இந்திய பங்குச்சந்தை வெளிநாட்டு முதலீடுகளால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு வந்த நிலை கடந்த 5 வருடத்தில் மிகப்பெரிய மாற்றங்களை எதிர்கொண்டு தற்போது உள்நாட்டு முதலீட்டாளர்கள் ஆதிக்கம் செலுத்த துவங்கியுள்ளனர். இதில் பெரும் பங்கு உள்நாட்டு ரீடைல் முதலீட்டாளர்கள் உள்ளனர். இப்படியிருக்கும் சூழ்நிலையில் பங்குச்சந்தையில் ஏற்படும் சரிவு அதிகப்படியான மக்களை பாதிக்கிறது.
இந்திய பங்குச்சந்தை கடந்த 2 நாட்களாக பெரும் பாதிப்பை எதிர்கொண்டு வரும் காரணத்தால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் பெரும் இழப்பை எதிர்கொண்டு வருகின்றனர். இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 800 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிவை எதிர்கொண்டு 81,440 புள்ளிகள் வரையில் சரிந்துள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு தனது ஆஸ்தான 25000 புள்ளிகளில் இருந்து கீழ் இறங்கி 24,811.65 புள்ளிகள் வரையில் சரிந்துள்ளது.

இதேவேளையில் இன்று மும்பை பங்குச்சந்தையில் ஸ்மால் கேப், மிட்கேப் குறியீடுகள் 1 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்துள்ளது. கடந்த 2 நாட்களில் சென்செக்ல் 1300 புள்ளிகளும், நிஃப்டி கிட்டத்தட்ட 2 சதவீதம் அளவுக்கும் சரிந்துள்ளது மூலம் பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் முதலீட்டு மதிப்பு சுமார் 8 லட்சம் கோடி அளவில் குறைந்துள்ளது. இதில் வெள்ளிக்கிழமை மட்டும் 5 லட்சம் கோடிக்கும் அதிகமாக இழப்பை சந்தித்துள்ளது. இந்த நிலையில் இந்திய பங்குச்சந்தை ஏன் சரிகிறது என்பதை கட்டாயம் முதலீட்டாளர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
வெளிநாட்டு முதலீடுகள் வெளியேற்றம்:
இந்திய பங்குச் சந்தையில் இருந்து வெளிநாட்டு முதலீடு நிறுவனங்கள் (FPIs) பங்குகளை விற்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. ஜூலை மாதம் இதுவரை FPI முதலீட்டாளர்கள் ரூ.28,528 கோடி மதிப்பிலான பங்குகள் விற்றுள்ளனர். கடந்த நான்கு நாட்களில் மட்டும் ரூ.11,572 கோடி மதிப்பிலான பங்குகள் விற்பனையாகியுள்ளன.
இந்த விற்பனை தான் முதலீட்டு சந்தையில் நிதி புழக்கத்தை குறைத்து பங்கு மதிப்புகளை பந்தாட வைத்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக விளங்குவது அமெரிக்க பத்திர முதலீட்டில் கிடைக்கும் லாபம் அதிகரித்துள்ளது, அமெரிக்காவுக்கு கிடைக்கும் அடுத்தடுத்து வர்த்தக ஒப்பந்தங்களும் முக்கியமான காரணமாக உள்ளது.
இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்:
டிரம்ப்-ன் ரெசிப்ரோக்கல் வரி விதிப்புக்கான ஆகஸ்ட் 1 டெட்லைன் நெருங்கி வரும் வேளையில் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்து தெளிவற்ற நிலை தொடர்கிறது, இது பங்குச் சந்தையின் முதலீட்டு மனநிலையை பாதித்துள்ளது. அதிலும் குறிப்பாக வெளிநாட்டு முதலீட்டாளர் அதிகளவில் பின்வாங்குகின்றனர்.
இரு நாடுகளும் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக தகவல் வெளியானாலும் உறுதியான முடிகள் இன்னும் எட்டப்படவில்லை. அமெரிக்கா இதுவரையில் ஜப்பான், ஃபிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் வியட்நாம் உள்ளிட்ட ஆசிய நாடுகளுடன் ஒப்பந்தங்களை முடித்துள்ளது, ஆனால் இந்தியாவுடன் இன்னும் உறுதியான முடிவு எட்டப்படவில்லை.
இரு நாடுகள் மத்தியிலான வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட முக்கிய தடையாக இருப்பது டிரம்ப் அரசு, இந்தியாவில் விவசாய, பால் பொருட்கள் மற்றும் மரபணு மாற்றப்பட்ட (GM) பொருட்களின் வர்த்தகத்தில் அமெரிக்காவுக்கு கதவுகளை திறக்க கோருவது தான். இந்தியா அரசு நாட்டின் விவசாயிகளை பாதுகாக்கும் நோக்கத்தில் உறுதியாக இருக்கும் காரணத்தால் தொடர்ந்து இதில் இழுபறியாக உள்ளது.

முதல் காலாண்டு முடிவுகள்:
இந்திய நிறுவனங்கள் அடுத்தடுத்து 2025-ஆம் ஆண்டின் முதல் காலாண்டு (Q1) முடிவுகளை வெளியிட்டு வருகிறது. இது முதலீட்டு சந்தையை குளிர்விக்கும் வகையில் இல்லாத காரணத்தால் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அதிலும் குறிப்பாக காலாண்டு முடிவுகள் சீசனை துவங்கியுள்ள ஐடி மற்றும் நிதி சேவைகள் துறைகளில் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் இல்லை.
இதனால், உள்நாட்டு முதலீட்டாளர்களும் சரி, வெளிநாட்டு முதலீட்டாளர்களும் சரி, இந்திய பங்குகளில் தங்களுடைய முதலீட்டை உயர்த்துவதற்கு தயங்குகின்றனர், இது சந்தையின் மொத்த செயல்பாட்டை பாதித்துள்ளது.
அதிக மதிப்பீடுகளின் அபாயம்:
இது இந்திய பங்குச் சந்தையில் நீண்டகாலமாக இருக்கும் ஒரு பிரச்சனை, தப்போது வர்த்தக நெருக்கடி, ரூபாய் மதிப்பு என பிரச்சனைகளுக்கு மத்தியில் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்திய சந்தையில் பல நிறுவனங்கள் தனது உண்மையான மதிப்பை தாண்டி பல மடங்கு அதிக விலைக்கு பங்குகள் விற்கப்பட்டு வருகிறது.
மோசமாந காலாண்டு முடிவுகள் இந்த அதீத மதிப்பீட்டை எற்றுக்கொள்ள முடியாத நிலையில் முதலீட்டாளர்கள் உள்ளனர் என்பது தான் தற்போதைய பிரச்சனை.
நிஃப்டி 25,000:
நிஃப்டி 50 கடந்த வாரம் 25,000 என்ற முக்கிய ஆதரவு அளவீட்டை தாண்டி சரிந்துள்ளது, இது மேலும் பலவீனம் ஏற்படலாம் என்பதை குறிக்கிறது. மேலும் தற்போது நிஃப்டியின் அடுத்த ஆதரவு நிலை 24,800 முதல் 24,735 வரை உள்ளது, இதற்கும் கீழே தாண்டினால் 24,500 ஒரு முக்கிய ஆதரவு மட்டமாக உள்ளது.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications