4 நாளில் கிட்டதட்ட 2,400 புள்ளிகள் வீழ்ச்சி.. கொடுத்ததை மொத்தமாக வாங்கிக் கொண்ட சென்செக்ஸ்?

இன்று இந்திய பங்கு சந்தைகள் பலத்த சரிவினைக் கண்டுள்ள நிலையில், குறிப்பாக சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கு மேல் சரிவினைக் கண்டு முடிவடைந்துள்ளது.

தொடர்ச்சியாக நான்காவது நாளாக சரிந்த இந்திய சந்தைகள், இன்றைய முடிவோடு கிட்டதட்ட 2,400 புள்ளிகள் சரிவில் காணப்படுகிறது. இது பட்ஜெட்டுக்கு முந்தைய அச்சமாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

இதனால் முதலீட்டாளர்கள் தங்களுக்கு கிடைத்த லாபத்தினை முதலீட்டாளர்கள் புக் செய்து வருகின்றனர். இதன் காரணமாகவும் சந்தை பலத்த சரிவில் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Array

Array

இதே நிஃப்டி இன்று மட்டும் கிட்டதட்ட 2% சரிந்து, 13,967.50 ஆகவும் சரிவடைந்துள்ளது. இது நாளை எஃப்&ஓ எக்ஸ்பெய்ரி இருப்பதால், முதலீட்டாளர்கள் தங்களுக்கு கிடைத்த லாபத்தினை தக்க வைத்துக் கொள்ள புராபிட் புக் செய்த நிலையில், இன்று சந்தை பலத்த சரிவினைக் கண்டுள்ளது.

FII விற்பனை அதிகரிப்பு

FII விற்பனை அதிகரிப்பு

கடந்த இரண்டு வர்த்தக அமர்வுகளாக சந்தையில் FII விற்பனை இருந்து வருகின்றது. இன்னும் சில தினங்களே பட்ஜெட்டுக்கு உள்ள நிலையில், முதலீட்டாளர்கள் பயத்தில் தங்களது லாபத்தினை புக் செய்திருக்கலாம். பட்ஜெட்டில் என்ன அறிவிப்புகள் வரும் என்று தெரியவில்லை. ஆக முதலீட்டாளர்கள் பட்ஜெட்டுக்காக காத்துக் கொண்டுள்ளனர். ஆக இது ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்.

அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள்

அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள்

அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் மூலதன சந்தையில் நிகர விற்பனையாளர்களாக உள்ளனர். ஏனெனில் பரிமாற்ற தரவுகளின் படி, கடந்த திங்கட்கிழமை நிலவரப்படி, நிகர விற்பனையானது 765.30 கோடி ரூபாயாக உள்ளது. இதில் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் 600 கோடி ரூபாய்க்கு மேல் விற்றுள்ளனர்.

வளர்ச்சிக்கான நல்ல அறிகுறி

வளர்ச்சிக்கான நல்ல அறிகுறி

எனினும் சர்வதே நாணய நிதியம், சர்வதேச ஜிடிபி விகிதத்தினை நடப்பு ஆண்டில் மேல் நோக்கி மாற்றியமைத்துள்ளது. இதே இந்தியாவின் ஜிடிபி விகிதத்தினையும் 2021ம் ஆண்டிற்காக வளர்ச்சி விகிதத்தினை 11.5% ஆக இருக்கும் என்று மேல் நோக்கி அதிகரித்துள்ளது. ஆக இது வளர்ச்சிக்கான நல்ல அறிகுறி என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

Array

Array

தற்போது வெளியாகி வரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள், நல்ல முறையில் வந்து கொண்டுள்ள நிலையில், இதுவும் இந்திய சந்தைக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக எல்&டி தனது ஆர்டர் புத்தகத்தில் வரலாறு காணாதளவு ஆர்டர்களை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. எனினும் இதன் பங்கு விலையானது இன்று 2% சரிவில் காணப்பட்டது.

பட்ஜெட் பற்றிய அச்சம்

பட்ஜெட் பற்றிய அச்சம்

இதே ஹெச்டிஎஃப்சி செக்யூரிட்டீஸ், ப்ரீ பட்ஜெட் பற்றிய அச்சங்கள் இருந்து வருகின்றன. இது சந்தையின் சரிவுக்கு காரணமாக அமைந்துள்ளது. அதோடு சமீபத்திய மிகப்பெரிய அளவில் வெளியிடப்பட்ட ஐபிஓக்களும், சரிவுக்கு காரணமாக அமைந்துள்ளன. ஏனெனில் நல்ல லாபத்தில் உள்ள பங்குகளை விற்று விட்டு மீண்டும் குறையும்போது வாங்கலாம் என்ற உணர்வும் இருக்கலாம்.

ஃபெடரல் வங்கி கூட்ட எதிரொலி

ஃபெடரல் வங்கி கூட்ட எதிரொலி

இன்று ஃபெடரல் வங்கி கூட்டம் நடைபெறவிருப்பதால், ஆசிய சந்தைகள் பெரும் சரிவினைக் கண்டுள்ளன. இதன் எதிரொலியாக இந்திய சந்தைகளும் பெரும் சரிவினைக் கண்டு வருகின்றன. குறிப்பாக பிஎஸ்டி மிட்கேப் பங்குகள் சுமார் 0.5% சரிவினைக் கண்டுள்ளது.
புதிய வகை கொரோனா பரவல் காரணமாக, தடுப்பூசியே நடைமுறைக்கு வந்திருந்தாலும், இது கொரோனா தொற்று நோயில் இருந்து மீள்வதை தாமதப்படுத்தலாம் என்ற அச்ச உணர்வும் நிலவி வருகின்றது.

ஊக்கத்தொகை தாமதமாகலாம்

ஊக்கத்தொகை தாமதமாகலாம்

எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோ பைடனின் 1.9 டிரில்லியன் டாலர் கொரோனா ஊக்கத்தொகை அறிவிப்புகள் தாமதமாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதுவும் சந்தையில் சரிவுக்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது. ஊக்கத்தொகை தாமதமாகும் பட்சத்தில் அது சர்வதேச பங்கு சந்தைகள் சரிவுக்கு ஒரு காரணமாக அமையும். அதன் தாக்கம் இந்தியாவிலும் இருக்கலாம் என்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகின்றது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+