பங்குச் சந்தை ஏறுவதும் இறங்குவதும் அதன் இயல்புதான். ஆனால், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் சரிவை காணும்போதெல்லாம், சாதாரண முதலீட்டாளர்களின் இதயத்துடிப்பு கொஞ்சம் எகிறத்தான் செய்கிறது. நாம போட்ட பணம் என்ன ஆகுமோ? என்கிற பயம் ஒருபுறம் இருந்தாலும், சாமர்த்தியமான முதலீட்டாளர்கள் இந்த சூழலை ஒரு மெகா தள்ளுபடி விற்பனையாக பார்க்கிறார்கள்.
ஒவ்வொரு மாதமும் சீராக முதலீடு செய்யும் SIP முறையை பின்பற்றுபவர்களுக்கு, இந்த சந்தை ஏற்றத்தாழ்வு என்பது ஒரு மிகப்பெரிய சவால் மட்டுமல்ல, ஒரு மறைமுகமான அதிர்ஷ்டமும் கூட. இந்த சூழலில், ஏற்கனவே ஓடிக்கொண்டிருக்கும் எஸ்ஐபி-யுடன் கூடுதலாக ஒரு பெரிய தொகையை (Lump sum) இப்போது முதலீடு செய்யலாமா? இது நம் போர்ட்ஃபோலியோவை உயர்த்துமா அல்லது சிக்கலில் தள்ளுமா? என்பது குறித்து நிதி ஆலோசகர்கள் மற்றும் சந்தை நிபுணர்கள் வழங்கும் ஆழமான பார்வைகளை இங்கே காண்போம்.

எஸ்ஐபி முதலீட்டாளர்கள் தற்போதைய சந்தை சூழலில் குழப்பமடைய தேவையில்லை என்றும், ஒரு தெளிவான திட்டமிடலுடன் செயல்பட வேண்டும் என்றும் நிதி நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். செல்வத்தை உருவாக்குவதற்கு மிகவும் பயனுள்ள மற்றும் ஒழுக்கமான முதலீட்டு முறை எஸ்ஐபி மட்டுமே என கூறும் நிபுணர்கள், சந்தையின் ஏற்ற இறக்கங்களைக் கண்டு பயந்து முடிவுகளை எடுப்பதற்கு பதிலாக, முதலீட்டாளர்கள் முதலில் தங்களின் அசெட் அலோகேஷனை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
உங்கள் முதலீடு உங்கள் ரிஸ்க் எடுக்கும் திறன், நிதி இலக்குகள் மற்றும் முதலீட்டு காலம் ஆகியவற்றுடன் ஒத்துப்போக வேண்டும். அவை சரியாக இருக்கும் பட்சத்தில் எந்த தடையுமின்றி எஸ்ஐபி -யைத் தொடர்வதே சிறந்த வழி. குறுகிய கால ஏற்றத் தாழ்வுகளை கண்டு முதலீட்டு உத்தியை திடீரென மாற்றக்கூடாது. பங்குச் சந்தை என்பது சுழற்சி முறை கொண்டது. இதில் அவ்வப்போது ஏற்படும் சரிவுகள் மற்றும் மாற்றங்கள் முதலீட்டு பயணத்தின் ஒரு அங்கமே. ஆக சந்தையில் எழும் தேவையற்ற வதந்திகளைக் நம்பி உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்காமல், நீண்ட கால இலக்குகளுக்காக தொடர்ந்து முதலீடு செய்வதே புத்திசாலித்தனம்.
ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!
ஒரு வேளை உங்களிடம் கூடுதல் பணம் இருந்து, அதை லம்ப்சம் தொகையாக முதலீடு செய்ய விரும்பினால், அதற்கு நிதானமான அணுகுமுறை அவசியம். அதை அப்படியே முழுத் தொகையையும் நேரடியாக ஈக்விட்டி ஃபண்டுகளில் போடுவதற்கு பதிலாக, மல்டி-அசெட் அலோகேஷன் ஃபண்டுகளில் முதலீடு செய்வதைப் பரிசீலிக்கலாம். இந்த வகை ஃபண்டுகளில், சந்தை நிலவரத்திற்கு ஏற்ப நிதி மேலாளர்களே உங்கள் பணத்தை வெவ்வேறு பிரிவுகளில் பிரித்து முதலீடு செய்வார்கள். இது ரிஸ்க்கை குறைக்க உதவும்.
ரியல் எஸ்டேட் முதலீடு நிஜமாகவே லாபமா? வாடகை வருமானத்தில் ஒளிந்திருக்கும் சவால்கள் என்ன?
ஆக குறுகிய கால ஏற்ற இறக்கங்களுக்காக உங்கள் நீண்ட கால எஸ்ஐபி திட்டத்தை ஒருபோதும் நிறுத்தாதீர்கள். சந்தை நேரத்தை கணிக்க முயற்சிப்பதை விட, உங்கள் போர்ட்ஃபோலியோ சமநிலையை பராமரிப்பதில் கவனம் செலுத்துங்கள். ஒழுக்கம், தொடர்ச்சியான முதலீடு மற்றும் இலக்கை நோக்கிய பயணம் ஆகியவையே வெற்றிகரமான முதலீட்டின் அடிப்படை.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

உங்க பணத்தை இரட்டிப்பாக்கும் போஸ்ட் ஆபிஸ் முதலீட்டு திட்டம்!! ரூ.1000 கூட முதலீடு செய்யலாம்!!

LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!! ஒன்னு ரெண்டாக போகுது!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!



Click it and Unblock the Notifications