வரும் வாரத்தில் இந்திய பங்கு சந்தையானது பெரியளவில் ஏற்ற இறக்கத்தினை காணலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த வெள்ளிக்கிழமையன்று சந்தையானது ஏற்றத்தில் முடிவடைந்தது. நாளை சந்தை என்பது இருந்தாலும் மார்ச் 7 அன்று மீண்டும் ஹோலி விடுமுறையாகும்.
கடந்த மார்ச் 3 அன்று சென்செக்ஸ் 899.62 புள்ளிகள் ஏற்றம் கண்டு அல்லது 1.53% ஏற்றம் கண்டும், 59,808.97 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது.
இதே நிஃப்டி 272.40 புள்ளிகள் அல்லது 1.57% ஏற்றம் கண்டு, 17,594.30 புள்ளிகளாகவும் முடிவடைந்தது.
ஐஐபி தரவு
வரும் வாரத்தில் இடையில் விடுமுறை நாளும் வரவுள்ள நிலையில், தொழில் துறை சார்ந்த முக்கிய தரவான ஐஐபி வெளியாகவுள்ளது. இதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது மார்ச் 10 அன்று வெளியாகவுள்ளது. கடந்த டிசம்பர் 2022ல் கடந்த ஆண்டினை காட்டிலும் இந்தியாவில் 4.3% அதிகரித்து காணப்பட்ட்டது. எனினும் இது கடந்த நவம்பரில் 7.3% ஏற்றத்தில் கானப்படுகின்றது. இந்த நிலையில் வரவிருக்கும் வாரத்தில் வெளியாகவிருக்கும் தரவானது கவனம் பெற்ற ஒன்றாக மாறியுள்ளது.
வங்கி தரவுகள்
வங்கிகளின்டெபாசிட் வளர்ச்சி, கடன் வளர்ச்சி, அன்னிய செலவாணி கையிருப்பு என பலவும் மார்ச் 10 அன்று வெளியிடப்படலாம் என தெரிகின்றது. ஆக இதுவும் கவனிக்கப்பட வேண்டிய காரணிகளில் ஒன்றாக உள்ளது. ஆக இதுவும் சந்தையில் பெரியளவில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
அன்னிய போர்ட்போலியோ முதலீடு
தொடர்ந்து அன்னிய போர்ட்போலியோ முதலீடுகளானது மார்ச் 4வரையிலான காலகட்டத்தில் வெளியேறி வரும் நிலையில், வரும் வாரத்தில் இதுவும் கவனம் பெறும் ஒன்றாக உள்ளது. எனினும் அமெரிக்காவின் GQG பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் முதலீடு உள்பட சந்தையில் ஊக்கத்தினை ஏற்படுத்தலாம். இதுவும் வரும் வாரத்தில் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய காரணிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
எதில் முதலீடு செய்ய விருப்பம்?
அன்னிய போர்ட்போலி முதலீடுகளில் நிதித்துறை, கேப்பிட்டல் குட்ஸ் உள்ளிட்ட பலவும் முதலீடுகளை ஈர்க்கும் துறையாக இருக்கலாம். அதேசமயம் ஆட்டோமொபைல் துறை, எண்ணெய் & கேஸ் மற்றும் மெட்டல் உள்ளிட்ட துறைகளில் முதலீடுகள் குறையலாம்.
அமெரிக்க தரவுகள்
இதுதவிர அமெரிக்காவின் முக்கிய பொருளாதார தரவுகளும் வெளியாகவுள்ளது. இதுவும் சந்தையில் மிகப்பெரிய அளவிலான தாக்கத்தினை ஏற்படுத்தலாம். குரிப்பாக அமெரிக்காவின் தொழிற்சாலை ஆர்டர்கள் மார்ச் 6 அன்றும், மொத்த இருப்பு குறித்த தரவானது மார்ச் 7 அன்றும், மார்ச் 8 அன்று வேலையின்மை நலன் குறித்தான தரவு, பண்னை அல்லாத வேலையின்மை தரவு, வேலையின்மை விகிதம் என பல முக்கிய தரவுகள் வெளியாகவுள்ளது. ஆக வரும் வாரத்தில் சந்தையில் ஏற்ற இறக்கம் என்பது அதிகம் இருக்கலாம்.
நிஃப்டி லெவல்கள்
டெக்னிக்கலாக நிஃப்டியில் டபுள் பாட்டம் பார்ம் ஆகியுள்ள நிலையில், இங்கிருந்து ஏற்றம் காணலாம். அதேபோல தினசரி கேண்டில் மற்றும் வார கேண்டிலும் ஏற்றம் காணலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. நிஃப்டியில் 17,400 மேலாக காணப்பட்டால், அது தொடர்ந்து ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!



Click it and Unblock the Notifications