கொரோனா லாக் டவுனால் ஏற்பட்ட தொழில் ரீதியான சிக்கல்களைச் சமாளிக்க மத்திய அரசு தன்னால் ஆன அனைத்து காரியங்களையும் செய்து கொண்டு இருக்கிறது.
குறிப்பாக சிறு குறு தொழில்முனைவோர்களான MSME தரப்பினர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க பல திட்டங்களை அறிவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
கடந்த மாதத்தில், மத்திய அரசு அறிவித்த, ஆத்ம நிர்பார் திட்டத்தின் ஒரு பகுதியாக, Guaranteed Emergency Credit Line திட்டத்தைக் கொண்டு வந்தது மத்திய அரசு.
சிறப்புக் கடன் திட்டம்
அது தான் சிறு குறு தொழில்முனைவோர்களுக்கான பிணை இல்லாத 3 லட்சம் கோடி ரூபாய் கடன் திட்டம். இந்த கடனை யார் எல்லாம் வாங்கலாம், எவ்வளவு ரூபாய் வரை வாங்கலாம், வாங்குவதற்கான தகுதி என்ன, இந்த வகையான கடனில் இருக்கும் நன்மைகள் என்ன என்பதை இரண்டு பாகங்களாக இரண்டு கட்டுரையில் எழுதி இருக்கிறோம். MSME-க்கான Guaranteed Emergency Credit Line பாகம் 1!
15,000 கோடி
இந்த Guaranteed Emergency Credit Line திட்டம் வழியாக நிறைய சிறு குறு தொழில்முனைவோர்களுக்கு கடன் கொடுக்கச் சொன்னது மத்திய நிதி அமைச்சகம்.
Guaranteed Emergency Credit Line கடன் திட்டத்தின் கீழ் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, 1.5 லட்சம் MSME வாடிக்கையாளர்களுக்கு 15,000 கோடி ரூபாய் கடனுக்கு அனுமதி கொடுத்து இருக்கிறார்களாம். அந்த 15,000 கோடி ரூபாயில் 8,700 கோடி ரூபாய் பணம் வழங்கப்பட்டு (Disburse) இருக்கிறதாம்.
உதவிகள்
Guaranteed Emergency Credit Line திட்டம் தவிர, சிறு குறு தொழில்முனைவோர்கள் ஏற்கனவே வாங்கி இருக்கும் கடனை மறு சீரமைப்பது, வொர்க்கிங் கேப்பிட்டல் அளவுகளை மறு கணக்கீடு செய்து கொடுப்பது என பல உதவிகளை செய்து கொண்டு இருப்பதாக எஸ்பிஐ சொல்லி இருக்கிறது.
கூட்டங்கள்
அதோடு மத்திய நிதி அமைச்சகத்தின் வழிகாட்டுதல் படி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி, ஒவ்வொரு வட்ட அளவில் MSME-யினருக்காக விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தி, சிறு குறு தொழில்முனைவோர்களுக்கான உதவித் திட்டங்கள் மற்றும் கடன் திட்டங்களைக் குறித்து விளக்கி இருக்கிறார்களாம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications