சென்ற வாரத்தின் ஏற்ற இறக்கங்கள் முடிவுக்கு வருமா அல்லது திங்கட்கிழமை சந்தை மீண்டும் ஒரு ரத்த களறியை சந்திக்குமா - இதுதான் தற்போது ஒவ்வொரு முதலீட்டாளரின் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் மில்லியன் டாலர் கேள்வி.
கடந்த வார இறுதியில் நிஃப்டி 23,100 புள்ளிகளுக்கு மேல் நிலைபெற்று நம்பிக்கை அளித்தாலும், உலகளாவிய சூழல்கள் இன்னும் பதற்றமான சூழலிலேயே இருக்கின்றன. குறிப்பாக கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அந்நிய முதலீட்டாளர்களின் வெளியேற்றம் போன்றவை இந்திய சந்தைக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன.

நாளை காலை மணி 9:15-க்கு வர்த்தகம் தொடங்கும்போது, காளைகளின் கை ஓங்குமா அல்லது கரடிகள் சந்தையை ஆக்கிரமிக்குமா? சந்தையின் போக்கை மாற்ற போகும் அந்த முக்கிய காரணிகள் என்ன? நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான லெவல்கள் என்னென்ன? வாருங்கள் பார்ப்போம்.
உள்நாட்டு ஈக்விட்டி சந்தையானது கடந்த வார இறுதியில் சற்று பலவீனமான போக்கையே காட்டுகிறது. மத்திய கிழக்கு பகுதிகளில் நிலவி வரும் பதற்றம் மத்தியில், கச்சா எண்ணெய் ஆனது பேரலுக்கு 100 டாலர்களுக்கு மேலாக காணப்படுகிறது. இதனிடையே அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பானது சரிவைக் கண்டு வருகிறது.
அன்னிய முதலீடுகளும் தொடர்ந்து வெளியேறி வரும் நிலையில், பங்குச் சந்தையானது இன்னும் எந்த மாதிரியான போக்கை சந்திக்குமோ என்ற அச்சமே நிலவி வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று சென்செக்ஸ் 325 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 74,532 புள்ளிகளாகவும், நிஃப்டி 112 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 23,114 புள்ளிகளாகவும் காணப்பட்டது. கடந்த சில வர்த்தக தினங்களான ஏற்றம் கண்டு வந்த சந்தை குறியீடுகளானது, வரும் திங்கட்கிழமை அன்று சரிவை சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வாரத்தில் அதிக ஏற்ற இறக்கத்தை கண்ட சந்தையானது, ஒரு கட்டத்தில் ஒருங்கிணைந்த நிலையை எட்டியது. இது கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சிறு சரிவு, பங்குச் சந்தைக்கு சாதகமாக பார்க்கப்பட்டது.
அதுவும் புவிசார் அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில், கச்சா எண்ணெய் விலையானது உச்சத்தில் இருந்து வரும் நிலையில், இன்னும் மேற்கு ஆசிய நாடுகளில் பதற்றமான சூழலே காணப்படுகிறது. இந்த நிலையில் தொடர்ந்து அன்னிய முதலீடுகளும் வெளியேறி வருகின்றன. கடந்த வாரத்தில் 29,900 கோடி ரூபாய் மதிப்பிலான அன்னிய முதலீடுகள் வெளியேறின. அதேசமயம் இந்திய முதலீட்டாளர்கள் 30,600 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டை செய்து சந்தையில் பெரும் சரிவை தடுத்துள்ளனர்.
முக்கிய லெவல்களை பார்க்கும்போது நிஃப்டி 50 குறியீடானது 23,000 என்ற முக்கிய லெவலில் காணப்படுகிறது. இது மேற்கொண்டு 22,900 - 22,950 என்ற லெவலை உடைத்து கீழாக சரிந்தால், சந்தை மேற்கொண்டு கடும் சரிவை சந்திக்கலாம். இது 22,000 புள்ளிகளை கூட எட்ட வாய்ப்பிருக்கிறது. அதேசமயம் முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவல் ஆக 24,000 புள்ளிகள் பார்க்கப்படுகிறது.
பேங்க் நிஃப்டியின் முக்கிய லெவல் ஆக உடனடி சப்போர்ட் ஆக 52,300 - 52,500 புள்ளிகளாகவும், ரெசிஸ்டன்ஸ் லெவல் ஆக 54,800 புள்ளிகளாகவும், அதை அடுத்து முக்கிய புள்ளியாக 55,700 புள்ளியாகவும் இருக்கும் என நிபுணர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
இதே சென்செக்ஸ் ஆனது 74,000 புள்ளிகள் என்பது முக்கிய சப்போர்ட் புள்ளிகளாக இருக்கும். ஒரு வேளை சந்தையானது ஏற்றம் கண்டால், 75,500 புள்ளிகளாகவும், அடுத்து 77,000 புள்ளிகளாகவும் இருக்கலாம்.
இதனிடையே எனர்ஜி பங்குகள் மற்றும் பார்மா பங்குகள் தொடர்ந்து முதலீட்டாளர்களை கவரலாம். மெட்டல் பங்குகளும் இதில் பலன் அடையலாம்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்

40 ஆண்டுகள், 15 நெருக்கடி.. தட்டி தூக்கிய பங்கு சந்தை.. முதலீட்டாளர்களுக்கு முக்கிய பாடம்..!

போருக்கு நடுவில் குத்தாட்டம்! சென்செக்ஸ் 2350 புள்ளிகள் உயர உண்மை காரணம் என்ன? பங்குகளில் முதலீடு செய்யலாமா?

Sensex: ஒன்னில்ல இரண்டில்ல.. 9 லட்சம் கோடி இழப்பு.. தேம்பி தேம்பி அழும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்..!!

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!



Click it and Unblock the Notifications

