ஈரானின் எண்ணெய் கிணறுகள் தகர்க்கப்படுமா?டிரம்ப் எச்சரிக்கையால் என்னவாகுமோ?இந்தியாவுக்கு பாதிப்பா?

உலக அரசியலின் கணிக்கவே முடியாத நாயகன் ஆன டொனால்ட் டிரம்ப், இப்போது ஈரான் மீது குறி வைத்திருப்பது வெறும் ஏவுகணை தாக்குதல்கள் மட்டுமல்ல. ஒட்டுமொத்த உலகத்தின் எரிசக்தி மையத்தை தகர்ப்பது போன்று. ஈரானின் எண்ணெய் கிணறுகளை தகர்ப்போம் என டிரம்ப் விடுத்துள்ள ஒற்றை எச்சரிக்கை, வளைகுடா நாடுகளில் போர் மேகங்களை சூழ்ந்துள்ளதையே காட்டுகிறது. இதனால் சர்வதேச இறக்குமதியாளர்களும், முதலீட்டாளர்களையும் தூக்கமில்லாமல் செய்துள்ளது.

ஏற்கனவே உச்சத்தில் இருந்து கொண்டிருக்கும் கச்சா எண்ணெய் விலை இன்னும் ராக்கெட் வேகத்தில் உயருமா? பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலை மீண்டும் புதிய உச்சத்தை தொடுமா? எல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் பாக்கெட்டில் இருக்கும் பணத்தையும், சமையலறை பட்ஜெட்டையும் இந்த மோதல் எப்படி பாதிக்க போகிறது? அமெரிக்கா - ஈரான் இடையிலான இந்த மோதல் இந்தியாவின் பங்குச் சந்தை முதல் பெட்ரோல் பங்க் வரை ஏற்படுத்தப்போகும் அதிர்வுகளை பார்ப்போம்.

ஈரானின் எண்ணெய் கிணறுகள் தகர்க்கப்படுமா?டிரம்ப் எச்சரிக்கையால் என்னவாகுமோ?இந்தியாவுக்கு பாதிப்பா?

ஈரானின் முக்கிய எண்ணெய் மையமான கார்க் தீவில் (Kharg Island) உள்ள ராணுவ இலக்குகளை அமெரிக்கா வெள்ளிக்கிழமை அழித்துள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். மேற்கொண்டு ஹார்மூஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தை தடுக்கும் ஈரானின் நடவடிக்கைகள் தொடர்ந்தால், அந்நாட்டின் எண்ணெய் உட்கட்டமைப்புகள் மீது மேலும் தாக்குதல் நடத்தப்படும் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.

ஈரானின் 90% எண்ணெய் ஏற்றுமதி இந்த கார்க் தீவு வழியாகவே நடைபெறுகிறது. போர் தொடங்குவதற்கு முன்பு, இங்கிருந்து ஒரு நாளைக்கு சுமார் 1.1 மில்லியன் முதல் 1.5 மில்லியன் பேரல்கள் வரை எண்ணெய் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read

இந்த கார்க் தீவில் பதற்றம் அதிகரித்தால், திங்கட்கிழமை சந்தை தொடங்கும் போது அதன் எதிரொலி மிக மோசமானதாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஈரானின் எண்ணெய் உள்கட்டமைப்பு தாக்கப்பட்டால், கச்சா எண்ணெய் விலை ராக்கெட் வேகத்தில் உயரலாம். இது இந்திய ரூபாய் மதிப்பு மற்றும் பங்குச் சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தலாம். இருப்பினும், ஐக்கிய அரபு அமீரகத்தில் தேவை குறைந்துள்ளதால், தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் பெரிய மாற்றமின்றி அல்லது சிறிய உயர்வை மட்டும் சந்திக்க வாய்ப்புள்ளது.

குறுகிய காலத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலையானது சைடுவேயாக இருக்கும். அதிக ஏற்ற இறக்கம் இருக்கும். ஆனால் நீண்ட கால அடிப்படை அப்படியில்லை. இருப்பினும் சமீபத்திய வாரங்களாக போர் பிரச்சனைகளுக்கு மத்தியில் தங்கம், வெள்ளி விலையானது பெரிய மாற்றம் ஏதும் காணவில்லை. இது வலுவான டாலர், பத்திர வருமானம் உள்ளிட்ட காரணிகள், தங்கம் விலையை அதிக ஏற்றம் காண விடவில்லை எனலாம். அதோடு உலகின் தங்கம் மற்றும் வெள்ளி நுகர்வில் சுமார் 20% ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து தான் பெறப்படுகிறது. ஆனால் அங்கும் விலை உச்சத்தில் இருப்பதால் தேவை குறைந்துள்ளது. இதுவும் விலை சற்று அழுத்தத்தில் இருக்க காரணமாக பார்க்கப்படுகிறது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+