10 கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்.. சந்தையை தீர்மானிக்க போகும் காரணிகள்..!

கடந்த வாரத்தில் இந்திய சந்தைகள் சற்றே ஏற்றம் கண்ட நிலையில்,இது வரும் வாரத்தில் தொடருமா? எப்படியிருக்கும். கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.

தற்போது பல்வேறு சர்வதேச நாடுகளிலும் ஓமிக்ரான் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், சந்தையிலும் இதன் தாக்கம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் வாரத்தில் எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி என்பதால் சந்தையில் இதன் தாக்கமும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓமிக்ரான் அச்சம்

ஓமிக்ரான் அச்சம்

வரும் வாரத்தில் சர்வதேச காராணிகள் பலவும், கிறிஸ்துமஸ் விடுமுறை, புத்தாண்டு விடுமுறை என பல காரணிகளும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக இந்தியாவில் தற்போது நாளுக்கு நாள் ஓமிக்ரான் அச்சம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது இனி வரும் வாரங்களிலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால் பொருளாதாரம் என்னவாகுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இது மேற்கோண்டு சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டுப்பாடுகள்

கட்டுப்பாடுகள்

குறிப்பாக மத்தியப் பிரதேசம், ஹரியானா, குஜராத், உத்தரபிரதேசம், மகராஷ்டிரா உள்ளிட்ட பல பகுதிகளிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது இனியும் அதிகரிக்கப்படலாமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. எனினும் தற்போது தடுப்பூசி விகிதம் அதிகரித்து வரும் நிலையில், இது மேற்கொண்டு அதிகரிக்கலாம்.

ஐபிஓ

ஐபிஓ

வரும் வாரத்தில் 3 நிறுவனங்கள் தங்களது பங்குகளை வெளியிடவுள்ளன. Adhesives and sealants company HP Adhesives நிறுவனங்கள் டிசம்பர் 27 அன்று பங்குகளை வெளியிடவுள்ளன. இதன் வெளியீட்டு விலை ஒரு பங்குக்கு 274 ரூபாயாகும்.

இதே பார்மா துறையை சேர்ந்த சுப்ரியா லைஃப்சயின்ஸ் நிறுவனம் டிசம்பர் 28 அன்று பங்கினை வெளியிடவுள்ளன. இதன் பங்கு விலை ஒரு பங்குக்கு 274 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சிஎம்எஸ் இன்ஃபோஸ் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் பங்கானது டிசம்பர் 31 அன்று வெளியிடவுள்ளது.

எஃப்ஐஐ

எஃப்ஐஐ

தொடர்ந்து கடந்த சில அமர்வுகளாக அன்னிய முதலீட்டின் வெளியீட்டு விகிதமானது தொடர்ந்து இருந்தாலும், இது இன்னும் முந்தைய வாரங்களுடன் ஒப்பிடும்போதும் குறைந்துள்ளது. எனினும் தொடர்ந்து உள் நாட்டு முதலீடுகள் அதிகரித்து வருகின்றது. இது பெரியளவிலான சரிவினை தடுத்துள்ளது எனலாம். டிசம்பர் 24வுடன் முடிவடைந்த வாரத்தில் 6,589 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் வெளியேறியுள்ளது. இதே இதுவரையில் டிசம்பர் மாதத்தில் மொத்தம் 33,276 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் வெளியேறியுள்ளன. ஆக இது வரும் வாரத்திலும் இந்த போக்கு சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாகன விற்பனை

வாகன விற்பனை

வரும் வாரத்தில் சந்தையில் வாகன விற்பனை குறித்தான தரவுகள் வரும் வாரத்தில் சந்தையில் எதிரொலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு மாத்தின் தொடக்கத்திலும் வாகன நிறுவனங்கள் விற்பனை விகிதத்தினை வெளியிடுகின்றன. இதன் காரணமாக டாடா மோட்டார்ஸ், டிவிஎஸ் மோட்டார்ஸ், அசோக் லேலண்ட், ஹீரோமோட்டோ கார்ப், பஜாஜ் ஆட்டோ, மஹிந்திரா & மஹிந்திரா, ஈச்சர் மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் கவனிக்கப்பட வேண்டிய பங்குகளாக உள்ளன.

பொருளாதார தரவுகள்

பொருளாதார தரவுகள்

நடப்பு கணக்கு பற்றாக்குறை, உள்கட்டமைப்பு துறை குறித்தான தரவுகள் வரும் வாரத்தில் வெளியாகவுள்ளன. இது தவிர வங்கி டெபாசிட் விகிதங்கள், கடன் வளர்ச்சி குறித்தான தரவுகள், அன்னிய செலாவணி கையிருப்பு உள்ளிட்ட பலவும் கவனிக்க வேண்டிய தரவாக உள்ளக்து.

டெக்னிக்கல் பேட்டர்ன்

டெக்னிக்கல் பேட்டர்ன்

கடந்த வாரத்தின் இறுதியில் சந்தை செல்லிங் பேட்டர்னுக்கு பார்ம் ஆகியுள்ள நிலையில், வரும் வாரத்தின் தொடக்கத்தில் எப்படியிருக்கும் என்பது தொடக்கத்தினை பொறுத்து இருக்கலாம். இதற்கிடையில் வரும் வாரத்தில் ரெசிஸ்டன்ஸ் லெவல் 17,150 - 17,200 என்ற லெவலில் இருக்கலாம்.இதே சப்போர்ட் லெவலாக 16,700 - 16,650 என்ற லெவலில் இருக்கலாம்.

எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி

எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி

வரும் வாரத்தில் வியாழக்கிழமையன்று எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி என்பதால் சந்தையில் அதன் தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேளை சந்தையானது ஏற்றத்தில் இருந்தால், முதலீட்டாளர்கள் உச்சத்தில் விற்பனை செய்ய தொடங்கலாம். இது அடுத்த மாத கான்ட்ராக்டில் ரோல் ஓவர் செய்யலாம். இதனால் சந்தையில் பெரியளவிலான ஏற்ற இறக்கத்தினை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் சில கவனிக்க வேண்டியவை

இன்னும் சில கவனிக்க வேண்டியவை

இது தவிர வரும் வாரத்தில் இந்தியா சந்தையில் ஏற்ற இறக்கத்தினை குறிக்கும் VIX குறியீடு, கார்ப்பரேட் நடவடிக்கைகள், சர்வதேச காராணிகள் என பலவும் கவனிக்க வேண்டியவையாக உள்ளன. குறிப்பாக வேலையின்மை குறித்தான தரவுகள், வீடு விற்பனை குறித்தான தரவுகள், சில்லறை விற்பனை குறித்தான தரவுகள் என பலவும் கவனிக்க வேண்டியவையாக உள்ளன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+