இந்தப் பொருட்களுக்கெல்லாம் ஜிஎஸ்டி வரி குறையலாம்..!

ஜிஎஸ்டி அமைப்பின் அடுத்தக் கூட்டம் வருகிற நவம்பர் 10ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்குச் சில முக்கிய அறிவிப்புகளுடன், சாமானியர்களுக்குப் பயனளிக்கும் வகையில் முக்கியப் பொருட்கள் மீதான வரி அதிகளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரி தாக்கல் முறை

வரி தாக்கல் முறை

நவ.10 ஆம் தேதியில் நடைபெறும் இக்கூட்டத்தில் ஜிஎஸ்டி வரி தாக்கல் முறையை மேலும் எளிமைப்படுத்துவது எப்படி என்பதை முக்கியமாக ஆலோசனை செய்யப்பட உள்ளது. இதுமட்டும் அல்லாமல் சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்குக் கூடுதலான வரி தள்ளுபடிகளை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.

முந்தைய மறைமுக வரி விதிப்பில் குறைந்த அளவிலான வாட் வரியே இருந்தது. ஆனால் ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பின் அதிகப்படியான வரி வசூலிக்கப்படுகிறது என்பது SME நிறுவனங்களின் வாதம்.

 

பல பொருட்கள்

பல பொருட்கள்

ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்டுச் சுமார் 4 மாதங்கள் முழுமையாக முடிந்துள்ளது. ஆனால் ஒவ்வொரு ஜிஎஸ்ட் கவுன்சில் கூட்டத்திலும் தொடர்ந்து மாற்றங்களையும் வரி குறைப்பையும் அறிவித்து வரப்படுகிறது. ஆயினும் இன்னும் முழுமையான மற்றும் உறுதியான ஒரு வரி விதிப்பை மத்திய அரசால் நிர்ணயம் செய்ய முடியவில்லை.

இதன் மூலம் பல பொருட்களுக்கு இந்த முறை வரி குறைக்கப்பட உள்ளது.

 

28 சதவீத வரி

28 சதவீத வரி

இதன் மூலம் 28 சதவீதத்தில் இருக்கும் முக்கியப் பொருட்களான பர்னீச்சர், மின் பொத்தான், பிளாஸ்டிக் பைப், வாஷ் பேசின், ஷாப்பூ ஆகியவற்றுக்கான வரியை 18 சதவீதமாகக் குறைக்கப்படும் எனத் தகவல் கிடைத்துள்ளது.

வீட்டு உபயோக பொருட்கள்

வீட்டு உபயோக பொருட்கள்

இக்கூட்டம் முழுமையாகச் சாமானியர்கள் மற்றும் SME குறித்து விவாதிக்கப்படுவதாகத் தெரிகிறது.

மேலும் தற்போது ஜிஎஸ்டி கீழ் 0,5,12,18,28 என்ற வரி விதிப்புகளின் கீழ் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+