கடந்த சில வாரங்களாகவே இந்திய பங்கு சந்தையானது பெரும் பதற்றத்தில் இருந்து வரும் நிலையில், இனி வரவிருக்கும் வாரத்தில் எப்படியிருக்குமோ? என்ற பதற்றம் இருந்து வருகின்றது.
தொடர்ந்து பல முறை வட்டி விகிதம் என்பது அதிகரித்து வரும் சூழலில், இனியும் பணவீக்கத்திற்கு எதிராக வட்டி அதிகரிக்கலாம் என்ற சூழலே இருந்து வருகின்றது.
அமெரிக்காவின் மத்திய வங்கி கூட்டத்திலும் வட்டி விகிதம் என்பது அதிகரிக்கலாம் என்ற சூழலே இருந்தே வருகின்றது.
ஜிடிவி வெளியாகலாம்
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டியானது 59,500 மற்றும் 17,500 என்ற லெவலுக்கு கீழாக முடிவடைந்துள்ள நிலையில், வரவிருக்கும் வாரத்தில் ஜிடிபி தரவானது வெளியாகவுள்ளது. ஆக இதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். ஆட்டோமொபைல் துறை சார்ந்த பங்குகளும் கவனிக்க வேண்டிய பங்குகளாக உள்ளன.
முதலீட்டாளர்களுக்கு இழப்பு
கடந்த வெள்ளிக்கிழமையன்றே சற்றே சரிவில் முடிவடைந்த நிலையில், சென்செக்ஸ் பிப்ரவரி 24வுடன் முடிவடைந்த வாரத்தில் 1538.64 புள்ளிகள் அல்லது 2.52% சரிவினைக் கண்டும் முடிவடைந்துள்ளது.
இதே நிஃப்டி 478.4 புள்ளிகள் அல்லது 2.67% சரிவினைக் கண்டு முடிவடைந்துள்ளது. இந்த வாரத்தில் முதலீட்டாளர்களுக்கு 6.86 லட்சம் கோடி ரூபாய் இழப்பினை கண்டுள்ளனர்.
அழுத்தம் ஏற்படுத்தலாம்
இதற்கிடையில் வரும் வாரத்திலும் சந்தையானது சரிவடையலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர். குறிப்பாக வங்கி பங்குகள் மற்றும் நிதித்துறை சார்ந்த பங்குகள் அழுத்தத்தில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு சந்தையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம். இதற்கிடையில் ரியால்டி துறை மற்றும் மெட்டல் துறை என பலவும் சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அழுத்தம் ஏற்படுத்தலாம்
தொடர்ந்து சர்வதேச முதலீட்டாளர்கள் வெளியேறி வரும் நிலையில், சர்வதேச சந்தையில் இருந்தும் அழுத்தத்தில் காணப்படுகின்றது. ஆக வரும் வாரத்தில் சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றம், இந்திய சந்தையிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது தவிர வரவிருக்கும் நிலையில் பொருளாதாரம் குறித்தான தரவு மற்றும் முக்கிய தரவுகளும் வெளியாகவுள்ளது. ஆக இதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
முக்கிய தரவுகள்
அமெரிக்காவின் பி எம் ஐ குறித்தான தரவானது வெளியாகவுள்ள நிலையில், இதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். எனினும் வேலை குறித்தான தரவு, பெடரல் ரிசர்வ் வங்கி குறித்தான தரவு என்பதும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது தவிர வட்டி விகிதம், பத்திர சந்தை என பலவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் .
ரஷ்யா - உக்ரைன் பிரச்சனை
இது தவிர ரஷ்யா - உக்ரைன் பிரச்சனை என பலவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இதுவும் வரவிருக்கும் நாட்களில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். முக்கிய ஜிடிபி குறித்தான தரவு தொடங்கி முக்கிய துறை சார்ந்த தரவுகள் வரையில் வெளியாகவுள்ளது. இதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
முக்கிய லெவல்
இதற்கிடையில் வரவிருக்கும் வாரங்களில் உணவும் மற்றும் எண்ணெய் ஏற்றுமதி என பலவும் கவனிக்க வேண்டியவற்றில் ஒன்றாக உள்ளது. மூன்றாவது காலாண்டில் ஜிடிபி விகிதம் 6.3% எனும் அளவுக்கு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நிஃப்டி 17,100 என்ற முக்கிய சப்போர்ட் லெவலை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications