52 வார உச்சத்தில் சென்செக்ஸ்.. சர்பிரைஸ் கொடுத்த ஐடி பங்குகள்.. ஏன் 1000 புள்ளிகளுக்கு மேலாக உச்சம்!

இந்திய பங்கு சந்தையானது இன்று காலை அமர்விலேயே ஏற்றத்தில் காணப்பட்டது. இது ஆசிய சந்தைகள் ஏற்றம் கண்ட நிலையில், இந்திய சந்தைகளும் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது.

இது அமெரிக்காவில் பணவீக்கம் சற்றே குறையத் தொடங்கியுள்ள நிலையில், இது வரவிருக்கும் கூட்டத்தில் வட்டி விகிதத்தினை குறைக்க வழிவகுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வியாழக்கிழமையன்று வெளியான பணவீக்கத் தரவில் எதிர்பார்த்ததை விட, பணவீக்கம் கடந்த அக்டோபர் மாதத்தில் 7.7% ஆக சரிவினைக் கண்டுள்ளது.

என்ன காரணம்?

என்ன காரணம்?

இது கடந்த செப்டம்பர் மாதத்தில் 8.2% ஆக இருந்தது. இதற்கிடையில் அமெரிக்க டாலரின் மதிப்பானது சற்றே அழுத்தத்தில் காணப்படுகிறது. இது பத்திர சந்தையும் அழுத்தத்தில் காணப்படுகிறது. இதற்கிடையில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது சற்றே அதிகரித்து காணப்படுகின்றன. இதற்கிடையில் தான் இந்திய பங்கு சந்தையானது இன்று ஏற்றத்தில் காணப்படுகின்றன.

சென்செக்ஸ் 52 வார உச்சம்

சென்செக்ஸ் 52 வார உச்சம்

சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேலாக ஏற்றம் கண்டுள்ள நிலையில், இது 52 வார உச்சமான 61,689 புள்ளிகளையும் தொட்டுள்ளது. இதே நிஃப்டி 18,300-க்கும் மேலாக காணப்படுகிறது. டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பானது 80.74 ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த அமர்வில் 81.81 ஆக இருந்தது.

டாலரின் மதிப்பு

டாலரின் மதிப்பு

இதே அமெரிக்க டாலரின் மதிப்பானது 2% மேலாக குறைந்து, 108.1 ஆக இருந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் சென்செக்ஸ் 62,245 புள்ளிகளை தொட்டது. எனினும் இந்த ஆண்டில் இன்றைய உச்சம் தான் 52 வார உச்சமாகவும் உள்ளது. இதற்கிடையில் அமெரிக்க டாலரின் மதிப்பானது மீடியம் டெர்மில் 105 என்ற லெவலை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூபாய் மதிப்பு உச்சம்

ரூபாய் மதிப்பு உச்சம்

எப்படியிருப்பினும் சர்வதேச அளவில் புராபிட் புக்கிங் காரணமாகவும் டாலரின் மதிப்பு சரிவடைந்திருக்கலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும் சர்வதேச அளவில் எனர்ஜி விலையானது சற்றே குறையத் தொடங்கியுள்ளதும், டாலரின் மதிப்பு சரியத் தொடங்கியுள்ளதும், ரூபாயின் மதிப்பு அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது என விபி கமாடிட்டி நிறுவனம், மேக்தா ஈக்விட்டீஸ் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களும் கணித்துள்ளன.

ஐடி பங்குகள் உச்சம் ஐடி பங்குகள் உச்சம்

ஐடி பங்குகள் உச்சம் ஐடி பங்குகள் உச்சம்

முன்னணி ஐடி பங்குகளான விப்ரோ, இன்ஃபோசிஸ், ஹெச் சி எல் டெக் உள்ளிட்ட பங்குகள் கிட்டதட்ட 4% ஏற்றத்தில் காணப்படுகிண்றன. இதற்கிடையில் நிபுணர்கள் இந்திய சந்தைகள் மீண்டும் புதிய உச்சத்தினை எட்டலாம் என எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக அன்னிய முதலீடுகள் வரத்து அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலீடுகள் அதிகரிப்பு

முதலீடுகள் அதிகரிப்பு

எஸ்ஐபி-யில் முதலீடானது 13,000 கோடி ரூபாயினை தாண்டியுள்ளது. இதே உள்நாட்டு முதலீட்டாளர்களும் முதலீட்டினை அதிகரித்துள்ளது. இது தொடர்ந்து சந்தையானது ஏற்றம் காணலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சி

பொருளாதார வளர்ச்சி

இதற்கிடையில் இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதமானது நடப்பு ஆண்டில் 6.5% - 7% ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை மூடீஸ் நிறுவனம் 7% ஆக இருக்கலாம் என திருத்தம் செய்துள்ளது. எப்படியிருப்பினும் சர்வதேச பொருளாதாரம் என்பது சரிவினைக் காணலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையிலும், இந்திய பொருளாதாரம் அந்தளவுக்கு வளர்ச்சி காண வாய்ப்பில்லை என நிபுணர்கள் கூறுகின்றனர். எப்படியிருப்பினும் பொருளாதாரம் மேம்படத் தொடங்கியுள்ளது.

வருவாய் அதிகரிப்பு

வருவாய் அதிகரிப்பு

இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபம் கூட செப்டம்பர் காலாண்டில் மேம்படத் தொடங்கியுள்ளது. இது மேற்கொண்டு சந்தையின் ஏற்றத்திற்கு வழிவகுத்துள்ளது. எப்படியிருப்பினும் சர்வதேச சந்தையில் நிலவி வரும் தாக்கத்திற்கு மத்தியில் சந்தையில்சந்தையில் ஏற்ற இறக்கம் தொடரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சென்செக்ஸ் லாபம்

சென்செக்ஸ் லாபம்

எப்படியிருப்பினும் நடப்பு ஆண்டில் சென்செக்ஸ் 6% என்ற லெவலில் லாபம் கண்டுள்ளது. இது தொடர்ச்சியாக ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காலாண்டில் இந்திய சந்தையில் முதலீட்டாளர்கள் 2.5 பில்லியன் டாலர் முதலீடுகளை அதிகரித்துள்ளது. இது 2022ல் 20 பில்லியன் டாலர்களை வெளியேற்றியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+