அது மட்டும் நடந்தால் தங்கம், வெள்ளி, நிஃப்டி என்னவாகுமோ? ஈரான் போர் மத்தியில் நிபுணர்கள் எச்சரிக்கை?

உலக பொருளாதாரத்தின் இதயமாக கருதப்படும் மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், முதலீட்டு உலகம் ஒரு மிகப்பெரிய ஆயில் ஷாக்கை (Oil Shock) எதிர்நோக்கி காத்திருக்கிறது. கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 200 டாலரை தொடும் பட்சத்தில், அது இந்திய பங்குச் சந்தையை நிலைகுலைய செய்யுமா அல்லது தங்கம் மற்றும் வெள்ளியை புதிய உச்சத்திற்கு தள்ளுமா?

வரலாறு காணாத வகையில் ஹார்மூஸ் ஜலசந்தியில் முடக்கப்படும் அபாயம் நிலவுவதால், உங்கள் போர்ட்ஃபோலியோவை தற்காத்து கொள்ள நிபுணர்கள் வழங்கும் முக்கியமான எச்சரிக்கைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம். பதற்றமான இந்த நேரத்தில் முதலீட்டாளர்கள் செய்ய வேண்டியது என்ன? முதலீடு இப்போது செய்யலாமா, வேண்டாமா? அதை எப்படி செய்யலாம்? வாருங்கள் பார்க்கலாம்.

அது மட்டும் நடந்தால் தங்கம், வெள்ளி, நிஃப்டி என்னவாகுமோ?ஈரான் போர் மத்தியில் நிபுணர்கள் எச்சரிக்கை?

ஈரான் - இஸ்ரேல் அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் மத்தியில், தொடர்ந்து எந்த நேரத்தில் என்னவாகுமோ என்ற அச்சமே உலக நாடுகளிடையே காணப்படுகிறது. குறிப்பாக வளைகுடா நாடுகளில் ஏற்படும் சிறு பாதிப்பும் இந்தியா போன்ற நாடுகளில் பெரும் பாதிப்பை எதிர்கொள்ளும் என்ற அச்சம், இந்திய நிதிச் சந்தையை ஆட்டி படைத்து வருகிறது. இந்த சூழலில் ஹார்மூஸ் வழியாக எண்ணெய் வணிகம் தடைபட்டுள்ளதால், கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 200 டாலர்களை எட்டலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.

ஏற்கனவே விலையானது 100 டாலர்களை கடந்துள்ள நிலையில், அது இந்தியா போன்ற பெரிய இறக்குமதியாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழலில் இன்னும் அதிகரித்தால், அது இந்தியாவின் எரிபொருள் சந்தையை எப்படி பாதிக்குமோ, நிதிச் சந்தையை எப்படி பாதிக்குமோ என்ற அச்சமும் நிலவி வருகிறது. குறிப்பாக பாதுகாப்பு புகலிடமான தங்கம் மற்றும் வெள்ளி விலையில் எந்த அளவுக்கு ஏற்றத்தை காண வழிவகுக்குமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.

இதனிடையே இந்திய பங்குச் சந்தையில் வீழ்ச்சி ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியா அதிகளவிலான எண்ணெய் இறக்குமதி செய்து வருவதால், அதன் தாக்கம் அதிகமாக இருக்கும். இது ரூபாய் மதிப்பு சரிய வழிவகுக்கும். வர்த்தக பற்றாக்குறையையும் அதிகரிக்கும். இதன் எதிரொலியாக இன்னும் இந்திய சந்தையில் இருந்து முதலீடுகள் வெளியேறலாம். இது பங்குச் சந்தையிலும் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தும். அதோடு எரிவாயு சார்ந்த வணிகங்களும் பாதிக்கப்படும் என்பதால், அவற்றின் வருவாயும் சரிவை சந்திக்கும். இது பல்வேறு பங்குகள் அதல பாதாளத்தை நெருக்க வழிவகுக்கும்.

இருப்பினும் எண்ணெய் விலை 200 டாலர்களை எட்டுமா என்ற கேள்வியானது பலரின் மத்தியிலும் எழுந்துள்ளது. தொடர்ந்து ஈரானை குறி வைத்து வரும் டிரம்ப், தொடர்ந்து அதன் எண்ணெய் வளங்கள் & கட்டமைப்புகள், முக்கிய தளங்கள் மீது தாக்குதல் நடத்தியும் வருகிறது.

சர்வதேச எரிசக்தி சந்தையில் இப்போது ஒரு மெகா சுனாமி உருவாகி கொண்டிருக்கிறது. உலகின் மிக முக்கியமான கடல் வழிப் பாதையான ஹார்மூஸ் ஜலசந்தி நீண்ட காலம் முடக்கப்பட்டால், உலகத் தேவையில் 15% (சுமார் 1.5 கோடி பேரல்) கச்சா எண்ணெய் விநியோகம் அப்படியே நின்றுவிடும் என Wood Mackenzie நிறுவனம் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த விநியோக தடையால் கச்சா எண்ணெய் விலை கற்பனை செய்ய முடியாத அளவாக பேரலுக்கு 150 முதல் 200 டாலர்கள் வரை எகிறக்கூடும். அது மட்டும் நடந்தால் தங்கம் விலையானது தற்போதைய லெவலில் இருந்து 15 - 25% அதிகரிக்கலாம்.இது சர்வதேச சந்தையில் 5,800 டாலர் முதல் 6,500 டாலர்களை எட்டலாம் என்றும், வெள்ளி விலையானது 25 - 40% அதிகரிக்கலாம் என்றும், இது 110 - 130 டாலர்களை எட்டலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இது மத்திய வங்கிகளின் நடவடிக்கைகளை பொறுத்து மாறலாம்.

இதே அடுத்த 3 - 4 மாதங்களுக்கு எண்ணெய் விலை தொடர்ந்து 100 டாலர்களுக்கு மேல் தொடர்ந்தால், நிஃப்டி 50 ஆனது 10% சரிவை சந்திக்கும் என எம்கே குளோபல் கணித்துள்ளது. இதே 200 டாலர்களை சந்திக்கும் தருணத்தில் சொல்லவே வேண்டாம், நிச்சயம் ஒரு மிகப்பெரிய சரிவு இருக்கும். ஆக முதலீட்டாளர்கள் மிக கவனமுடன் போர்ட்ஃபோலியோவை பிரித்து முதலீடு செய்வது நல்லது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+