சர்வதேச பொருளாதாரம், பணவீக்க அச்சம் காரணமாக அமெரிக்கா, ஐரோப்பா, ஆசிய பங்குச்சந்தைகள் மந்தமான வர்த்தக சூழ்நிலையில் இருக்கும் காரணமாக மும்பை பங்குச்சந்தையும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் முதலீட்டாளர்கள் அனைவரும் ஏதாவது ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்காதா என எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் வேளையில் BCL Industries பங்குகள் முதலீட்டாளர்களுக்கு லட்டு மாதிரி கிடைத்துள்ளது.
BCL Industries-ன் நிர்வாக குழு புதன்கிழமை நடத்திய முக்கியமான கூட்டத்தில் வருகிற அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி நிறுவனத்தின் பங்குகளை 1:10 கணக்கில் பிரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ஸ்மால் கேப் பங்குகள் தற்போது 10 ரூபாய் முகமதிப்பு கொண்ட பங்குகளை 1 ரூபாய் மதிப்பிட்டில் 10 ஆக உடைக்க உள்ளது.

இதன் மூலம் இன்று காலையில் BCL Industries பங்குகள் முதலீட்டாளர்களின் முக்கிய டார்கெட் ஆக மாறியது மட்டும் அல்லாமல் அதிகளவிலான முதலீடுகள் இப்பங்குகள் மீது குவிந்துள்ளது. இதன் மூலம் வர்த்தகம் துவங்கிய சில நிமிடத்தில் ஒரு பங்கு விலை 523 ரூபாய் வரையில் உயர்ந்து அசத்தியது.
BCL Industries நிர்வாக குழு புதன்கிழமை நடத்திய கூட்டத்தில் 1:10 கணக்கில் பங்குகளை உடைக்க தேவையான ஒப்புதல்கள் கொடுத்துள்ள நிலையில் அக்டோபர் 27 ஆம் தேதி 10 ரூபாய் முகமதிப்பு கொண்ட பங்குகளை 1 ரூபாய் முக மதிப்பு கொண்ட பங்குகளாக உடைக்க உள்ளது.
2023 ஆம் ஆண்டில் அதிகம் லாபம் கொடுத்த பங்குகள் பட்டியலில் BCL Industries முக்கிய இடத்தில் உள்ளது. இந்த வருடத்தின் துவக்கத்தில் 324 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்ட பங்குகள் தற்போது 517 ரூபாய் வரையில் உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு சுமார் 60 சதவீதம் லாபம் கொடுத்துள்ளது.
இதேபோல் கடந்த 5 வருடத்தில் சுமார் 325 சதவீதம் BCL Industries பங்குகள் உயர்ந்துள்ளது, அதாவது டக்கரான மல்டிபேக்கர் நிறுவனமாக மாறியுள்ளது. இந்த நிலையில் 1:10 ஸ்டாக் ஸ்பிளிட் என்பது முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் போன்றது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications