சென்செக்ஸ், நிஃப்டி அதிரடி ஏற்றம்! ஒரே நாளில் 17 லட்சம் கோடி லாபம்.. கொண்டாட்டத்தில் முதலீட்டாளர்கள்!

இந்திய பங்குச்சந்தை இப்போது ஒரு காளையாக (Bull Market) மாறி சீறிப் பாய்ந்து கொண்டிருக்கிறது. கடந்த 5 நாட்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, இன்று ஒரே நாளில் 4% உயர்ந்து ஒட்டுமொத்த முதலீட்டாளர்களையும் வியக்க வைத்துள்ளது.

தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்தாலும், ஒரே நாளில் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு மட்டும் சுமார் 17 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. உலக நாடுகளின் பொருளாதார சூழல் மற்றும் உள்நாட்டு சந்தையில் ஏற்பட்டுள்ள சாதகமான மாற்றங்கள் இந்த பாய்ச்சலுக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு இன்று ஒரு கொண்டாட்ட நாள் எனலாம். இந்த ராக்கெட் வேக உயர்வுக்கு பின்னால் இருக்கும் சீக்ரெட் என்ன? சந்தை இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படியே இருக்கும்?

சென்செக்ஸ், நிஃப்டி அதிரடி ஏற்றம்! ஒரே நாளில் 17 லட்சம் கோடி லாபம்..கொண்டாட்டத்தில் முதலீட்டாளர்கள்

தலால் ஸ்ட்ரீடில் உள்ள சாதகமான காரணிகளுக்கு மத்தியில் சென்செக்ஸ் 2,946.32 புள்ளிகள் அல்லது 3.95% உயர்ந்து, 77,562.90 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது. இதே நிஃப்டி 3.78% அல்லது 878.7 புள்ளிகள் உயர்ந்து, 23,997.35 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது.

பங்கு சந்தையின் இன்றைய அசுர வளர்ச்சியால், மும்பை பங்குச் சந்தையில் (BSE) பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களின் மொத்த சந்தை மூலதன மதிப்பு, முந்தைய வர்த்தக தினத்தில் 428 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 445 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அதாவது முதலீட்டாளர்களின் லாபம் மதிப்பானது ஒரே நாளில் சுமார் 17 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இந்த அதிரடி மாற்றத்திற்கு மிக முக்கியமான காரணம் ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட்டது தான் என ஜியோஜித் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் ஆய்வு தலைவர் வினோத் நாயர் தெரிவித்துள்ளார். கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 டாலருக்கும் கீழ் சரிந்தது இந்தியாவுக்குப் பெரிய சாதகமாக அமைந்துள்ளது. எண்ணெய் விலை குறைந்ததால், வரும் 2027 நிதியாண்டில் நிறுவனங்களின் லாப வளர்ச்சி பாதிக்கப்படும் என்ற அச்சம் விலகியுள்ளது. பணவீக்கம் இயல்பு நிலைக்கு திரும்பலாம். இதனால் ரூபாயின் மதிப்பும் அதிகரிக்க வழிவகுக்கும். இது அந்நிய முதலீடுகள் அதிகரிக்கவும் வழிவகுக்கும்.

ஆக தற்போதைய காலாண்டு முடிவுகள் சுமாராக இருந்தாலும், நீண்ட கால அடிப்படையில் இந்திய நிறுவனங்களின் லாபம் சிறப்பாக இருக்கும் என்பதால் முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் பங்குகளை வாங்கி வருகின்றனர். இருப்பினும் இரண்டு வார போர் நிறுத்தம், அதற்கு மேலும் தொடருமா என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் பட்டியலில் இண்டிகோ 8.22% அதிகரித்து முன்னணியில் இருந்தது. அதை தொடர்ந்து எல் அண்ட் டி 7.64% ஏற்றம் கண்டும், பஜாஜ் பைனான்ஸ் 7.03% ஏற்றம் கண்டும், மஹிந்திரா & மஹிந்திரா 6.79% உயர்ந்தும், ஆக்சிஸ் வங்கி 6.56% உயர்ந்தும், மாருதி சுசுகி 6.33% உயர்ந்தும் காணப்படுகிறது.

சந்தை இவ்வளவு பெரிய ஏற்றத்தை கண்டபோதும், ஒரு சில நிறுவனங்கள் மட்டும் சரிவை சந்தித்தன. குறிப்பாக டெக் மஹிந்திரா, சன் பார்மா மற்றும் பவர் கிரிட் ஆகிய நிறுவனங்கள் சுமார் 1.53% வரை சரிந்தன. இன்றைய வர்த்தக தினத்தில் அனைத்து துறைகளும் வலுவாக ஏற்றம் கண்டன. எனினும் ஆட்டோமொபைல் துறை 6.64% உயர்ந்து மிகச்சிறந்த வளர்ச்சியை பதிவு செய்தது. வங்கித் துறை 5.85% உயர்ந்து வலுவான நிலையில் காணப்பட்டது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+