இந்த உலகில் எதுவும் நிலையில்லை. போட்டி நிறைந்த இன்றைய டிஜிட்டல் உலகில் பெரிய நிறுவனங்களில் பணிபுரியும் தலைமை நிர்வாக அதிகாரிகள் முதல் சாதாரண பணியாளர் வரை அவர்களின் பதவி எப்போது காலியாகும் என்று அவர்களுக்கே தெரியாது. குறிப்பாக சி.இ.ஓ.க்கள் பதவிகள் உலகளவில் மற்ற பணியாளர் நியமனங்களை விட அதிக நிலையற்றதாக இருக்கிறது.
அவுட்பிளேஸ்மென்ட் நிறுவமான சேலஞ்சர், கிரே அண்ட் கிறிஸ்துமஸ் அறிக்கையின்படி இந்த ஆண்டில் சுமார் 1,425 சி.இ.ஓ.க்கள் தங்கள் பதவியில் இருந்து விலகியுள்ளனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 49 சதவீதம் அதிகமாகும். 2022ல் 969 சி.இ.ஓ.க்கள் மட்டுமே வேலையை ராஜினாமா செய்து இருந்தனர். பல்வேறு சூழ்நிலைகளில் அவர்கள் தங்கள் பதவியிலிருந்து விலகியுள்ளனர்.

கார்ப்பரேட் நிறுவன உலகில் இதுவரையிலான காலத்தில், சி.இ.ஓ.க்கள் பதவி விலகல் சம்பவங்களில் அதிக வியப்பை மற்றும் அதிகம் பேசப்பட்ட நபர்களை பற்றி பார்ப்போம்.
சாம் ஆல்ட்மேன்: ஓபன் ஏ.ஐ. நிறுவனத்தின் சி.இ.ஓ. மற்றும் சாட்ஜி.டி.பி.-ன் சாம் ஆல்ட்மேன் அண்மையில் பணியில் இருந்து நீக்கப்பட்டார். நிறுவனத்தை தொடர்ந்து வழிநடத்தும் அவரது திறன் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று கூறி அவரை ஓபன் ஏ.ஐ. நிறுவனம் நீக்கியது. மேலும் உடனடியாக இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரியாக மிரா முராட்டியை நியமனம் செய்தது.
ஸ்டீவ் ஜாப்ஸ்: ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ், அவர் உருவாக்கிய நிறுவனத்தில் இருந்தே நீக்கப்பட்டார். அப்போது ஆப்பிள் நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக இருந்த ஜான் ஸ்கல்லி உடனான அதிகாரப் போராட்டத்தின் விளைவாக ஸ்டீவ் ஜாப்ஸ் வெளியேற்றப்பட்டார். ஆப்பிள் இயக்குனர்கள் குழு ஜான் ஸ்கல்லியுடன் இணைந்து ஸ்டீவ் ஜாப்ஸை நீக்கியது. இது அவருக்கு பெரிய மனவேதனையை ஏற்படுத்தியது.
பனீஷ் மூர்த்தி: ஐ.டி. நிறுவனமான ஐகேட் நிறுவனத்தின தலைவர் மற்றும் சி.இ.ஓ.வான பனீஷ் மூர்த்தி பாலியல் புகார் காரணமாக வேலையை இழந்தார். அராசெலி ரோயிஸ் என்ற பெண் ஊழியர் அவர் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் கொடுத்தார். விசாரணையில் பனீஷ் மூர்த்தி குற்றவாளி என தெரியவந்ததால் சி.இ.ஓ. பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதற்கு முன்பு இன்போசிஸில் வேலை பார்த்த போதும் இதே போன்ற குற்றச்சாட்டை அவர் எதிர்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கரோல் பார்ட்ஸ்: 2011ல் யாஹூவின் சி.இ.ஓ. பதவியில் இருந்து கரோல் பார்ட்ஸ் நீக்கப்பட்டார். இவர் நீக்கப்பட்டதற்கான காரணம் சரியாக தெரியவில்லை. இருப்பினும், கரோல் பார்ட்ஸ், யாஹூ பணியாளர்களுக்கு அனுப்பிய இமெயிலில், அந்நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு தலைவர் தொலைப்பேசி வாயிலாக நீக்கினார் என்று தெரிவித்து இருந்தார்.
பராக் அகர்வால்: எலான் மஸ்க் டிவிட்டரை வாங்கிய சில நிமிடங்களில் அந்நிறுவனத்தின் நிர்வாகிகளை அதிரடியாக நீக்கினார். அப்போது டிவிட்டர் சி.இ.ஓ.வாக இருந்த பராக் அகர்வால் தான் முதலில் நிறுவனத்தை விட்டு வெளியேறினார். 2012 நவம்பரில் தான் டிவிட்டர் நிறுவன சி.இ.ஓ. பொறுப்பேற்று இருந்தார்.
ஜாக் டோர்சி: 2006ல் டிவிட்டர் நிறுவனத்தை தொடங்கிய நிறுவனர்களில் ஒருவர் ஜாக் டோர்சி. ஆனால் 2008ம் ஆண்டில் அவரது பணி அணுகுமுறை காரணமாக இயக்குனர்கள் குழுவால் நீக்கப்பட்டார். வேலை நேரத்தை ஓவியம் வரைவதற்கும், தைப்பதற்கும் செலவிட்டதாக ஜாக் மீது குற்றம் சாட்டப்பட்டது.
மார்க் ஹர்ட்: 2010 ஆகஸ்ட் மாதத்தில் எச்.பி. நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக இருந்த மார்க் ஹர்ட் மீது வெளி ஒப்பந்ததாரர் ஜோடி .பிஷர் பாலியல் துன்புறுத்தல் குற்றம் சாட்டினார். இதனையடுத்து அவரை பதவியில் இருந்து விலகும்படி நிறுவனம் கேட்டுக் கொண்டது. அதேசமயம் எச்.பி. நிறுவனம் நடத்திய விசாரணையில் மார்க் ஹர்ட் மீதான குற்றச்சாட்டை தள்ளுபடி செய்தது ஆனால் அவர் போலி செலவு கணக்குகளை சமர்பித்ததை நிறுவனம் கண்டுபிடித்தது.
கிரிஷ் பரஞ்பே மற்றும் சுரேஷ் வாஸ்வானி: விப்ரோவின் இணை சி.இ.ஓ.க்களாக இருந்த கிரிஷ் பரஞ்பே மற்றும் சுரேஷ் வாஸ்வானி, 2011 ஜனவரியில் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். 2010-11ம் நிதியாண்டின் 3வது காலாண்டில் நிறுவனம் ஆய்வாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியதால் இருவரும் வேலையிலிருந்து வெளியேறினர்.
ஸ்டீபன் எலோப்: நோக்கியா நிறுவனத்தில் சேருவதற்காக மைக்ரோசாப்ட் நிறுவனத்தை விட்டு விலகினார். மைக்ரோ சாப்ட் சத்யா நாதெள்ளா ஊழியர்களுக்கு அனுப்பிய மெயிலில், மைக்ரோ சாப்ட் நிறுவனத்தில் இருந்து அவர் ஓய்வு பெற இதுவே சரியான தருணம் என்று ஸ்டீபனும் நானும் முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்து இருந்தார்.
ஜியான்பிரான்கோ லான்சி: 2008ல் தைவானை சேர்ந்த கணினி நிறுவனமான ஏசரின் சி.இ.ஓ.வாக ஜியான்பிரான்கோ லான்சி பொறுப்பேற்றார். இந்நிலையில், இயக்குனர்கள் குழுவுடனான கருத்து வேறுபாடு காரணமாக 2011 ஜனவரியில் இந்த பொறுப்பிலிருந்து விலகினார்.
அங்கிடி போஸ்: பேஷன் நிறுவனமான ஜிலிங்கோவின இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ. அங்கிடி போஸ், நிதி முறைகேடுகள் காரணமாக 2022ல் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.
பீட்டர் சௌ: எச்.டி.சி. நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக சுமார் பத்து ஆண்டுகள் பணியாற்றி வந்த நிலையில் திடீரென அந்த பதவியில் பீட்டர் சௌ நீக்கப்பட்டார். நிறுவனததின் ஸ்மார்ட்போன்கள் வாங்குபவர்களுடன் தொடர்பு கொள்ள தவறியது மற்றும் எதிர்மறையான கருத்துக்களை பெற்றதால் நிறுவனம் அவரை நீக்கியது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications