இந்திய ஜிடிபி 4 டிரில்லியன் டாலர்களை எட்டுவதற்கு முன்னதாகவே, இந்திய பங்குச் சந்தை புதன்கிழமை (நவம்பர் 29) அதன் மொத்த சந்தை மதிப்பு 4 டிரில்லியன் டாலர் அளவீட்டை எட்டி சர்வதேச அளவில் புதிய அங்கிகாரத்தைக் கொடுத்துள்ளது.
இந்திய பங்குச்சந்தை மதிப்பு மே 2021-ல் 3 டிரில்லியன் டாலர் அளவீட்டை தொட்ட நிலையில் வெறும் 2.5 வருடத்தில் 1 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பீடு அதிகரித்து வியக்க வைத்தது. இந்த ஒரு டிரில்லியன் டாலர் வளர்ச்சியில் எந்தத் துறை, எந்த நிறுவனம் அதிகப் பங்கீட்டை கொண்டுள்ளது என்றால் அதிர்ச்சி அடைவீர்கள்.

4 டிரில்லியன் டாலர் மைல்கல்லைக் கடக்க 2 ஆண்டுகளில் 1 டிரில்லியன் டாலர் சந்தை மூலதனத்தைச் சேர்க்க, நிதிச் சேவைகள் மற்றும் மூலதனப் பொருட்கள் ஆகியவை மிகப்பெரிய பங்களிப்புக் கொடுத்த துறைகளாகும்.
1 டிரில்லயன் டாலர் சந்தை மூலதனத்தில் டாப் 20 நிறுவனங்கள் 36.5% பங்களிப்பையும், டாப் 50 நிறுவனங்கள் மொத்தமாக 56.7% பங்கீட்டை கொண்டு உள்ளது. அதாவது 1 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டில் 567 பில்லியன் டாலர் சந்தை மதிப்பு உயர டாப் 50 நிறுவனங்கள் மட்டுமே காரணம்.
இதில் ஐடிசி 32.98 பில்லியன் டாலரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 32.85 பில்லியன் டாலரும், பார்தி ஏர்டெல் 30.71 பில்லியன் டாலரும், எல் அண்ட் டி 28 பில்லியன் டாலரும், ஐசிஐசிஐ வங்கி 22.39 பில்லியன் டாலரும், அதானி பவர் 21.47 பில்லியன் டாலரும், அதானி எண்டர்பிரைசர்ஸ் 20.65 பில்லியன் டாலரும், டைட்டன் 19.41 பில்லியன் டாலரும், என்டிபிசி 18 பில்லியன் டாலரும், HAL 16.84 பில்லியன் டாலர் பங்கீட்டை கொடுத்துள்ளது.
இதுவே துறைவாரியாகப் பார்க்கும் போது நிதியியல் சேவைத் துறை 178.08 பில்லியன் டாலர் சந்தை மூலதனத்தை உருவாக்கி 1 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டில் பெரும் பங்கீட்டைக் கொடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து கேப்பிடல் கூட்ஸ் 145.18 பில்லியன் டாலரும், ஆட்டோமொபைல் மற்றும் உதிரிப்பாகங்கள் துறை 81.99 பில்லியன் டாலரும், FMCG துறை 73.11 பில்லியன் டாலரும், மின்சாரம் 69.16 பில்லியன் டாலர் பங்கீட்டையும் கொடுத்துள்ளது.
இந்தத் தடாலடி உயர்வுக்கு ஐபிஓ வடிவில் புதிய நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டதும் முக்கியக் காரணம் என்பதை மறுக்க முடியாது.


Click it and Unblock the Notifications