கள் இருந்தாலும் இதன் ஆதிக்கம் தனிப்பட்டதாக இருக்கும். போட்டியாளர்கள் இருந்தாலும் அவர்களின் தாக்கம் மிகவும் குறைவாகவே இருக்கும். இப்போது கொரில்லா ஸ்டாக் என்றால் எப்படியிருக்கும் எனப் புரிந்திருக்கும்.

கொரில்லா முதலீட்டின் அடிப்படை: கொரில்லா முதலீடு என்பது நீண்ட காலத்திற்கு, பலமிக்க நிதியியல் அடிப்படை, வளர்ச்சிப் பாதையில் உள்ள நிறுவனங்களின் பங்குகளை வாங்குவது தான். இந்த முதலீட்டு யுக்தியில், முதலீட்டாளர்கள் சந்தையின் ஏற்ற இறக்கங்களில் சிக்கிக் கொள்ளாமல், நிறுவனத்தின் நீண்ட கால வளர்ச்சியில் கவனம் செலுத்தக்கூடிய நிறுவனமாக இருக்கும்.

உதாரணம்: Larsen & Toubro (L&T) நிறுவனம்:

L&T நிறுவனம் கட்டுமானம், உற்பத்தி, நிதி சேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்படும் ஒரு பன்முக நிறுவனமாகும். இந்தியாவின் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் நிறுவனங்களில் இதுவும் ஒன்று. கடந்த சில தசாப்தங்களாக L&T நிறுவனம் நிலையான வளர்ச்சியைக் கண்டுள்ளது.

எனவே, கொரில்லா முதலீட்டு யுக்தியின் படி, L&T போன்ற அடிப்படை பலம் மிக்க, வளர்ச்சிப் பாதையில் உள்ள நிறுவனங்களின் பங்குகளை நீண்ட காலத்திற்கு (5-10 ஆண்டுகள்) வரை வாங்கி வைத்திருப்பது சந்தையில் ஏற்படும் தடுமாற்றத்தைத் தாண்டி லாபம் தரும் முதலீடாக அமையும்.

கொரில்லா முதலீட்டின் நன்மைகள்:

குறைந்த அபாயம்: நீண்ட கால முதலீடாக இருப்பதால், சந்தையின் ஏற்ற இறக்கங்களால் ஏற்படும் அபாயம் குறைவு.

நல்ல லாபம் (Good Returns): அடிப்படை பலம் மிக்க நிறுவனங்களின் பங்குகள் நீண்ட காலத்தில் நல்ல லாபம் தரும் திறன் கொண்டவையாக இருக்கும்.

குறைந்த பராமரிப்பு: பங்குகளை வாங்கி வைத்திருந்தால் போதும், தினசரி அடிப்படையில் சந்தையைக் கண்காணிக்க வேண்டிய அவசியமில்லை.

கொரில்லா முதலீட்டின் தீமைகள் அல்லது பிரச்சனைகள்:

மூலதனம் தேவை: நீண்ட காலத்திற்குப் பங்குகளை வைத்திருக்க வேண்டியிருப்பதால், அதிக அளவு மூலதனம் தேவை.

வாய்ப்புகள் இழப்பு: பணத்தை நீண்ட காலத்திற்கு முதலீடு செய்வதால், மற்ற இடங்களில் முதலீடு செய்து ஈட்டும் வாய்ப்புகளை இழக்க நேரிடும்.

கொரில்லா முதலீடு என்பது நீண்ட கால நோக்கம் கொண்ட முதலீட்டாளர்களுக்கு ஏற்ற ஒரு யுக்தி. இதனால் குறுகிய காலத்திற்குள் பங்குச்சந்தை முதலீட்டில் லாபம் பார்க்க வேண்டும் என்ற திட்டம் கொண்டுள்ளவர்களுக்கு இது பொருந்தாது.

கொரில்லா பங்குகளைத் தேட சிறந்த இடம் நிஃப்டி 500, இதில் குறைந்தது 50 பங்குகளை கண்டுபிடிக்கலாம். ஆனால் நிச்சயம் பல மடங்கு லாபம் கொடுக்கும் பங்குகள் எனப் பார்த்தால் 10-15 மட்டுமே இருக்கும். ஆனால் பெரும்பாலான பங்குகள் லாபத்தைக் கொடுக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+