சம்வத் 2081 ஆம் ஆண்டின் முதல் நாளான இன்று மும்பை பங்குச்சந்தையின் சிறப்பு வர்த்தக நேரத்தில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா (M&M) நிறுவனத்தின் பங்குகள் விலை, நடப்பு நிதியாண்டில் அதிகபட்ச மாதாந்திர விற்பனையை பதிவு செய்த காரணத்தால், மும்பை பங்குச்சந்தையில் முஹூர்த் வர்த்தகத்தில் எந்தொரு நிறுவனமும் பதிவு செய்திடாத வகையில் சுமார் 3% வரை அதிகரித்து ரூ.2,818 ஆக உயர்ந்தது. இன்றைய முஹூர்த் வர்த்தகத்தில் சூப்பர் ஸ்டாராக இருப்பது மஹிந்திரா அண்ட் மஹிந்திரா தான்.
இந்திய பங்குச்சந்தையின் பென்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, புதிய இந்து சம்வத் 2081 ஆண்டின் தொடக்கமாகிய தீபாவளி முஹூர்த்த வர்த்தகத்தில் சிறப்பான வளர்ச்சியில் தொடங்கின.

சென்செக்ஸ் குறியீடு சுமார் 400 புள்ளிகள் அல்லது 0.5% உயர்ந்தது, அதே நேரத்தில் நிஃப்டி 50 குறியீடு, 120 புள்ளிகள் அல்லது 0.5% உயர்ந்தது முஹூர்த் வர்த்தகத்தில் பங்கேற்ற பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா சுமார் 3% உயர்ந்த நிலையில், டாடா மோட்டார்ஸ் 1% க்கும் அதிகமாக உயர்ந்தது. அதே நேரத்தில், மாருதி சுசூகி சுமார் 0.6% உயர்ந்தது. சமீபத்தில் ஐபிஓ வெளியிட்டு பங்குச்சந்தைக்கு வந்த ஹூண்டாய் மோட்டார் பங்குகள் 0.54 சதவீதம் உயர்ந்து 1832.00 ரூபாய் விலையில் வர்த்தகமாகி வருகிறது.
சென்செக்ஸ் குறியீட்டில் இருக்கும் பவர் கிரிட் மட்டும் 0.08% குறைந்த நிலையில், கிட்டத்தட்ட அனைத்து பங்குகளும் உயர்ந்து வர்த்தகம் செய்தன.
புதிய இந்து சம்வத் ஆண்டின் முதல் வர்த்தக நாளை வலுவான தொடக்கத்துடன் தொடங்கியது, பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. நிஃப்டி ஸ்மால் கேப் 100 இன்டெக்ஸ் மற்றும் நிஃப்டி மிட்கேப் 100 இன்டெக்ஸ் இரண்டும் கிட்டத்தட்ட 1% உயர்ந்தன.
துறை ரீதியாக பார்க்கும் போது, ஆட்டோமொபைல் மற்றும் பொதுத்துறை வங்கிகள் அதிக லாபம் ஈட்டின. நிஃப்டி ஆட்டோ இன்டெக்ஸ் 1% உயர்ந்தது மற்றும் நிஃப்டி PSU வங்கி இன்டெக்ஸ் 1% உயர்ந்தது.
இன்று டாடா இன்வெஸ்ட்மெண்ட் கார்ப்பரேஷன் பங்குகள் விலை அதிகமாகத் தொடங்கியது, ஆனால் சில நிமிடத்தில் சரிவை சந்தித்துள்ளது. இந்நிறுவனத்தின் இரண்டாவது காலாண்டு லாபம் வருடாந்திர அடிப்படையில் ரூ.214 கோடியாக சமமாக இருந்ததால் பங்கு விலை சரிந்தது. இந்த பங்கு மும்பை பங்குச்சந்தையில் இல் 0.2% குறைந்து ரூ.6872 இல் உள்ளது.


Click it and Unblock the Notifications