அதுதான் சார் முக்கியம்... பதவியை உதறிய சோமேட்டோவின் சிஇஓ.. அடிவாங்கிய எட்டர்னல் பங்கு

நாட்டின் பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சோமேட்டோவின் உரிமையாளர் எட்டர்னல் நிறுவனம். சோமேட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்த ராகேஷ் ரஞ்சன் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே எட்டர்னல் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.75 சதவீதம் குறைந்து ரூ.235ஆக சரிந்தது.

எட்டர்னல் நிறுவனம் தற்போது நிறுவனத்துக்குள் மறுசீரமைப்பு செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாகத்தான் சொமேட்டோவின் தலைமை நிர்வாக அதிகாரி ராகேஷ் ரஞ்சன் பதவி விலகுகிறார். அதேசமயம் அவர் நிறுவனத்தின் வேறு பதவியில் அவர் தொடருவார் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 2023 மே மாதத்தில் இந்த பதவியில் ராகேஷ் ரஞ்சம் பணியமர்த்தப்பட்டார்.

அதுதான் சார் முக்கியம்... பதவியை  உதறிய சோமேட்டோவின் சிஇஓ..  அடிவாங்கிய எட்டர்னல் பங்கு

சோமேட்டோவுக்கு புதிய தலைமை நிர்வாக அதிகாரி நியமிக்கும் வரை, அதன் நிறுவனர் தீபிந்தர் கோயல் உணவு விநியோக பிரிவு வணிகத்தை மேற்பார்வையிடுவார். தற்போது இந்த பதவிக்கு நிறுவனத்தில் உள்ள மற்றும் வெளியாட்களை எட்டர்னல் பரிசீலித்து வருவதாக தகவல். வரும் மாதங்களில் சோமேட்டோவுக்கு புதிய தலைமை நிர்வாக அதிகாரி நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உணவு விநியோகத் துறையில் பரந்த மந்தநிலைக்கு மத்தியில் சோமேட்டோவின் தலைமையில் மறுசீரமைப்பு வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த டிசம்பர் காலாண்டில் எட்டர்னலின் மிகப்பெரிய போட்டியாளரான ஸ்விக்கி. உணவு விநியோக சந்தையில் 43 சதவீத பங்களிப்பை கொண்டிருந்தது. இது முந்தைய காலாண்டில் 42 சதவீதமாக இருந்தது. போட்டி நிறுவனங்கள் 10 நிமிட உணவு விநியோக சேவைகளை விரிவுப்படுத்துவதால், சோமேட்டோ தனது சந்தைப்பங்கினை இழக்க நேரிடும் என எச்சரிக்கை செய்துள்ளனர்

2024 டிசம்பர் காலாண்டில் சோமேட்டோவின் உணவு டெலிவரி வளர்ச்சி மந்தமாகவே இருந்தது. அந்த காலாண்டில் நிறுவனத்தின் மொத்த ஆர்டர் மதிப்பு 2 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டு ரூ.9,913 கோடியாக இருந்தது. எட்டர்னல் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, நிறுவனத்தில் அன்னிய முதலீட்டாளர்களி்ன் உரிமையை (பங்கு மூலதனத்தை) 49.5 சதவீதமாக குறைத்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டில் எட்டர்னல் பங்கு முதலீட்டாளர்களுக்கு 28.52 சதவீதம் ஆதாயம் கொடுத்தது. அதேசமயம் இந்த ஆண்டில் இதுவரை இப்பங்கின் விலை 14.29 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 6 மாதத்தில் இப்பங்கின் விலை 6.80 சதவீதம் சரிந்தது. இருப்பினும் கடந்த 3 மாதங்களில் முதலீட்டாளர்களுக்கு 9.82 சதவீதம் லாபத்தை கொடுத்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் இப்பங்கின் விலை 6.42 சதவீதம் அதிகரித்துள்ளது.

தங்க பத்திரம்: ஒரு யூனிட் ரூ.9,669.. ரிசர்வ் வங்கி அறிவிப்பால் SGB முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்..!
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+