சர்வதேச நிலவரங்களால் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்த ஆண்டில் இதுவரை மட்டும் தங்கத்தின் விலை 12 சதவீதம் அதிகரித்துள்ளது. தங்கம் விலை கொஞ்சமாவது குறையாதா என்ற ஏக்கத்தில் நடுத்த வர்க்கத்தினர் உள்ளனர். ஆனால் தங்கததின் விலையோ ஒரு நாள் குறைந்தால் அதற்கு அடுத்த நாள் உயர்ந்து விடுகிறது. இந்த சூழ்நிலையில், தங்கம் விலை குறையும் என்று நினைத்து கூட பார்க்காதீர்கள், தங்கத்தின் விலை உயரவே செய்யும் என்று டேவிட் டெய்ட் தெரிவித்துள்ளார்.
உலக தங்க கவுன்சிலின் தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் டெய்ட் பேட்டி ஒன்றில் கூறியதாவது: முதலீட்டாளர்களுக்கு மட்டுமல்ல, மத்திய வங்கிகளுக்கும் தங்கம் ஒரு முக்கியமான சொத்தாகவே உள்ளது. அதிகரித்து வரும் உலகளாவிய கடன் மற்றும் பணவீக்க அழுத்தங்கள் தங்கத்தின் விலையை தொடர்ந்து உயர்த்தும். தற்போது உலக கடன் 76 லட்சம் கோடி டாலராக உள்ளது, மேலும் 13 லட்சம் கோடி டாலர் கடன் அதிகரிக்கும். வரி மற்றும் பணவீக்கம் வட்டி விகிதத்தை அதிகரிக்கும் இதனால் கடன் நிதியுதவி ஒரு பெரிய கவலையாக மாறும். தங்கம் எப்போதும் அந்த இடைவெளியை நிரப்பியுள்ளது. மேலும் தங்கத்தின் விலை அதிகரிப்பதை தவிர வேறு எந்த மாற்றத்தையும் நான் காணவில்லை.

பல நிறுவனங்கள், சொத்து மேலாளர்கள் மற்றும் மியூச்சுவல் பண்டுகள் இன்னும் தங்கத்தை ஒரு முதலீடாக கருதவில்லை. ஜப்பானில் மூத்த குடிமக்களிடமிருந்து செல்வத்தை பெறும் இளைய தலைமுறையினர் நிதி ரீதியாக அதிக கல்வியறிவு பெற்றவர்கள் மற்றும் அவர்கள் தங்க முதலீடுகளை அதிகரிக்கக் கூடும். சீனாவில் காப்பீட்டு நிறுவனங்கள் தங்கத்தில் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளன. தங்க சந்தை மதிப்பு 4.8 லட்சம் கோடி டாலர்,தற்போதைய முதலீடுகள் வெறும் 1 சதவீதம் மட்டுமே. இருப்பினும் 5 சதவீத ஒதுக்கீடு கூட ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். பலர் 10-15 சதவீதம் வரை முதலீடு செய்வார்கள்.
இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள் உள்ளனர். ஆனால் ரிசர்வ் வங்கிகளில் தங்கத்தை வாங்குவதுதான் தங்கத்துக்கான தேவையை அதிகரிக்கும்.வளரும் நாடுகளின் மத்திய வங்கிகள் இன்னும் குறைந்த தங்க கையிருப்பையே வைத்திருக்கின்றன. மேலும் அவை தனிப்பட்ட முதலீட்டாளர்கள் போலவே இருப்புகளை நிர்வகிக்கின்றன. அவை தங்கத்தை வாங்கி குவித்து கொண்டே இருக்கும். தங்க பத்திரஙகள் முதலீட்டாளர்களுக்கு சிறந்தவை. ஆனால் அரசாங்கத்திற்கு அவ்வளவு நன்மை பயக்கவில்லை. தங்க இடிஎஃப்கள் அவற்றின் இடத்தை பிடிக்கும். அவை முழுமையாக தங்கத்தால் ஆதரிக்கப்படுகின்றன, பட்டியலிடப்பட்டுள்ளன மற்றும் ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் முதலீடு செய்வதற்கு மிகவும் பாதுகாப்பான வழியாகும்.
Story written by: Subramanian
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!



Click it and Unblock the Notifications