இந்திய பங்குச் சந்தைகள் கடந்த சில மாதங்களாக தொடர் சரிவை சந்தித்து வருகிறது. குறிப்பாக கடந்த செப்டம்பர் இறுதி முதல் தற்போது வரை பங்குச்சந்தை பெரிய எழுச்சி காண முடியாமல் தடுமாற்றத்தில் உள்ளது. இந்த சூழ்நிலையில், மத்திய அரசு நாளை 2025-26ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது.
பொதுவாக நம் நாட்டில் பங்குச் சந்தையின் போக்குகளை வடிவமைப்பதில் மத்திய பட்ஜெட் வரலாற்ற ரீதியாக முக்கிய பங்கு வகித்துள்ளது. எதிர்வரும் பட்ஜெட்டில், மூலதனசெலவு, உற்பத்தித்துறை வளர்ச்சியை ஊக்குவித்தல் மற்றும் பெரிய பொருளாதார நிலைத்தன்மையை பராமரித்தல் ஆகியவற்றில் அரசு கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாரம்பரியமாக, பட்ஜெட் அறிவிப்புகள் பங்குச் சந்தையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்படுத்த கொள்கை நடவடிக்கைகள் மற்றும் நிதி ஒதுக்கீடுகளின் அடிப்படையில் துறை செல்வாக்கு செலுத்தும். பட்ஜெட் அறிவிப்புகள் சாதகமாக அமைந்த துறைகளை சேர்ந்த பங்குகள் ஏற்றம் காணும்.
மத்திய பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகள் காரணமாக, இன்று வரையிலான கடந்த 5 வர்த்தக தினங்களில் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் ஏற்றம் கண்டுள்ளது. பட்ஜெட் அறிவிப்புக்கு பிறகு பங்குச் சந்தை செயல்திறன் எப்படி இருக்கும் என்பது குறித்து பலவிதமான கருத்துகள் நிலவுகின்றன.
இந்நிலையில், தரகு நிறுவனமான எம்கே குளோபல், இதுவரையிலான பட்ஜெட்டுக்கு பிந்தைய பங்குச் சந்தையின் நிலவரத்தை கணக்கில் கொண்டு, குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட காலங்களில் பல்வேறு குறியீடுகளில் பட்ஜெட்டுக்கு பிந்தைய செயல்திறனை பகுப்பாய்வு செய்துள்ளது.
இந்த ஆய்வு பல்வேறு துறைகளில் தனித்துவமான போக்குகளை வெளிப்படுத்துகிறது. மேலும் இது வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு புரிதல் அல்லது விழிப்புணர்வை வழங்குகிறது.
குறுகிய கால செயல்திறன்: எம்கே குளோபல் நிறுவனத்தின் தரவுகளின்படி, (பட்ஜெட் தாக்கல் செய்து ஒரு வாரம் கழித்து) பெரும்பாலான குறியீடுகள் குறுகிய காலத்தில் ஏற்றமான போக்கை காட்டுகின்றன. குறியீடுகளின் பாசிட்டிவ் குளோசிங் விகிதம் 55 சதவீதம் முதல் 91 சதவீதம் வரை என்ற அளவில் உள்ளது. குறிப்பாக பார்மா அதிகபட்சமாக 91 சதவீத பாசிட்டிவ் குளோசிங் விகிதத்தை கொண்டுள்ளது. அடுத்து மீடியா இன்டெக்ஸ் 82 சதவீத பாசிடிவ் குளோசிங் விகிதத்தை வைத்துள்ளது.
நடுத்தர கால செயல்திறன்: பட்ஜெட் தாக்கல் செய்து 2 வாரங்கள் கழித்து பெரும்பாலான குறியீடுகளில் பாசிட்டிவ் குளோசிங் விகிதத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது. இது ஏற்ற போக்கு குறைந்ததே வெளிப்படுத்துகிறது. குறிப்பாக, பிஎஸ்யு பேங்க் இன்டெக்ஸின் பாசிட்டிவ் குளோசிங் விகிதம் 73 சதவீதத்திலிருந்து 36 சதவீதமாக குறைந்துள்ளது. அதேசமயம், பார்மா இன்டெக்ஸ் 73 சதவீத பாசிட்டிவ் குளோசிங் விகிதத்தை கொண்டுள்ளது. மேலும் இத்துறை 2 சதவீதம் ஆதாயத்தை கொடுத்துள்ளது.
நீண்ட கால செயல்திறன்: பட்ஜெட் தாக்கல் செய்து ஒரு மாதத்துக்கு பிறகு பெரும்பாலான குறியீடுகள் மேலும் பாசிட்டிவ் குளோசிங் சரிவை சந்தித்துள்ளன. பெரும்பாலான குறியீடுகள் பாசிட்டிவ் குளோசிங் காட்டிலும் நெகட்டிவ் குளோசிங்கை சந்தித்துள்ளன. என்எஸ்இ மெட்டல் இன்டெக்ஸ் அதிகபட்சமாக சராசரி 11 சதவீத பாசிட்டிவ் ஆதாயத்தை கொடுத்துள்ளது. அதேசமயம் இந்த இன்டெக்ஸின் பாசிட்டிவ் குளோசிங் விகிதம் 45 சதவீதம் மட்டுமே. இது பங்குச் சந்தையில் அதிக ஏற்ற இறக்கம் நிலவுவதை வெளிப்படுத்துகிறது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
Story written by: Subramanian
More From GoodReturns

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications