TCS அலுவலக மதமாற்ற சர்ச்சையில் புதிய திருப்பம்: மலேசியா தொடர்பு கண்டுபிடிப்பு!!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் அமைந்திருந்த டிசிஎஸ் நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகத்தில் ஊழியர்கள் இஸ்லாம் மதத்திற்கு கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதாகவும் மூளைச்சலவை செய்யப்படுவதாகவும் வெளியான புகார் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த புகார் தொடர்பான விசாரணையில் ஒவ்வொரு நாளும் புதுப்புது தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கின்றன.

டிசிஎஸ் நிறுவனத்திற்கு சொந்தமான நாசிக் அலுவலகத்தில் சில ஆண் ஊழியர்களும் நிதா கான் என்ற பெண் ஊழியரும் சக ஊழியர்களை இலக்கு வைத்து அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியும் மூளை சலவை செய்தும் இஸ்லாமிய மதத்திற்கு மாற்ற முயற்சி செய்திருக்கின்றனர். இது தொடர்பாக தொடர்ச்சியாக புகார் வந்ததை எடுத்து காவல்துறையினர் மஃப்டியில் சென்று இந்த அலுவலகத்தில் ஒரு மாத காலம் கண்காணித்துள்ளனர்.

TCS அலுவலக மதமாற்ற சர்ச்சையில் புதிய திருப்பம்: மலேசியா தொடர்பு கண்டுபிடிப்பு!!

சில ஊழியர்கள் வாட்ஸப்பில் ஒரு குழுவை உருவாக்கி இந்து பெண்களையும் இந்து ஆண்களையும் இலக்கு வைத்து அவர்களை மூளைச்சலவை செய்து, பாலியல் ரீதியாக துன்புறுத்தி கட்டாயப்படுத்தி இஸ்லாம் மதத்திற்கு மாற்ற முயற்சி செய்தது வெளிச்சத்திற்கு வந்தது. இது தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட ஆண் ஊழியர்கள் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். இந்த சம்பவத்தில் மூளையாக செயல்பட்டது நிதா கான் என்ற ஒரு பெண் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

Also Read

தற்போது நிதா கான் தலைமறைவாக இருக்கிறார். இந்த மதமாற்ற புகாரில் மூளையாக செயல்பட்டது இவர். இவர் தான் கருவுற்று இருப்பதாக கூறி முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக இந்த மதமாற்றத்தில் மலேசியா நாட்டை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

நிதா கான் மனு தொடர்பான விசாரணையில் ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர் அஜய் மிஸ்ரா சிறப்பு புலனாய்வு குழுவினர் நிதா கான் எப்படியெல்லாம் சக ஊழியர்களை மதமாற்ற முயற்சி செய்தார் என்பதை கண்டறிந்து இருப்பதாக கூறியிருக்கிறார். அதாவது பெண் ஊழியர்களிடம் பேசி அவர்களுடைய மனதை மாற்றி அவர்களுக்கு புர்கா அணிய கொடுப்பது ,இஸ்லாம் மதம் தொடர்பான புத்தகங்கள் இஸ்லாம் மதம் சடங்குகளை கற்றுக் கொள்வதற்கான செயலிகளை அவர்களின் போனில் இன்ஸ்டால் செய்து கொடுப்பது இஸ்லாம் மதம் தொடர்பான ரீல்ஸ் மற்றும் ஷார்ட்ஸ்களை அவர்கள் போனுக்கு அடிக்கடி அனுப்பி படிப்படியாக அவர்களை மதம் மாற்ற முயற்சி செய்தது தெரியவந்திருக்கிறது.

Recommended For You

மேலும் அவர்களை வீட்டுக்கு விருந்துக்கு அழைத்து அவர்களுக்கு இஸ்லாம் மதத்தில் எப்படி பிரேயர் செய்வது எப்படி புர்கா அணிவது உள்ளிட்டவற்றையெல்லாம் அவர் கற்றுத் தந்திருக்கிறார். மேலும் பெயர் மாற்றம் செய்து அவர்களை மலேசியாவுக்கு அனுப்புவதற்கான பணிகளிலும் நிதா தான் ஈடுபட்டு இருப்பது தெரியவந்திருக்கிறது. இதற்காக பாதிக்கப்பட்ட பெண்களின் கல்வி மற்றும் பிற முக்கிய ஆவணங்களை நிதா கான் மற்றும் அவருடைய குழுவினர் கைப்பற்றி இருக்கிறார்கள். அவர்களை மலேசியாவிற்கு அனுப்புவதற்கான பணிகளை அவர்கள் மேற்கொண்டு இருக்கிறார்கள்.

மலேசியாவில் வேலைவாய்ப்பு என கூறி இவர்களை அனுப்ப அவர் ஏற்பாடு செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனவே வெளிநாடுகளில் இருந்து இவர்களுக்கு மதமாற்றம் செய்வதற்கு நிதி உதவி வந்ததா என்ற கோணத்திலும் தற்போது விசாரணை தீவிர படுத்தப்பட்டுள்ளது. நிதா கானின் மொபைல் போனை கைப்பற்றும்போதும் மேலும் பல தகவல்கள் வெளிவருமென தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அவருக்கு முன் ஜாமின் வழங்க கூடாது என அரசு தரப்பில் வாதிடப்பட்டிருக்கிறது.ஒரு வேளை வெளிநாட்டு தொடர்பு உறுதியானால் நிதா கான் போல மேலும் பல பெண்கள் இந்த நெட்வொர்க்கில் இருக்கிறார்களா என்பன உள்ளிட்ட தகவல்கள் வெளிவரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+