இந்திய பங்குச் சந்தையில் இன்று எண்ணெய் நிறுவனப் பங்குகள் (OMCs) கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை திடீரென எகிறியதே இந்த சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக BPCL, HPCL மற்றும் IOC ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஒரே நாளில் 7% முதல் 9% வரை சரிந்து முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த சூழலில், சர்வதேச ரேட்டிங் நிறுவனமான யுபிஎஸ், இந்த மூன்று நிறுவனங்களின் தரவரிசையை குறைத்து, அவற்றின் இலக்கு விலையையும் அதிரடியாக குறைத்துள்ளது. எண்ணெய் விலை உயர்வால் லாப வரம்பு குறையும் என்ற யுபிஎஸ்-இன் எச்சரிக்கை, எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியது போல் ஆகிவிட்டது. இதனால் விற்பனை அழுத்தம் அதிகரித்து, பொதுத்துறை எண்ணெய் நிறுவன பங்குகள் இன்று பலத்த அடி வாங்கியுள்ளன. இந்த சரிவானது இன்னும் தொடருமா? குறைந்த விலையை பயன்படுத்தி வாங்கி போடலாமா? வாருங்கள் பார்க்கலாம்.

எண்ணெய் நிறுவனங்களான பிபிசிஎல், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உள்ளிட்ட பங்குகல் 10% வரையில் சரிவைக் கண்டுள்ளன. இது கச்சா எண்ணெய் விலையானது 29% அதிகரித்த நிலையில், இது எரிபொருட்கள் விலை அதிகரிக்க வழிவகுக்கலாமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதுவே எண்ணெய் நிறுவன பங்குகளின் விலையும் சரிய காரணமாக அமைந்துள்ளது.
குறிப்பாக பிபிசிஎல் நிறுவன பங்கானது 7.49% ஏற்றம் கண்டு, 326.26 ரூபாய் என்ற குறைந்தபட்ச விலையையும், ஹெச்பிசிஎல் நிறுவன பங்கானது 8.675 அதிகரித்து,156.30 ரூபாயாகவும் குறைந்தபட்ச விலையை எட்டியுள்ளது. கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற சூழல் காரணமாக, பங்குகள் விலையானது வீழ்ச்சி கண்டுள்ளது. இதனிடையே தான் தரகு நிறுவனமானது ஐஒசி மற்றும் பிபிசிஎல் பங்குகள் குறித்து நியூட்ரல் என ரேட்டிங்கை குறைத்துள்ளது. ஹெச்.பி.சி.எல் பங்கு குறித்து விற்பனை செய்யலாம் என்று ரேட்டிங் கொடுத்துள்ளது.
இதில் ஐஓசி-யின் ரேட்டிங்கை குறைத்ததோடு இலக்கு விலையை 190 ரூபாயில் இருந்து, 175 ரூபாயாகவும் குறைத்து கொடுத்துள்ளது. இதே பிபிசிஎல் இலக்கு விலையை 425 ரூபாயில் இருந்து, 365 ரூபாயாகவும், ஹெச்பிசிஎல் இலக்கு விலையை 540 ரூபாயில் இருந்து 340 ரூபாயாகவும் கொடுத்துள்ளது. இது 2027 மற்றும் 2028ம் நிதியாண்டுகளில் எண்ணெய் நிறுவனத்தின் மார்ஜின் ஆனது முறையே 43 - 45% மற்றும் 22 - 26% சரிவை சந்திக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த முடியாத சூழலில், கச்சா எண்ணெய் விலை உயர்வது இந்த லாபத்தை பாதிக்கலாம் என கூறப்படுகிறது.
ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?
இதே கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் கிடைக்கும் லாபம் (GRMs) 2027 நிதியாண்டில் 30-48% வரையிலும், 2028 நிதியாண்டில் 21-39% வரையிலும் அதிகரிக்கும் எனத் தனது மதிப்பீட்டை உயர்த்தியுள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய்-யின் உண்மையான விலை 160 டாலர்.. அதிர்ச்சி அளிக்கும் தகவல்..!!

என்னுடைய பவர் தெரியாம பேசுறீங்க.. டிரம்ப் வாயை திறந்த உடன் கச்சா எண்ணெய் விலை 13% வீழ்ச்சி..!

இந்தியாவுக்கு குட்நியூஸ்..!! ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் திடீரென மனம் இறங்கிய ஈரான்..!!

எரியும் நெருப்பில் எண்ணெய்! நயாராவின் 35 நாள் முடக்கம்.. இந்தியாவின் நிலை என்னவாகும்?

ஈரான் போர்: சத்தமில்லாமல் லாபம் பார்க்கும் ரஷ்யா!! டிரம்ப் எடுத்த முடிவால் புதினுக்கு கொண்டாட்டம்!!

1970-களை விட மோசமான எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும்! உலகிற்கு காத்திருக்கும் பேராபத்து?IEA எச்சரிக்கை?

சரியான நேரத்தில் கைகொடுத்த ரஷ்யா! மங்களூரு துறைமுகத்தில் நங்கூரமிட்ட எண்ணெய் கப்பல்! பெரும் நிம்மதி..!

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி, ஆனால்..? ஈரான் போடும் 2 கண்டிஷன்கள்!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!



Click it and Unblock the Notifications