நாட்டின் டாப் 5 ஐடி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ நேற்று தனது கடந்த மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டது. 2025 மார்ச் காலாண்டில் விப்ரோ நிறுவனம் நிகர லாபமாக ரூ.3,570 கோடியும், வருவாயாக ரூ.22,504 கோடியும் ஈட்டியுள்ளது. இருப்பினும் விப்ரோவின் நிதி நிலை முடிவுகள் முதலீட்டாளர்களை கவரும் வகையில் அமையவில்லை.
விப்ரோ நிறுவனத்தின் கடந்த மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகள் கலவையாக இருந்தது மற்றும் அந்நிறுவனத்தின் 2025 ஏப்ரல் காலாண்டின் வருவாய் வழிகாட்டுதல்கள் சந்தை எதிர்பார்ப்பை காட்டிலும் குறைவாக இருந்தது. இதனையடுத்து சில தரகு நிறுவனங்கள், 2025-26ம் நிதியாண்டுக்கான விப்ரோ நிறுவனத்தின் வருவாய் குறித்த தங்கள் மதிப்பீடுகளை 3-4 சதவீதம் குறைத்தன.

இதனால் இன்று இந்திய பங்குச் சந்தையில் விப்ரோ பங்கின் விலை பலத்த சரிவை சந்தித்தது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே விப்ரோ பங்கின் விலை 6 சதவீதம் குறைந்து ரூ.232.20ஆக சரிவடைந்தது. விப்ரோ பங்கின் விலை சரிவால் முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் என்றாலும், அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பது அசிம் பிரேம்ஜியும், நிறுவனத்தின் புரோமோட்டர்கள்தான்.
விப்ரோ நிறுவனத்தின் அசிம் பிரேம்ஜிக்கு நேரடியாக 43.11 கோடி பங்குகள் அல்லது 4.12 சதவீத பங்கு மூலதனத்தை கொண்டுள்ளார்.இன்று விப்ரோ விலை 6 சதவீதம் குறைந்தால் அசிம் பிரேம்ஜிக்கு சுமார் ரூ.586 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி, அசிம் பிரேம்ஜி வசம் உள்ள மொத்த பங்குகளின் மதிப்பு ரூ.10,679 கோடியாக இருந்தது. இன்று பங்கு விலை சரிவடைந்ததையடுத்து அந்த பங்குகளின் மதிப்பு ரூ.10,092 கோடியாக சரிவடைந்தது.
நிதி சேவைகள் நிறுவனமான மோதிலால் ஓஸ்வால் ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் கூறுகையில், விப்ரோ நிறுவனத்தில் 2025-26ம் நிதியாண்டில் நிலையான நாணய விகிதத்தில் வருவாயில் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 1.9 சதவீதம் குறையலாம். விப்ரோவின் செயல்பாட்டு லாப வரம்புகள் 17.2 சதவீதமாக இருக்கும். விப்ரோ பங்கு குறித்த எங்கள் மதிப்பீடான விற்பனை என்பதை ரூ.215 இலக்கு விலையுடன் மீண்டும் வலியுறுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளது.
மோதிலால் ஓஸ்வால் ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் மதிப்பீட்டின்படி, விப்ரோ பங்கு தற்போதைய விலையை காட்டிலும் மேலும் சரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டில் இதுவரையிலான காலத்தில் விப்ரோ பங்கு விலை 22 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. அதேசமயம் இதே காலத்தில் சென்செக்ஸ் 2.31 சதவீதம் மட்டுமே சரிந்துள்ளது.
ஏடிஎம் எந்திரங்களோடு உலா வரும் ரயில்கள்... இனி ஓடும் ரயிலிலும் பணம் எடுக்கலாம்..!
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications