இந்தியாவில் ஈகாமர்ஸ் வர்த்தகத்திற்கு இணையாக ஆன்லைன் டாக்ஸி நிறுவனத்தின் வர்த்தகம் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. குறிப்பாக உபர் இந்தியாவில் தனது சேவையை அறிமுகப்படுத்திய பின்பு ஓலா நிறுவனம் டாக்ஸி பார் ஸ்யூர் நிறுவனத்தைக் கைப்பற்றித் தனது சேவையை இந்தியா முழுவதும் அதிரடியாக விரிவாக்கம் செய்து இப்பிரிவில் இன்று வரை ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்நிலையில் உபர் நிறுவனம் சமீபத்தில் உணவு டெலிவரி சேவையான உபர்ஈட்ஸ் என்ற சேவையை அறிமுகம் செய்தது. அதையே தான் ஓலா காப்பி அடித்துள்ளது, ஆனால் கொஞ்சம் பெரிய சைஸ்.
ஓலா நிறுவனம்
உபர்ஈட்ஸ் சேவைக்குப் போட்டியாக ஓலா நிறுவனம் உணவு டெலிவரியில் களமிறங்க முயற்சித்துத் துவண்டுபோன நிலையில், டாக்சி பார் ஸ்யூர் நிறுவனத்தைக் கைப்பற்றிய பாணியில், புட் பாண்டா நிறுவனத்தின் இந்திய வர்த்தகத்தை முழுமையாகக் கைப்பற்றியுள்ளது.
ஸ்வீக்கி
உணவு டெலிவரி துறையில் ஸ்வீக்கி நிறுவனத்திற்குக் கடுமையான போட்டி அளித்துக்கொண்டு இருந்த புட் பாண்டா நிறுவனத்தின் இந்திய வர்த்தகத்தை இதன் தாய் நிறுவனமான டெலிவரி ஹீரோ குரூப் நிறுவனத்திடம் இருந்து கைப்பற்றியுள்ளது.
பங்கு கைப்பற்றுதல்
இரு நிறுவனங்கள் மத்தியிலான நிதி பரிமாற்றங்கள் குறித்து அறிவிப்புகள் எதுவும் வெளியாகாத நிலையில், டெலிவரி ஹீரோ குரூப் நிறுவனத்தின் இந்திய வர்த்தகத்திற்கு ஈடான பங்குகளை ஓலா சுமார் 50 மில்லியன் டாலருக்குக் கைப்பற்றியிருக்கும் என உறுதிப்படுத்தப்படாத தகவல் கிடைத்துள்ளது.
3வது பெரிய நிறுவனம்
இந்தியாவில் உணவு டெலிவரி பிரிவில் இருக்கும் முன்னணி நிறுவனங்களில் புட் பாண்டா 3வது இடத்தில் உள்ளது.
சோமேட்டோ, ஸ்வீக்கி ஆகிய நிறுவனங்களுக்கு அடுத்துப் புட் பாண்டா பெரிய அளவிலான வர்த்தகத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஓலா கேப்
2015ஆம் ஆண்டில் ஓலா நிறுவனம் உணவு டெலிவரி சேவைக்காக ஓலே கேப் என்ற பிரத்தியேக பிரிவைத் துவங்கியது, ஆனால் அது வெற்றிகரமாகத் துவங்கப்படாத நிலையில் உபர் இத்துறையில் முந்திக்கொண்டது.
புட் பாண்டா
இந்நிறுவனத்தின் இந்திய வர்த்தகத்தின் சீஇஓ சவ்ராச் கோச்சார் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நிறுவனத்தை விட்டு வெளியேறிய நிலையில், தற்போது ஓலா நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான பிரானாய் ஜிவ்ராஜ்கா புட் பாண்டா இந்திய வர்த்தகத்தில் இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய முதலீடு
ஓலா நிறுவனம் புட் பாண்டாவின் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும் உபர்ஈட்ஸ், சோமேட்டோ, ஸ்வீக்கி ஆகிய நிறுவனங்களை விடவும் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெரும் வகையில் சேவையை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது
இதற்காகப் புட் பாண்டாவில் 200 மில்லயன் டாலர் வரையிலான முதலீட்டைச் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என ஓலா நிறுவனத்தின் தலைவர் பாவிஷ் அகர்வால் தெரிவித்தார்.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications