இந்தியாவிலேயே அதிக மதிப்புடைய ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் Byjus நிறுவனத்திற்கும், இந்நிறுவனத்தின் கடன் வழங்கியவர்களுக்குமான பிரச்சனைக்கு பின் 1.2 பில்லியன் டாலர் கடனுக்கு இனி எவ்விதமான தொகையும் செலுத்த வேண்டாம் என்று பைஜூஸ் முடிவு செய்துள்ளது.
இந்த முடிவு இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் Byjus-ன் எதிர்காலத்தை பாதிக்கக்கூடியதாக இருக்கும். சமீபத்தில் இந்தியாவின் முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் மதிப்பீடு பெரிய அளவில் குறைக்கப்பட்டது.

இதன் படி Byjus நிறுவனம் திங்கட்கிழமை செலுத்த வேண்டிய 40 மில்லியன் டாலர் வட்டியை செலுத்தவில்லை என இதுக்குறித்து அறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர். Byjus நிறுவனம் ஜூன் 6 அன்று ஒரு அறிக்கையில், கடன் தொடர்பாக கடன் வழங்கியவர்களுக்கு எதிராக நியூயார்க் உச்ச நீதிமன்றத்தில் புகார் அறிக்கையை தாக்கல் செய்ததாகக் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று காலத்தில் Byjus நிறுவனத்தின் வர்த்தகம், வருவாய், வாடிக்கையாளர், மதிப்பீடு என அனைத்தும் உச்சத்தை தொட்டது. ஆனால் கொரோனா தொற்றுக்கு பின்பு நிலைமை தலைகீழாக மாறியது. இதன் வாயிலாக Byjus நிறுவனம் பல மாதங்களாக கடன் வழங்கியவர்களிடம் கடனை மறுசீரமைப்பு செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
பல நிறுவனங்கள் கொரோனா தொற்றுக்கு பின்பு கடன் மறுசீரமைப்பு செய்த நிலையில், Byjus நிறுவனம் கடன் வழங்கியவர்களிடம் கடனை மறுசீரமைப்பு செய்ய பேச்சுவார்த்தை நடத்திய முயற்சியில் தோல்வி அடைந்தது. இதனால் முழு பேமெண்ட்டை முன்பு திட்டமிட்டப்படியே செலுத்த வலியுறுத்தியது, இதை ஏற்காத காரணத்தால் 1.2 பில்லியன் டாலர் கடனுக்கு இனி எவ்விதமான தொகையும் செலுத்த வேண்டாம் என்று பைஜூஸ் முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications