பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தங்கம் இறக்குமதியை குறைக்கும் நோக்கில், தங்கத்தை உலோகமாக வாங்குவதற்கு பதிலாக பத்திரங்களாக மக்களை வாங்க செய்தால் இறக்குமதியை குறைக்கலாமே என்ற எண்ணத்தில், 2015ல் தங்க பத்திர திட்டத்தை கொண்டு வந்தது. ஆண்டுக்கு 2.75 சதவீதம் வட்டி கொடுப்பதாகவும் மத்திய அரசு அறிவித்தது. மக்கள் தங்கத்தை நகைகளாக வாங்குவதற்கு பதிலாக தங்க பத்திரங்களில் முதலீடு செய்ய மக்களை ஊக்குவித்தது. இதனால் தங்க பத்திரங்கள் திட்டத்துக்கு மக்கள் பலத்த வரவேற்பு கொடுத்தனர்.
இருப்பினும் தங்க பத்திரம் திட்டம் தனது முக்கிய நோக்கமான இறக்குமதியை கட்டுப்படுத்தவில்லை. மேலும் தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதால் மத்திய அரசுக்கு பெரிய நிதி சுமையை ஏற்படுத்தி விட்டது. தங்க பத்திர திட்டம் காகிதத்தில் நன்றாக தெரிந்தது, ஆனால் உண்மையில் அது அரசாங்கத்துக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும் திட்டமாக மாறி விட்டது. அதிகரித்து வரும் பொறுப்பு மற்றும் நிதி அழுத்தம் காரணமாக இந்த திட்டத்தை தொடர முடியாது என்பதை மத்திய அரசு தாமதமாக உணர்ந்து கொண்டதாக தெரிகிறது. இதன் எதிரொலியாக கடந்த 2024-25ம் நிதியாண்டு முதல் எந்த புதிய தங்க பத்திர வெளியீட்டையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.

இதுவரை மத்திய அரசாங்கம் மொத்தம் 147 டன் தங்கத்துக்கு சமமான தங்க பத்திரங்களை 67 முறை வெளியிட்டுள்ளது. தங்க பத்திரங்களின் முதிர்வு காலம் 8 ஆண்டுகளாகும். இருப்பினும், அவசர தேவை என்றால் முதலீடு செய்த நாளிலிருந்து 5 ஆண்டுகளுக்கு பிறகு தங்க பத்திரத்தில் மேற்கொண்ட முதலீட்டை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். அந்த வகையில், தற்போது இந்திய ரிசர்வ் வங்கி, ஏப்ரல் 23ம் தேதியிடப்பட்ட 2 தங்க பத்திர திட்டத்தின் சீரிஸ்களுக்கு முன்கூட்டியே பணம் செலுத்துவதை அறிவித்துள்ளது.
2017-18ம் ஆண்டின் சீரிஸ் IV மற்றும் 20218-19ம் ஆண்டின் சீரிஸ் II தங்க பத்திரங்களுக்கு பொருந்தும். இந்த தங்க பத்திரங்கள் அந்தந்த ஆண்டின் அக்டோபர் 23ம் தேதி வெளியிடப்பட்டவை. இந்த பத்திரங்களில் முதலீடு செய்தவர்கள் முன்கூட்டியே திரும்ப பெறுவதற்கான விலை ஒரு யூனிட்டுக்கு ரூ.9,669ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை, இந்திய நகைக்கடைக்காரர்கள் கடந்த நாட்களில் (ஏப்ரல் 17,21,22 ஆகிய தேதிகளில்) வெளியிட்ட 999 தூய்மையான தங்கத்தின் இறுதி விலைகளின் சராரசரியிலிருந்து கணக்கிடப்பட்டுள்ளது.
எட்டு வருட முதிர்வு காலத்துக்கு முன்னதாக தங்க பத்திரத்தில் மேற்கொண்ட முதலீட்டை முதலீட்டாளர்கள் திரும்ப பெற விரும்பினால், நிதிச் சந்தையில் விற்பதா அல்லது ரிசர்வ் வங்கியின் திட்டமிடப்பட்ட முன்கூட்டியே திரும்ப பெறும் செயல்முறையை தேர்ந்தெடுப்பதா என்பதை தேர்வு செய்யலாம்.இந்த பத்திரங்கள் எங்கு வைக்கப்பட்டுள்ள என்பதை பொறுத்து, வங்கிகள், தபால் நிலையங்கள் அல்லது பங்குச் சந்தைகள் உள்பட பல வழிகள் மூலம் முதலீட்டை திரும்ப பெறலாம்.
சளைக்காமல் கடன் வாங்கும் அதானி குழுமம்.. கவுதம் அதானி போடும் மாஸ்டர் பிளான்
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?



Click it and Unblock the Notifications