ஈரான் - இஸ்ரேல் போர் உள்ளிட்ட பல்வேறு புவிசார் அரசியல் பதற்றங்கள், சர்வதேச பொருளாதாரத்தையே ஒருவித நடுக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக மத்திய கிழக்கு பகுதிகளில் நிலவி வரும் பதற்றமான சூழல் மத்தியில், உலக அளவில் கச்சா எண்ணெய் விலை முதல் பங்குச் சந்தை வரை அனைத்தும் ஒரு ரோலர் கோஸ்டர் பயணத்தை போல ஏறி இறங்கி கொண்டிருக்கின்றன. பங்குச் சந்தைகள் சரிவை கண்டு வருவதை அடுத்து முதலீட்டாளர்கள் ஒருபுறம் கவலைப்பட்டாலும், மறுபுறம் பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை புதிய உச்சங்களை தொட்டு வருகின்றன.
இத்தகைய இக்கட்டான காலகட்டத்தில் உங்கள் கடின உழைப்பின் மூலம் ஈட்டிய 25,000 ரூபாய் பணத்தை ஒரே இடத்தில் முதலீடு செய்வது என்பது நெருப்போடு விளையாடுவதற்கு சமம். இந்த உலகளாவிய நெருக்கடியை ஒரு வாய்ப்பாக மாற்றி, உங்கள் முதலீட்டை எப்படி தங்கம், வெள்ளி மற்றும் பங்குகள் எனப் பிரித்து புத்திசாலித்தனமாக செய்யலாம் என்பதை பற்றி விரிவாகப் பார்ப்போம்.

சந்தையில் தற்போது நிலவி வரும் சூழலில் எதில் முதலீடு செய்யலாம் என்பதை கணிப்பது கடினம். இந்த சூழலில் SIP முதலீட்டை செய்வது நல்லதா? ஏற்கனவே செய்து கொண்டிருப்பவர்கள் தொடர்ந்து முதலீடு செய்யலாமா அல்லது தற்போது நிறுத்தி கொள்வது புத்திசாலித்தனமா? என பல கேள்விகள் முதலீட்டாளர்கள் மத்தியில் காணப்படுகிறது. ஏனெனில் சந்தையின் தற்போதைய நிலவரத்தை பார்த்தால், சென்செக்ஸ் அதன் உச்சத்தில் இருந்து சுமார் 9% சரிவைக் கண்டுள்ளது. வெள்ளி விலை அதன் உச்சத்தில் இருந்து 35% க்கும் அதிகமாகவும், தங்கம் விலை அதன் உச்சத்தில் இருந்து 15% க்கும் அதிகமாகவும் சரிந்துள்ளன. இன்னும் குறுகிய காலத்திற்கு அதிக ஏற்ற இறக்கத்திலேயே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக சிறு முதலீட்டாளர்கள் கவனமுடன் திட்டமிட வேண்டும்.
இது குறித்து குவாண்டம் ஏஎம்சியின் தலைமை செயல் அதிகாரியான சீமந்த் சுக்லா, 20:80 என்ற அசெட் அலகேஷன் பற்றி கூறியுள்ளார். ஒருவர் எஸ்ஐபி-யை தொடங்குவதற்கு முன்பே அவசரகால நிதியாக 12 மாத செலவை விரைவில் லிக்விட் ஃபண்ட் போன்றவற்றில் போட்டு வைத்திருக்க வேண்டும். அப்போது தான் எந்த பதற்றமின்றியும் சந்தை சரியும்போதும் முதலீடு செய்ய முடியும்.
ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!
உங்களிடம் அவசர கால நிதியானது இருந்தால், உங்கள் 25,000 ரூபாய் முதலீட்டை பின்வருமாறு பிரித்து முதலீடு செய்யலாம். மொத்த தொகையில் 20%-ஐ தங்கத்தில் முதலீடு செய்யலாம். இதை கோல்டு சேவிங்ஸ் ஃபண்டாகவும் அல்லது கோல்ட் இடிஎஃப் போன்றவற்றில் முதலீடு செய்யலாம். மீதமுள்ள 80% தொகையை ஈக்விட்டிகளில் முதலீடு செய்யலாம். அதையும் லார்ஜ் கேப், மிட் கேப், ஸ்மால் கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். இதில் துறை சார்ந்த மற்றும் தீமெட்டிக் ஃபண்டுகளை தவிர்ப்பது நல்லது என கூறுகிறார்.
சில முதலீட்டு ஆலோசகர்கள் விருப்பப்பட்டால் தங்கத்தில் முதலீட்டை அதிகரித்து கொள்ளலாம். அது தற்போது நிலவி வரும் பதற்றத்துக்கு மத்தியில் லாபகரமான ஒன்றாக இருக்கலாம். 65 - 70% ஈக்விட்டிகளிலும், 20 - 25% தங்கத்திலும், மீதமுள்ள 5 - 10% லிக்விட் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.
பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?
மேற்கண்ட இரு பரிந்துரைகளிலுமே தங்கத்தில் முதலீடு செய்யலாம் என கூறினாலும், அது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் இல்லை. பெரும்பகுதி ஈக்விட்டி சார்ந்த ஃபண்டுகளில் அதிகம் முதலீடு செய்ய பரிந்துரை செய்யப்படுகிறது.
தற்போது சர்வதேச அளவில் நிலவி வரும் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை சுமார் பேரலுக்கு 80 டாலர்களுக்கு அருகில் காணப்படுகிறது. இது தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால், அது ரூபாயின் மதிப்பு சரிய காரணமாக அமையலாம். இது பங்குச் சந்தை முதலீடுகள் வெளியேற வழிவகுக்கும். மாறாக தங்கம் கவர்ச்சிகரமான ஒன்றாக இருக்கும். ஆக இந்த பதற்றமான சூழலில் எஸ் ஐ பி-ல் தொடர்ந்து ஒரு தொகையை முதலீடு செய்ய வேண்டும். இடிஎஃப்-களும் நல்ல வாய்ப்பு. தற்போது NAV-க்கள் சரிவது நீண்ட கால முதலீட்டுக்கு நல்ல வாய்ப்பு.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள்
தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!! ஒன்னு ரெண்டாக போகுது!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?



Click it and Unblock the Notifications