சென்னையில் தொடர்ந்து குறைந்து வந்த வண்ணம் இருந்த ஆபரண தங்கத்தின் விலை இன்றைய தினம் டிவிஸ்ட் அடித்திருக்கிறது. ஈரான் போரை தொடர்ந்து தங்கம் விலை தொடர் சரிவிலேயே இருந்து மக்களுக்கு ஆறுதல் தந்தது. குறிப்பாக தொடர்ச்சியாக 7 நாட்கள் தங்கம் விலை சரிந்து நிம்மதியை தந்தது. ஆனால் தங்கம் விலையில் யாரோ கண்ணு வைத்துவிட்டார்கள் என சொல்லும் அளவுக்கு இன்று விலை உயர்ந்துவிட்டது.
சென்னையில் இன்றைய தினம் தங்கம் விலை லேசாக உயர்வு கண்டிருக்கிறது. சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 13,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதுவே இன்றைய தினம் 13,950 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை ஒரு கிராமுக்கு 50 ரூபாய் விலை கூடி இருக்கிறது. நேற்று 1,11,200 ரூபாய்க்கு விற்பனையான ஒரு சவரன் ஆபரண தங்கம் இன்று 1,11,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை நேற்று காலை, மாலை என இரண்டு முறை சரிவை கண்டது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 670 ரூபாய் விலை குறைந்தது ஒரு சவரன் என பார்க்கும்போது ஒரே நாளில் 5360 ரூபாய் விலை குறைந்திருந்தது. இந்த சூழலில் தான் இன்றைய தினம் தங்கம் விலை லேசான உயர்வு கண்டுள்ளது. இது ஒரு பெரிய விலை உயர்வு இல்லை என்றே சொல்லலாம். இப்போதும் கூட தங்கம் வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் இந்த விலை குறைவு வாய்ப்பினை பயன்படுத்தி தங்கம் வாங்கிக் கொள்ளலாம்.
சென்னையில் ஆபரண தங்கம் தன்னுடைய வரலாற்று உச்சபட்ச விலையான 1,34,000 ரூபாயில் இருந்து 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சரிவை கண்டிருக்கிறது. அடுத்ததாக 24 கேரட் தங்கம் விலை இன்றைய தினம் விலை கூடியிருக்கிறது. சென்னையில் இன்று 24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு 55 ரூபாய் விலை உயர்ந்து 15,218 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 440 ரூபாய் விலை கூடி 1,21,744 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை தொடர்ந்து குறைந்த வண்ணமே இருக்கிறது. இன்று ஒரு கிராம் வெள்ளி 5 ரூபாய் விலை குறைந்து 260 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 5000 ரூபாய் சரிந்து 2.6 லட்சம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது. அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை மாற்றவில்லை, அதே வேளையில் ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து அமெரிக்க டாலர் வலுப்பெறுகிறது. சர்வதேச சந்தையில் டாலர் மதிப்பு உயரும் போதெல்லாம் தங்கம் , வெள்ளி விலை சரியும். அது தான் தற்போதும் நடக்கிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை 7 வது நாளாக வீழ்ச்சி:அடுத்த இலக்கு ரூ.1 லட்சமா அல்லது இன்னும் குறையுமா?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் தடாலடி சரிவு.. தங்க நகை வாங்கும் முன் உஷார்..!!

கோயம்புத்தூர் தங்கம் விலை: தடாலடியாக சரிவு, முதலீட்டு செய்ய நல்ல வாய்ப்பு.. ஆனாலும் பொறுமையாக இருங்க..!!

தங்கம் விலை குறைந்ததால் உடனே முதலீடு செய்ய வேண்டாம்.. முதல்ல இதை படிங்க.. உண்மை தெரியும்..!!

ஈரான் போருக்கு மத்தியில் தங்கத்தை மறந்த இந்தியர்கள்..!! 15 நாட்கள்ல எல்லாமே மாறிடுச்சு..!!

உகாதி நாளில் தங்கம் தந்த சர்ப்பிரைஸ்..!! தொடர்ந்து 7ஆவது நாளாக நடக்கும் மேஜிக்..!!

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. போனா வராது பொழுது போனால் கிடைக்காது..!

தங்கம் விலை இன்று மதுரையில் கணிசமாகக் குறைந்தது: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! |

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு குட் நியூஸ்!! உலக சந்தையில் நடந்த பெரிய மாற்றம்!!

வாரத்தின் முதல் நாளே தங்கம் தந்த சர்ப்ரைஸ்!! வீட்டில் விசேஷம் வச்சிருக்கவங்களுக்கு கொண்டாட்டம்!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போருக்கு பின்னர் நடந்த தலைகீழ் மாற்றம்!! இனி விலை என்ன ஆகும்?

அது மட்டும் நடந்தால் தங்கம், வெள்ளி, நிஃப்டி என்னவாகுமோ? ஈரான் போர் மத்தியில் நிபுணர்கள் எச்சரிக்கை?

பங்குச்சந்தை வீழ்ச்சியிலும் லாபம் பார்க்கும் அதானி..!! தரமான சம்பவம் செய்த அதானி பவர்..!!



Click it and Unblock the Notifications

