பங்குச்சந்தை சரிவு நீடிக்குமா? -நிபுணர்களின் கருத்து என்ன?

மும்பை: நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கிய நிலையில் பாரதி ஜனதா கட்சி அருதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்ற தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பொய்யாகியுள்ளன.

ஆட்சி அமைப்பதற்கான எண்களை பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் கூட்டணி பெற்றிருந்தாலும் இதற்கு முன்பு எதிர்பார்த்த எண்ணிக்கையில் அவர்கள் வெற்றி பெறவில்லை.

பங்குச்சந்தை சரிவு நீடிக்குமா? -நிபுணர்களின் கருத்து என்ன?


இதன் காரணமாக பங்குச் சந்தையில் கடுமையான சரிவு ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான பணத்தை முதலீட்டாளர்கள் இழந்துள்ளனர். இதனிடையே இந்த நிலை நீடிக்குமா என்ற கேள்வி முதலீட்டாளர்களுக்கு எழுந்துள்ளது .

Avendus Capital Alternate Strategies நிறுவனத்தின் தலைவர் நந்திக் மாலிக் Money Control தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் பாரதிய ஜனதா கட்சி மட்டும் 240 உறுப்பினர்களுக்கும் கீழ் செல்லும் பட்சத்தில் பங்குச்சந்தையானது தற்போதுள்ள சரிவிலிருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்பு இல்லை, ஆனால் தற்போது ஆட்சி அமைப்பதற்கு தேவையான எண்கள் பாரத ஜனதாவின் கைவசம் இருக்கின்றன என கூறியுள்ளார்.

வெளிநாட்டு நிறுவனங்கள் எப்படி இதற்கு எதிர்வினை ஆற்றப் போகின்றன என்பதை பொறுத்துதான் பங்குச்சந்தையின் போக்கை நிர்ணயம் செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய எண்ணிக்கையில் வெற்றி பெறாமல் போகும் பட்சத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து தங்கள் வசம் இருக்கும் பங்குகளை விற்பனை செய்யும். இதன் காரணமாக பங்குச்சந்தையானது அவ்வளவு விரைவாக பழைய நிலைக்கு திரும்பி வராது என நந்திக் மாலிக் தெரிவித்துள்ளார்.

தற்போது இரண்டு நிகழ்வுகள் சர்வதேச பங்குச்சந்தையில் நிகழ்ந்து வருகின்றன. ஒன்று மதிப்பீடுகள் அடிப்படையில் சீன பங்குச் சந்தை தற்போது முதலீட்டாளர்களை ஈர்க்கக் கூடியதாக அமைந்துள்ளது. அதே நேரத்தில் இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்கள் எதிர்பார்த்த பெரும்பான்மை வெற்றி என்பது பாஜகவுக்கு கிடைக்கவில்லை.

எனவே இந்த சூழல் காரணமாக வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள தங்கள் வசம் உள்ள பங்குகளை விற்பனை செய்துவிட்டு சீனாவை நோக்கி நகர்ந்து வருகின்றன என சுட்டிக் காட்டியுள்ளார் .


ஒருவேளை பாரதிய ஜனதா கட்சி 350 உறுப்பினர்களுக்கு மேல் வெற்றி பெற்றிருந்தால் சந்தையின் போக்கே தலைகீழாக மாறி இருக்கும் என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுவாக இதுபோல ஒரு குறிப்பிட்ட கட்சி அருதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்காமல், கூட்டணியுடன் ஆட்சி அமைக்கும் பட்சத்தில் வெளிநாட்டு நிறுவனங்களும் சரி, முதலீட்டாளர்களும் தற்போது இந்தியாவின் அரசியல் ஸ்திரத்தன்மை நிலையாக இருக்குமா என்பதை ஆய்வு செய்வார்கள்.

இரண்டாவதாக ஏற்கனவே அரசு கொண்டுவந்துள்ள கொள்கைகள் தொடருமா என்ற ஒரு சந்தேகம் எழும். இந்த அரசினால் எந்த ஒரு முடிவையும் உறுதிப்பட எடுக்க முடியுமா அல்லது கூட்டணி கட்சிகள் தலையீட்டின் காரணமாக ஒரு நிலையான முடிவெடுக்க முடியாத ஒரு அரசாங்கமாக செயல்பட போகிறதா என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை பொறுத்துதான் வெளிநாட்டு நிறுவனங்களும் முதலீட்டாளர்களும் மீண்டும் இந்திய பங்குச் சந்தையை நோக்கி முன்வருவது குறித்து முடிவெடுப்பார்கள் என மாலிக் கூறியுள்ளார்.

தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கியதில் இருந்தே இந்திய பங்குச் சந்தைகள் சரிவு பாதையிலேயே சென்று கொண்டிருக்கின்றன. அனைத்து பொது நிறுவன பங்குகளும் 10 முதல் 15 சதவீதம் வரை சரிந்துள்ளன.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் குறிப்பிட்ட எண்ணிக்கைகளை பாரதிய ஜனதா பெறவில்லை என்ற ஒரு ஏமாற்றமும் அதிருப்தியும் தான் முதலீட்டாளர்களை இவ்வாறு செயல்பட வைக்கிறது. அதுவே பங்குச்சந்தை சரிவடைவதற்கு ஒரு காரணமாக அமைந்துவிட்டது என ஜியோஜித் ஃபைனான்சியல் சர்வீசஸ் (Geojit financial services)நிறுவனத்தின் தலைவர் வி கே விஜயகுமார் கூறியுள்ளார்.

பங்குச்சந்தை காலை முதலே (ஜூன் 4) சரிவிலேயே இருந்து வருகிறது. பிற்பகல் 2:15 மணி அளவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு சென்செக்ஸ் கிட்டத்தட்ட 5% அதாவது 4,000 புள்ளிகள் சரிவடைந்து வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டென் நிப்டி 1300 புள்ளிகள் சரிவடைந்திருந்தது.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+