தங்கம், வெள்ளி விலையில் நடந்த திடீர் மாற்றம்: நகை வாங்க இது நல்ல நேரமா?

சென்னையில் தங்கம், வெள்ளி விலைகள் இன்றைய தினம் சரிவடைந்துள்ளன. நேற்றைய தினம் தங்கம் , வெள்ளி விலைகள் உயர்ந்த நிலையில் இன்று விலைகள் சரிந்து பொதுமக்களுக்கு ஆறுதலை தந்துள்ளன.

ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு வெளியானதை அடுத்து நேற்று தங்கம், வெள்ளி விலைகள் உயர்வை கண்டன. சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் 340 ரூபாய் விலை உயர்ந்து ஒரு கிராம் 14200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதுவே இன்றைய தினம் 200 ரூபாய் விலை சரிந்து ஒரு கிராம் 14000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம், வெள்ளி விலையில் நடந்த திடீர் மாற்றம்: நகை வாங்க இது நல்ல நேரமா?

சென்னையில் நேற்றைய தினம் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 1,13,600 ரூபாய்க்கு விற்பனையானது அதுவே இன்று ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,12,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது நேற்றுடன் ஒப்பிடும்போது இன்று 22 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 1200 ரூபாய் விலை குறைந்திருக்கிறது. இன்றைய விலை நிலவரப்படி 15 சதவீத சேதாரம் கொண்ட ஒரு ஒரு பவுன் நகை வாங்க வேண்டும் என்றால் கூட நாம் 1.30 லட்சம்த்தை செலவிட வேண்டி இருக்கும்.

Also Read

24 கேரட் சுத்த தங்கத்தின் விலையும் இன்று குறைந்திருக்கிறது ஒரு கிராமுக்கு 218 ரூபாய் விலை குறைந்து 15,273 ரூபாய்க்கும் ஒரு சவரனுக்கு 1844 விலை குறைந்து 1,22,184 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் 210 ரூபாய் விலை சரிந்து ஒரு கிராம் 11,650 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1680 ரூபாய் விலை குறைந்து 93,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை கிராமுக்கு ஐந்து ரூபாய் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. நேற்று 265 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிராம் வெள்ளி இன்று ஐந்து ரூபாய் விலை குறைந்து 260 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 5000 ரூபாய் விலை சரிந்து 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Recommended For You

ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம் நேற்று வெளியானதை அடுத்து உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் சரிவடைந்தன இதன் எதிரொலியாக தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் உயர்ந்தன. ஆனால் இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் நடத்தி இருப்பதால் இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் அப்படியே நீடிக்குமா என்பது கேள்விகுறியாக இருக்கிறது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர தொடங்கியுள்ளது எனவே தங்கத்தின் விலை சரிவடைந்து இருக்கிறது. இன்னும் சில வாரங்களுக்கு தங்கத்தின் விலை இப்படி ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+