டாடா கெமிக்கல்ஸை ஓரங்கட்டிய 2 பங்குகள்! மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் செய்த அதிரடி முதலீடு!

பங்குச் சந்தையில் கெமிக்கல் செக்டார் என்றாலே லாபகரமான ஒன்று என்ற நிலையில், இதில் டாடா கெமிக்கல்ஸ் போன்ற பிக் பிளேயர்ஸ்-க்கு மத்தியில், சந்தையில் இருக்கும் இருக்கும் பெரிய மியூச்சுவல் ஃபண்ட் பிளேயர்ஸான எஸ்பிஐ மற்றும் பந்தன் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், இப்போ டாடா கெமிக்கல்ஸ் -ஐ விட வேற ரெண்டு ஸ்பெஷாலிட்டி கெமிக்கல் பங்குகள் மேல தங்களோட மொத்த பார்வையையும் திருப்பியிருக்காங்க. யாரும் கவனிக்காத நேரத்தில், அமைதியா அள்ளிப் போடணும் அப்படின்னு சொல்ற மாதிரி, இந்த ரெண்டு பங்குகளையும் அந்த நிறுவனங்கள் ஏன் இப்போ குறிவைக்கிறாங்க? அப்பங்குகள் என்னென்ன? போர்ட்ஃபோலியோவில் சேர்க்கலாமா? அவற்றின் நிலவரம் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

உலகளாவிய கெமிக்கல் சந்தையானது தற்போது பல்வேறு சவால்களை சந்தித்து வரும் சூழலில், குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் தேவை குறைந்துள்ள நிலையில், உற்பத்தி அதிகமாகியுள்ளது.

டாடா கெமிக்கல்ஸை ஓரங்கட்டிய 2 பங்குகள்! மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் செய்த அதிரடி முதலீடு!

கெமிக்கல் உற்பத்தியில் முன்னணி நாடாக இருந்து வரும் சீனா, 2025ன் முதல் பாதியில் தனது உற்பத்தியை 8% அதிகரித்தது. ஏற்கனவே சந்தையில் தேவை குறைவாக இருந்து வரும் சூழலில், சீனாவின் அதிக உற்பத்தி உலக அளவில் கெமிக்கல் விலையை மேலும் வீழ்ச்சியடைய வழிவகுத்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த கெமிக்கல் சந்தையும் சிக்கலை எதிர்கொண்டுள்ளது. இருப்பினும் ஸ்பெஷாலிட்டி கெமிக்கல் பிரிவு மட்டும் சற்று நிலையான வளர்ச்சி கண்டு வருகிறது. ஏனெனில் மருந்தகம், விவசாய இரசாயனங்கள், பலதரப்பட்ட உற்பத்தி துறைகளில் தேவை அதிகரித்துள்ளதால், இந்த பிரிவில் நிலையான வளர்ச்சி கண்டு வருகின்றன. இதனால் தான் பார்க்க இருக்கும் இரு நிறுவனங்கள் கடும் சவால்கள் மத்தியில் ஓரளவு தங்களை நிலை நிறுத்திக் கொண்டுள்ளன.

இந்திய சந்தையை எடுத்துக் கொண்டால் அது புதிய உச்சத்தை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்தியா சாதாரண கெமிக்கல் உற்பத்தியில் இருந்து ஸ்பெஷாலிட்டி கெமிக்கல் உற்பத்தியை நோக்கி வேகமான நகர்ந்து வருகிறது. மார்ச் 2025 நிலவரப்படி, இந்தியாவின் கெமிக்கல் சந்தையில் 47% ஸ்பெஷாலிட்டி கெமிக்கல் பிரிவானது இடம் பிடித்துள்ளது. இது வரும் 2030ம் ஆண்டு வரை ஆண்டுக்கு 11% அளவில் வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இந்திய பங்குச் சந்தையை சார்ந்த, பிரிவி ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ் (Privi Speciality Chemicals), ஸ்டைரினிக்ஸ் பெர்ஃபார்மன்ஸ் மெட்டீரியல்ஸ் லிமிடெட் (Styrenix Performance Materials Limited) பங்குகள் கவனத்தில் கொள்ள வேண்டியதாக பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு நிறுவனங்களுமே ஸ்பெஷாலிட்டி கெமிக்கல் பிரிவில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இது உலக நாடுகளுக்கு தேவைப்படும் தரமான பொருட்களை வழங்கி வருகின்றன.

பிரிவி ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ் நிறுவனமானது நறுமணப் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ஒரு முன்னணி இந்திய நிறுவனமாகும். இது வாசனை திரவியங்கள் மற்றும் நறுமணப் பொருட்களுக்கான மூலப்பொருட்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் தனது மூலப்பொருட்களை சொந்தமாகவே கையாளும் வசதியை பெற்றுள்ளதால், உலகளாவிய விலை மாற்றங்கள் இவர்களை பெரிய அளவில் பாதிப்பதில்லை. மேலும் நுகர்வோர் பொருட்கள் (FMCG) மற்றும் தனிநபர் பராமரிப்பு துறைகளில் தேவை அதிகரித்து வருவதால், அதன் லாபம் அதிகரிக்க காரணமாக அமையலாம்.
பங்குச் சந்தை ரிஸ்க் பயமா? லாபத்திற்கு கியாரண்டி தரும் Bonds - முதலீடு செய்வது எப்படி?
ஸ்டைரினிக்ஸ் பெர்ஃபார்மன்ஸ் மெட்டீரியல்ஸ் நிறுவனத்தை பொறுத்த வரையில், இது பிளாஸ்டிக் மற்றும் ஸ்பெஷாலிட்டி பாலிமர் பிரிவில் இயங்கும் ஒரு தனித்துவமான நிறுவனமாகும். இது ஏபிஎஸ் (ABS) மற்றும் சான் (SAN) போன்ற உயர்தர பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கிறது. இவை ஆட்டோமொபைல், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறைகளில் தவிர்க்க முடியாதவையாகும்.

இந்தியா இதுவரை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்த பல ஸ்பெஷாலிட்டி பிளாஸ்டிக் பொருட்களை, மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்நிறுவனம் உள்நாட்டிலேயே தயாரித்து வருகிரது. மேலும் கடனில்லாத அல்லது மிகக் குறைந்த கடனை தன்வசம் கொண்டுள்ளது. மேலும், முதலீட்டாளர்களுக்கு தொடர்ந்து டிவிடெண்ட் வழங்குவதிலும் இது சிறந்து விளங்குகிறது.மொத்தத்தில் இவ்விரு பங்குகளுமே முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை தான்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+