மும்பை பங்குச்சந்தை vs தேசிய பங்குச்சந்தை: எதில் வர்த்தகம் செய்யலாம்?

இந்தியாவில் மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தை என இரண்டு பங்குச் சந்தைகள் இருக்கின்றன. இவற்றுக்கு இடையிலான வித்தியாசங்கள் என்னென்ன என்பதை இந்த கட்டுரையில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

முதலில் பங்குச்சந்தை என்பது முதலீட்டாளர்கள் அல்லது வர்த்தகர்கள் இடையே தரகர்களின் உதவியோடு பங்குகளை வர்த்தகம் செய்யக்கூடிய ஒரு சந்தையாகும். இந்தியாவில் பிஎஸ்இ(BSE – BOMBAY STOCK EXCHANGE) மற்றும் என்எஸ்இ(NSE – NATIONAL STOCK EXCHANGE) ஆகியவை முன்னணி பங்குச் சந்தைகளாக இருக்கின்றன.

மும்பை பங்குச்சந்தை vs தேசிய பங்குச்சந்தை: எதில் வர்த்தகம் செய்யலாம்?

மும்பை பங்குச்சந்தை: பிஎஸ்இ என அழைக்கப்படும் மும்பை பங்குச்சந்தை, மும்பையின் தலால் தெருவில் அமைந்துள்ளது . ஆசியாவிலேயே மிக பழமையான மற்றும் முதல் பங்கு வர்த்தக சந்தை இது.1875 ஆம் ஆண்டு முதன் முதலில் இந்த பங்குச்சந்தை நிறுவப்பட்டது.

இதன் இயற்பெயர் தி நேட்டிவ் ஷேர் அண்ட் ஸ்டாக் ப்ரோக்கர் அசோசியேசன் (The Native Share & Stock Brokers Association.) 1986 ஆம் ஆண்டு மும்பை பங்குச் சந்தையில் முதன்முறையாக ஈக்விட்டி குறியீடான சென்செக்ஸ் என்பது அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது மும்பை பங்கு சந்தையில் பத்துக்கும் மேற்பட்ட துறைகளில் செயல்படும் சிறந்த 30 வர்த்தக நிறுவனங்களை அடையாளம் காண்பதற்காக இந்த குறியீடு அறிமுகம் செய்யப்பட்டது.

தற்போது சென்செக்ஸ் மட்டும் இல்லாமல் மும்பை பங்குச்சந்தையில் BSE 100, BSE 200, BSE 500, BSE MIDCAP, BSE SMLCAP, BSE PSU, BSE Auto, BSE Pharma, BSE FMCG, and BSE Metal ஆகிய பல்வேறு குறியீடுகள் உள்ளன. மும்பை பங்குச்சந்தையின் மொத்த சந்தை மூலதனம் 4,43,45,820 கோடி ரூபாயாக இருக்கிறது. சர்வதேச அளவில் மிகவும் மதிப்பு வாய்ந்த முதல் 10 பங்குச் சந்தைகளில் மும்பை பங்குச்சந்தைக்கும் இடம் உள்ளது.

தேசிய பங்குச் சந்தை: மும்பை பங்குச்சந்தையுடன் ஒப்பீடு செய்யும் போது தேசிய பங்குச் சந்தையின் வயது குறைவானது. ஏனெனில் தேசிய பங்குச்சந்தை 1992 ஆம் ஆண்டு விக்ரம் நிமாயே என்பவரால் நிறுவப்பட்டது. 1993 ஆம் ஆண்டு இது பங்குச்சந்தையாக செபியால் அங்கீகரிக்கப்பட்டது. 1994 ஆம் ஆண்டில் இருந்து இது செயல்பட்டு வருகிறது. 1995 முதல் 96 ஆம் ஆண்டில் தேசிய பங்கு சந்தை முதன்முறையாக நிஃப்ட்டி 50 இன்டெக்ஸ் என்ற குறியீட்டை அறிமுகம் செய்தது.

நிஃப்டி குறியீட்டினை பொறுத்தவரை தேசிய பங்கு சந்தையில் வர்த்தகம் செய்யக்கூடிய முதல் 50 நிறுவனங்களின் குறியீடு ஆகும். தற்போது தேசிய பங்கு சந்தையில் நிஃப்ட்டியை தவிர்த்து Nifty Next50, Nifty500, Nifty Midcap150, Nifty Smallcap250 and Nifty MidSmallcap 400 ஆகிய குறியீடுகள் உள்ள. மும்பை பங்குச்சந்தையின் பெஞ்ச் மார்க் குறியீடு சென்செக்ஸ் 30, தேசிய பங்குச்சந்தையின் பெஞ்ச் மார்க் குறியீடு நிஃப்டி 50 ஆகும்.மும்பை பங்குச்சந்தையில் 7400 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன, தேசிய பங்கு சந்தையில் 1790 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

இரண்டுமே பங்கு வர்த்தகம் செய்வதற்கு சிறந்த சந்தைகள் ஆகும். ஏனெனில் பெரும்பாலான நிறுவனங்கள் இரண்டிலுமே இருக்கின்றன. குறிப்பிட்ட சில ஸ்மால் கேப் நிறுவனங்கள் ஏதேனும் ஒரு பங்குச்சந்தையில் மட்டுமே கிடைக்கும். அனுபவம், சந்தை மூலதனம் ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது மும்பை பங்குச்சந்தையே முன்னிலை பெறுகிறது.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+