சென்செக்ஸ் குறியீடு யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 1000 புள்ளிகள் வரையில் சரிந்தது. குறிப்பாக ஐரோப்பிய சந்தை வர்த்தகம் துவங்கிய பின்பு பெரும் இழப்பை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது. சென்செக்ஸ் குறியீடு செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் 66,459.31 புள்ளிகளை எட்டிய நிலையில், இன்றைய வர்த்தகத்தில் 65,431.68 புள்ளிகள் வரையில் சரிந்துள்ளது.
இன்றைய வர்த்தக சரிவு மூலம் இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் 3.5 லட்சம் கோடி ரூபாய் சந்தை முதலீட்டு மதிப்பை இழந்துள்ளனர். இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 676.53 புள்ளிகள் சரிந்து 65,782.78 புள்ளிகளை எட்டியுள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு 207.00 புள்ளிகள் சரிந்து 19,526.55 புள்ளிகளை எட்டியுள்ளது.

இன்றைய சரிவுக்கு முதலும் முக்கிய காரணம் உலகின் முன்னணி கிரெடிட் ரேட்டிங் நிறுவனமான பின்ச் ரேட்டிங்க்ஸ், உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவின் கிரெடிட் ரேட்டிங்-ஐ சற்றும் எதிர்பார்க்காத வேளையில் குறைத்தது தான். இதோடு மொத்தம் 6 விஷயங்கள் இன்றைய சரிவுக்கு மிகவும் முக்கியமான காரணமாக உள்ளது.
பின்ச் ரேட்டிங்க்ஸ்: உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவின் கிரெடிட் ரேட்டிங்-ஐ AAA அளவில் இருந்து AA+ ரேட்டிங் உடன் ஸ்டேபிள் அவுட்லுக் கொடுத்துள்ளது. இந்த கிரெடிட் ரேட்டிங் குறைப்பு முதலீட்டு சந்தையில் பெரும் தாக்கத்தை இந்தியாவில் மட்டும் அல்லாமல் சர்வதேச அளவில் ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா - இந்திய பங்குச்சந்தை: இந்திய பங்குச் சந்தைகள் நேற்றைய வர்த்தகத்தில் வால் ஸ்ட்ரீட்டின் மோசமான சரிவு காரணமாக பெரும் சரிவுடன் துவங்கியது. நாஸ்டாக் 0.43% சரிவும், டவ் ஜோன்ஸ் 0.33% சரிவும் முடிந்த நிலையில் இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1000 புள்ளிகளும் நிஃப்டி 300 புள்ளிகளுக்கும் அதிகமான சரிவை சந்தித்தது.
உலகளாவிய சந்தைகள்: ஃபிட்ச் ரேட்டிங்க்ஸ் தனது மதிப்பீட்டைக் குறைத்த பிறகு ஆசிய பங்குகள் வீழ்ச்சியடைந்தது. ஜப்பான் நாட்டின் நிக்கி மற்றும் சீனாவின் ஹாங் செங் 2% குறைந்தது, மேலும் முதலீட்டாளர்கள் அனைவரும் அமெரிக்க அரசின் நடவடிக்கைக்காக காத்திருக்கும் வேளையில் அமெரிக்க சந்தை அடுத்தக்கட்ட சரிவுக்கு தயாராக உள்ளது.
எஃப்ஐஐ (FII) முதலீடுகள்: 2024 நிதியாண்டில் இதுவரையில் மும்பை பங்குச்சந்தையில் சுமார் ரூ.1.5 லட்சம் கோடி முதலீட்டை திரும்ப பெற்ற நிலையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த சில நாட்களாக தங்களுடைய முதலீட்டை அதிகரித்த நிலையில். நேற்றும், இன்றும் அதிகப்படியான முதலீட்டை திரும்ப பெற்றனர்.
லாபம் முக்கியம் அமைச்சரே: ஜூலை மாதத்துடன் சேர்ந்து ஐந்தாவது மாதமாக நிஃப்டி நல்ல நிலையில் முடிவடைந்தது. கடந்த 5 மாதங்களில் நிஃப்டி 13% க்கு மேல் உயர்ந்துள்ளது, இந்த உயர்வை லாபமாக்க பல முதலீட்டாளர்கள் அதிகப்படியான முதலீட்டை விற்பனை செய்து வெளியேற்றியுள்ளனர்.
அதீத மதிப்பீடு பிரச்சனை: நிறுவனங்களின் மதிப்பீடுகள் குறைந்து வருவது பெரும் சுமையாக முதலீட்டாளர்களுக்கு மாறி வருகிறது. இது முதலீட்டாளர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பத்திர வருவாய்: பின்ச் ரேட்டிங்க்ஸ் வந்த பின்பும் செவ்வாய்க்கிழமை அமெரிக்காவில் கடன் பத்திர முதலீட்டில் 10 வருட பத்திரத்தில் 4 சதவீத லாபத்தை பதிவு செய்துள்ளது. சமீபத்தில் அமெரிக்க அரசு தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை உயர்த்தியது பலமாக மாறியுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications