வங்கிகளில் கணக்கு தொடங்க வேண்டும் என்றால் மாதம் குறைந்தபட்ச பேலன்ஸ் என்பதை பராமரிக்க வேண்டும். இதனால் கிராமப்புறங்களை சேர்ந்த மற்றும் குறைந்த வருமானம் கொண்ட கோடிக்கணக்கான மக்கள் தங்களுக்கு என சொந்தமாக வங்கி கணக்கு இல்லாமல் தான் இருந்தனர்.
கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அனைவருக்கும் வங்கி கணக்கு என்ற இலக்கின் ஒரு பகுதியாக ஜீரோ பேலன்ஸ் கொண்ட பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா திட்டத்தை கொண்டு வந்தார். இதன் மூலம் மக்கள் பொது துறை வங்கிகளில் ஜீரோ பேலனஸ் அக்கவுண்ட்களை தொடங்க முடிந்தது. வங்கி சேவை நாடு முழுவதும் விரிவடைந்தது.

அரசின் பண பலன்களை மக்கள் நேரடியாக வங்கி கணக்கிலேயே பெறுவதற்கு ஜன் தன் கணக்கு பெரிய உதவியாக இருந்தன. இந்த திட்டம் தொடங்கப்பட்டு 11 ஆண்டுகள் முடிந்துள்ளன. நாடு முழுவதும் தற்போது 56 கோடி ஜன்தன் கணக்குகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் சுமார் 13 கோடி ஜன்தன் கணக்குகள் அதாவது 23 சதவீத ஜன் தன் கணக்குகள் செயல்படாமல் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே அரசு பொதுத்துறை வங்கிகளில் செயல்படாமல் இருந்த 15 லட்சம் ஜன்தன் கணக்குகளை நீக்கி இருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் நடைமுறைப்படி ஒரு குறிப்பிட்ட வங்கி கணக்கில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக எந்த ஒரு பரிவர்த்தனையும் நடக்கப்படவில்லை என்றால் அதனை செயல்படாத வங்கிக் கணக்காக அறிவிப்பார்கள் . அப்படி செயல்படாமல் இருந்த வங்கி கணக்குகளை தான் தற்போது நீக்கி இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 1, 77, 69,122 ஜன் தன் வங்கி கணக்குகள் உள்ளன. இதில் 39, 25,000 கணக்குகள் செயல்படாத கணக்குகளாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன. மத்திய அரசு வெளியிட்டிருக்கும் தகவலின் படி பார்த்தால் இந்தியாவிலேயே அதிகபட்சமாக தெலுங்கானா மாநிலத்தில் மூன்றில் ஒரு ஜன்தன் கணக்கு செயல்படாத கணக்காக வரையறை செய்யப்பட்டு இருக்கிறது . இந்தியாவிலேயே அதிகபட்சமாக உத்தரபிரதேச மாநிலத்தில் 10 கோடிக்கும் அதிகமான ஜன் தன் கணக்குகள் இருக்கின்றன. அடுத்ததாக பிஹாரில் 6.5 கோடி, மேற்கு வங்கத்தில் 5.4 கோடி, மத்திய பிரதேசத்தில் 4.6 கோடி ராஜஸ்தானில் 3.7 கோடி என ஜன் தன் கணக்குகள் இருக்கின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரை தொழிற்சாலைகள் நிறைந்த தமிழ்நாடு, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் ஜன் தன் கணக்குகளை வைத்திருப்பவர்கள் மற்றும் சரியாக பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை என்பது குறைவாக தான் இருக்கிறது. அதே வேளையில் அதிக கிராமங்கள் நிறைந்த மலைப்பிரதேசங்கள் நிறைந்த மாநிலங்களில் அதிகமானவர்கள் ஜன் தன் கணக்குகளை பராமரித்து வருகின்றனர்.
அசாம் மாநில மக்கள் தொகையில் 69 சதவீத மக்கள் ஜன் தன் கணக்கு வைத்திருக்கிறார்கள். இதுவே தமிழ்நாட்டு மக்கள் தொகையில் 23 சதவீதம் பேர் தான் ஜன தன் கணக்கு வைத்துள்ளனர். இவர்களிலும் கிராமப்புற மக்கள் தான் அதிக எண்ணிக்கையில் ஜன் தன் கணக்கை பயன்படுத்துகிறார்கள். உதாரணமாக ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள 91 சதவீத ஜன் தன் கணக்குகள் கிராமப்புற மக்களால் பயன்படுத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள 52 சதவீத ஜன் தன் கணக்குகள் கிராம மக்களால் பயன்படுத்தப்படுகின்றன.
இந்திய ரிசர்வ் வங்கி ஜன் தன் கணக்குகளை வைத்திருப்பவர்கள் கேஒய்சி அப்டேட் செய்து கொண்டால் மட்டுமே கணக்கினை தொடர்ந்து பயன்படுத்த முடியும் என பல மாதங்களாக அறிவித்து வருகிறது. இதற்காக வங்கிகளிலேயே முகாம்கள் கூட நடத்தப்படுகின்றன. இருந்தாலும் மக்கள் வெளியூர்களுக்கு இடம்பெயர்வது, வேலை நிமித்தமாக சென்று பல வங்கிகளில் ஜன் தன் கணக்கு தொடங்கி இருப்பது ஆகியவையும் அதிக எண்ணிக்கையில் இந்த வகை கணக்குகள் செயல்படாமல் இருக்க காரணமாகும்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications